பிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்யப்படும் கூகுள் பிக்சல் 2, பிக்சல் XL2 மாடல் போன்கள்

கூகுளின் கூகுள் பிக்சல் 2, பிக்சல் XL2 ஆகிய இரண்டு மாடல்களுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் இந்த போன்கள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படவுள்ளது.

By Siva
|

கூகுள் மற்றும் பிலிப்கார்ட் நிறுவனங்கள் மீண்டும் இணைந்து விரைவில் வெளியாகவுள்ள கூகுள்பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL2 மாடல்களை இந்தியாவில் வெளியிடவுள்ளன. கூகுள்பிக்சல் 2 மற்றும் பிக்சல் XL2 மாடல்கள் பிளிப்கார்ட் இணையதளத்தின் மூலம் மட்டுமே இந்தியாவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட்டில் முன்பதிவு செய்யப்படும் கூகுள் பிக்சல் 2, பிக்சல் XL2

இந்த இரண்டு மாடல்களுக்கான முன்பதிவுகள் அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில் இந்த போன்கள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் டெலிவரி செய்யப்படவுள்ளது. கூகுள் லென்ஸ் மூலம் உலகை புதிய வித்தியாசமான பார்வையில் பார்க்க கூகுள் பிக்சல் வாடிக்கையாளர்கள் தயாராகி வருகின்றனர்

கூகுள் பிக்சல் 2 மாடல் மொபைல் போனின் விலை குறித்து பார்ப்போம் எனில், 64GB போன் விலை ரூ.61000 என்ற விலையிலும், 128GB மோபைல் போன் விலை ரூ.70000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கூகுள் பிக்சல் XL2 மாடலில் 64GB போனின் விலை ரூ.73,000 என்றும், இதே மாடலின் 128GB போனின் விலை ரூ.82,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

மீண்டும் மீண்டும் ஜியோவிடம் மீண்டும் மீண்டும் ஜியோவிடம் "பல்ப்" வாங்கும் ஏர்டெல்.!

மேலும் நிறுவனத்தின் சலுகைகள் போக, பிளிப்கார்ட் நிறுவனமும் இந்த மாடல்களுக்காக சிறப்பு சலுகையை வழங்க முன்வந்துள்ளது. இந்த மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.11.990 மதிப்புள்ள Sennheiser ஹெட்செட் ஒன்று விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி அளிக்கவுள்ளது. மேலும் ஹெச்.டி.எப்.சி வங்கியின் மூலம் தவணை முறையில் இந்த போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8000 கேஷ்பேக் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் பழைய பிக்சல் போன்களை அப்கிரேட் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50% சிறப்பு சலுகையும், ஒருசில குறிப்பிட்ட மாடல் போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5000 தள்ளுபடியும் நிபந்தனைகளின் பேரில் செய்து தரப்படும். மேலும் பிளிப்கார்ட் நிறுவனம் முன்பணம் செலுத்தாமல் மாதம் ரூ.3389 செலுத்தும் வகையிலும் இந்த போனை பெற வசதி செய்து கொடுத்துள்ளது

நவீனப்படுத்தப்பட்ட கேமிரா, நல்ல தரமான வடிவமைப்பு, வாட்டர் ரெசிஸ்டெண்ட் வசதி, கேலக்ஸ் எஸ்8 போலவே பெஸல்ஃப்ரி டிசைன் ஆகிய அம்சங்கள் இந்த கூகுள் பிக்சல் போன்களில் அமைந்துள்ளதால் வாடிக்கையாளர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Google is finally launching the much-anticipated smartphones Pixel 2 and Pixel 2 XL smartphones on November 1 in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X