கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் எதில் முதலிடம் பிடித்துள்ளது தெரியுமா?

By Siva
|

கடந்த சில மாதங்களாகவே குவால்கோம் ஸ்னாப்டிராகன் 836 SoC குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இது சமீபத்தில் வெளியான குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 அம்சத்தின் அடுத்த நிலை என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு குவால்கோம் ஸ்னாப்டிராகன் 836 அம்சத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகவுள்ளது.

கூகுள் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் எதில் முதலிடம் பிடித்துள்ளது தெரியுமா?

குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835 அம்சத்தின் அதே சிபியூ மற்றும் ஜிபியூ கொண்டு குவால்கோம் ஸ்னாப்டிராகன் 836 வெளிவரவுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் இந்த அம்சம் மிகப்பெரிய அளவில் பவர் உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்த புதிய அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனாக சாம்சங் கேலக்ஸி நோட் 8 மாடல் முதல்முதலாக வெளிவரவுள்ளதாக செய்திகள் கசிந்த நிலையில், தற்போது அந்த பெருமையை கூகுள் பிக்சல் 2 மாடல் தட்டிச்செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக முன்னணி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியில் இந்த புதிய குவால்கோம் ஸ்னாப்டிராகன் 836 வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஸ்னாப்டிராகன் 820 மற்றும் அதன் அப்கிரேட் 821 ஆகியவைகள் வெளியாது என்பது தெரிந்ததே. இந்த புதிய குவால்கோம் ஸ்னாப்டிராகன் 836 அம்சத்தை கூகுள் பிக்சல் 2 மாடலை அடுத்து சியாமி மி மிக்ஸ், மி நோட் 3, மிஎஸ் ஆகிய மாடல்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 3T மற்றும் ஒன்பிளஸ் 5 ஆகிய மாடல்களிலும் இதே குவால்கோம் ஸ்னாப்டிராகன் 836 அம்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது

இந்த ஆண்டு இறுதிக்குள் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 836 வெளிவந்து வாடிக்கையாளர்களுக்கு பல அதிசயங்களை நிகழ்த்த உள்ள நிலையில் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 840 மற்றும் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 ஆகிய SoCகளும் வரும் 2018ஆம் ஆண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கேலக்ஸி எஸ்9 மாடலில் மேற்கண்ட இரண்டு SoCகளும் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Google Pixel 2 is likely to be the first device to be powered by the upgraded Qualcomm Snapdragon 836 SoC.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X