தலைவன் திமிங்கலம் தானுங்கோ.. அட்வான்ஸ்டு AI.. டெலிஃபோட்டோ கேமரா.. புது Pixel போன்.. எப்போது அறிமுகம்?
கூகுள் (Google) நிறுவனம் அதன் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் அறிமுகத்துடன் அதன் பிக்சல் 9 சீரீஸ்-ஐ முடித்து கொண்டதையும், அடுத்தது பிக்சல் 10 சீரிஸ் (Pixel 10 Series) தான் என்பதையும் உங்களில் பலரும் அறிந்து இருக்கலாம். இதற்கிடையில் பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது அறிமுகமாகும் (Launch Date)? எப்போது முதல் விற்பனைக்கு (Sale Date) வரும்? என்பது குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.
ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெறும் மேட் பை கூகுள் (Made by Google) நிகழ்வில் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 10 சீரிஸை அறிமுகப்படுத்தும் என்றும், ஒரு வாரம் கழித்து, அதாவது ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. வெளியீட்டு தேதி குறித்த தகவல் @MysteryLupin என்கிற லீக்கர் வழியாக கிடைத்த வேகத்தில் ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) ஆனது விற்பனை தேதி குறித்த விவரங்களை பகிர்ந்தது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த ஆண்டு பிக்சல் 9 சீரிஸும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வர அதிக நேரம் எடுத்தன, குறிப்பாக பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Google Pixel 9 Pro Fold) கிட்டத்தட்ட ஒரு மாதமாக விற்பனைக்கு வரவில்லை.
2025 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் மொத்தம் நான்கு பிக்சல் 10 போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான பிக்சல் 10 மாடல் (Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) மற்றும் ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) மாடல். இந்த சீரீஸில் பிக்சல் 10ஏ மாடல் சேர்க்கப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்; ஆனால் அது அறிமுகத்தை காணாது. இருப்பினும் ஆகஸ்ட் 13 நடக்கும் நிகழ்வில் கூகுள் அதன் பிக்சல் வாட்ச் 4 மாடலை அறிவிக்கும் என்பது போல் தெரிகிறது.
இதுவரை பிக்சல் 10 தொடர் பற்றிய ஏராளமான விவரங்கள் லீக் ஆகி உள்ளன. குறிப்பாக பேசிக் பிக்சல் 10 மாடல் ஆனது மூன்று கேமராக்களை பேக் செய்வதன் மூலம், பிக்சல் 10 சீரிஸில் உள்ள மற்றவற்றுடன் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூகுள் நிறுவனம் அதன் லைன்-அப்பில் ஒரு டெலிஃபோட்டோவை கேமராவையும் சேர்க்கலாம்
இருப்பினும் ஃபோல்ட் மற்றும் ப்ரோ மாடல்கள், கடந்த ஆண்டை போலவே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கேமரா வன்பொருள் மற்றும் வடிவமைப்புகளுடன், மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் (Advanced AI Features), மேம்படுத்தப்பட்ட டென்சர் ஜி5 சிப்செட்டை (Tensor G5 Chipset) பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூகுள் பிக்சல் வாட்ச் 4 (Google Pixel Watch 4) மாடலை பொறுத்தவரை, லீக் ஆன ரெண்டர்களின் வழியாக இது முந்தைய ஜெனெரஷன் மாடல்களை விட தடிமனாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது. அதாவது இதில் பெரிய பேட்டரி இருக்கலாம். மேலும் கூகுள் நிறுவனம் அதன் வாட்ச்சின் சார்ஜிங் தொழில்நுட்பத்தையும் மாற்றியமைத்துள்ளது. மேலும் இரண்டு "மர்மமான" புதிய பட்டன்களையும் சேர்த்துள்ளது. அவைகளில் ஒன்று கூகுளின் ஜெமினி ஏஐ அசிஸ்டென்ட் ஆக இருக்கலாம்.
கூகுள் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சரியான விலை விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் முந்தைய மாடல்களை கருத்தில் கொண்டால், கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ரூ.70,000 என்கிற பட்ஜெட்டில் தொடங்கலாம். அதே நேரத்தில் ப்ரோ மாடல்கள் ரூ.1,00,000 என்கிற விலையை தாண்டலாம். கூகுள் வழக்கமாக அக்டோபர் மாதத்தில் தான் அதன் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. எனவே 2025 ஆம் ஆண்டும் அதே நேரத்தில் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications