கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 கேஷ்பேக்.!
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம்.
தற்சமயம் கூகுள் பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.10,000வரை கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது, இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் வலைதளம் மற்றும் சில ஆன்லைன் ஸ்டோர்களில் மட்டுமே இந்த கேஷ்பேக் ஆஃபர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வரும் மார்ச் 31-ம் தேதி வரை இந்த கேஷ்பேக் ஆஃபர் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டி பேங்க் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பிக்சல் 2 மற்றும் பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் மாடல்கள் வாங்கினால் இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும் மேலும் கூகுள் பிக்சல் 2 மாடலின் உண்மை விலை (64ஜிபி) ரூ.52,999-ஆக உள்ளது, அதன்பின்பு (128ஜிபி) ரூ.61,999-ஆக உள்ளது. பிக்சல் 2எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை 64ஜிபி மற்றும் 128ஜிபி முறையே ரூ.61,999 மற்றும் ரூ.70,999-ஆக உள்ளது. தற்சமயம் உண்மை விலையில் இருந்து ரூ.10,000-வரை கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் அமோல்ட் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 2.5டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1920-1080)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 2700எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. இக்கருவி பொதுவாக 12.2எம்பி ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ-ஃபோகஸ், மற்றும் இஐஎஸ் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளம் மற்றும் வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஓஎல்இடி க்யுஎச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் 3டிகார்னிங் கொரில்லா கண்ணாடி 5 இவற்றுள் அடக்கம். மேலும் (1440-2880)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 3520எம்ஏஎச் பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. இக்கருவி பொதுவாக 12.2எம்பி ரியர் கேமரா அம்சத்தைக் கொண்டுள்ளது, இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ-ஃபோகஸ், மற்றும் இஐஎஸ் தொழில்நுட்பம் இவற்றுள் அடக்கம்.

கூகுள் பிக்சல் 2 எக்ஸ்எல் ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0ஓரியோ இயங்குதளம் மற்றும் வைபை 802.11, ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications