சிக்கியது Google.. மானம் போச்சு மரியாதை போச்சு.. டிஸ்பிளே முழுக்க ரெட், க்ரீன், ப்ளூ கோடுகள்.. எந்த போனில்?
ஒரே அசிங்கமா போச்சு குமாரு என்றுகூறி கூகுள் (Google) கதறும்படியான ஒரு சம்பவம் நடந்து உள்ளது. அதுவும் இன்னும் சில நாட்களில் கூகுளின் முக்கிய போட்டியாளர் ஆன ஆப்பிள் அதன் புதிய ஐபோன் 17 சீரிஸ் (iPhone 17 Series) அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், கூகுள் நிறுவனத்தின் மீது இப்படி ஒரு புகார் எழுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை!
என்ன புகார்? கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உலகளவில் அறிமுகமான பிக்சல் 10 சீரிஸ் (Pixel 10 Series) ஸ்மார்ட்போன் ஒன்று டிஸ்பிளே சிக்கல் குறித்த புகார்களில் சிக்கியுள்ளது. அது கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro) மாடல் ஆகும். இந்த மாடலை வாங்கிய சில வாடிக்கையாளர்கள், தங்கள் ஸ்மார்ட்போன்களில் விசித்திரமான வண்ணங்களில் கோடுகள் தெரிவதாக புகார்கள் அளித்துள்ளனர்.

இதுகுறித்த புகார் ஒன்றில், பாதிப்புக்குள்ளான பிக்சல் 10 ப்ரோ பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் சிவப்பு, பச்சை மற்றும் நீல நிற கோடுகள் ஆனது டிஸ்பிளே முழுவதும் ஒளிர்வதை காண முடிகிறது என்றும், ஒருகட்டத்தில் இந்த கோடுகள் - ஸ்மார்ட்போனை பயன்படுத்த சாத்தியமற்றதாக மாற்றிவிடுகின்றன என்றும் புகார்கள் எழுந்துள்ளன.
முதலில் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே மீதான இந்த புகார்கள் ரெடிட் (Reddit) போன்ற சமூக ஊடக தளங்களில் தோன்றின, பின்னர் ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியிலும் (Android Authority) எதிரொலித்தது. சில பயனர்கள் தங்கள் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் லாக் மற்றும் அன்லாக் செய்த பின்னர் இந்த கோளாறு நீங்குவதாக குறிப்பிடுகின்றனர், ஆனால் மற்றவர்களுக்கு இந்த சிக்கல் மீண்டும் மீண்டும்எழுந்துள்ளது
இந்த சிக்கல் வன்பொருளில் இருந்து வந்ததா - அதாவது பேனல், கிராபிக்ஸ் சிப் அல்லது மதர்போர்டு போன்றவைகளில் இருந்து வந்ததா அல்லது கூகுள் வழியாக வரும் அப்டேட் மூலம் சரியாகக்கூடிய சிறிய மென்பொருள் பிழையா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சிக்கல் குறித்து கூகுள் இன்னும் எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை!
மேலும் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஓனர்கள் - ஒரு செக்யூரிட்டி பேட்ச்சிற்காக காத்திருக்க வேண்டுமா அல்லது ரீப்ளேஸ்மென்ட்டிற்காக ரீடெயில் விற்பனையாளர்களை அணுக வேண்டுமா என்பது குறித்தும் உறுதியாக தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பயனர்களின் நம்பிக்கை நழுவாமல் இருக்க கூகுள் மிகவும் வேகமாக செயல்பட வேண்டும்!
கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: கூகுள் பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இது ஜேட், மூன்ஸ்டோன், போர்சலைன் மற்றும் அப்சிடியன் ஆகிய 4 கலர் ஆப்ஷன்களில் ரூ.1,09,999 க்கு வாங்க கிடைக்கிறது
வெண்ணிலா வேரியண்ட் ஆன கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் ககலர்களில் வாங்க கிடைக்கிறது. இதேபோல பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.1,24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஜேட், மூன்ஸ்டோன் மற்றும் அப்சிடியன் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.
கடைசியாக உள்ள கூகுளின் 2025 போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் 10 ப்ரோ போல்ட் மாடல் ஆனது, சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் ரூ.1,72,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது மூன்ஸ்டோன் மற்றும் ஜேட் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். பிக்சல் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் சில பயனர்கள் கண்டறிந்துள்ள டிஸ்பிளே சிக்கல் ஆனது பிக்சல் 10 சீரீஸின் மற்ற மாடல்களிலும் இருப்பதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








