இன்றுதான் கடைசி- முடிவுக்கு வருகிறது கூகுள் இந்த இலவச சேவை: இனி கட்டணம் கட்டாயம்!

|

கூகுள் போட்டோஸ் இலவச வரம்பற்ற சேமிப்பிடம் என்பது கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் உயர் தெளிவுத்திறன் மற்றும் எக்ஸ்பிரஸ் தீர்மானம் என்ற சேவையின் கீழ் படங்களை வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிப்பதற்கான பயன்படுத்தப்படும் சேவையாகும். இந்த சேவை இத்தனை நாட்களாக இலவசமாக வழங்கி வந்த நிலையில் இன்றுடன் இந்த இலவச சேவை முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரம்பற்ற இலவச சேமிப்பு

வரம்பற்ற இலவச சேமிப்பு

கூகுள் போட்டோஸ் அதன் வரம்பற்ற இலவச சேமிப்புக் கொள்கையை ஜூன் 1 (இன்று)முதல் முடிவுக்கு வருகிறது. இந்த கொள்கை மாற்றம் கடந்தாண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. உங்கள் ஸ்மார்ட்போனில் அனைத்து பயன்பாட்டையும் கூகுள் போட்டோஸ் சேவையில் சேமித்து வைத்திருந்தால் தற்போது அந்த சேமிப்பிடத்தை சோதித்து பார்க்கும் சமயமாகும். கொள்கை மாற்றத்தின் மூலம் குறிப்பிட்ட சேமிப்பகத்தை தாண்டும் போது இனி பணம் செலுத் வேண்டும் என கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் புகைப்படங்கள்

கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் புகைப்படங்கள்

கூகுள் 15 ஜிபி இலவச சேமிப்பு இடத்தை வழங்குகிறது. இந்த சேமிப்பிடம் ஜிமெயில், கூகுள் டிரைவ் மற்றும் கூகுள் புகைப்படங்கள் என முழுவதுமாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர் அல்லது எக்ஸ்பிரஸ் தெளிவுத்திறனில் உள்ள புகைப்படங்கள் இலவச சேமிப்பகத்தை இதில் கணக்கில் கொள்ளவில்லை. எனவே பெரும்பாலானோர் சேமிப்பிடம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. ஜூன் 1முதல் இந்த புகைப்படங்கள் 15 ஜிபி இலவச ஒதுக்கீட்டை நோக்கி வழங்கப்படும் என கூறப்படுகிறது. கூடுதல் தேவை இருந்தால் கூடுதலாக சேமிப்பிடத்தை வாங்க வேண்டியிருக்கும்.

கூகுள் போட்டோஸ் ரீசார்ஜ் விவரங்கள்

கூகுள் போட்டோஸ் ரீசார்ஜ் விவரங்கள்

கூகுள் புகைப்படங்கள் சேமிப்பிடத்தை வாங்க அடிப்படை திட்டமாக 100 ஜிபியில் இருந்து தொடங்குகிறது. இது மாதத்திற்கு ரூ.130 அல்லது ஆண்டுக்கு ரூ.1300 வரை செலுத்த வேண்டியிருக்கும். 200 ஜிபி திட்டம் தேர்ந்தெடுக்கும் போது மாதத்திற்கு ரூ.210 முதல் தொடங்குகிறது. மற்ற திட்டங்கள் குறித்து பார்க்கையில் ரூ.650 அல்லது வருடத்திற்கு ரூ.6500 வரை செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல் 10 டிபி திட்டத்திற்கு மாதத்திற்கு ரூ.3250, 20 டிபி திட்டத்திற்கு மாதத்திற்கு ரூ.6500, 30 டிபி திட்டத்திற்கு மாதத்திற்கு ரூ.9750 என செலுத்த வேண்டியிருக்கும்.

புதுவித தொழில்நுட்பம்

புதுவித தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் கேமராக்களில் தொடர்ந்து புதுவித தொழில்நுட்பம் வழங்கப்படும் நிலையில், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மொபைலில் மெமரி மிகப்பெரும் பிரச்சனையாகி வருகிறது. ஸ்மார்ட்போன் கேமராக்கள் அதிக ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்குவதால், மெமரி மிக விரைவில் தீர்ந்து போகிறது. இதேபோன்று வீடியோக்களும் அதிக தரமுள்ளதாக 4K, ஃபுல் ஹெச்.டி. தரத்தில் படமாக்கும் போது ஸ்மார்ட்போன் மெமரி சீக்கிரம் தீர்ந்து போகிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய கிளவுட் ஸ்டோரேஜ் பயன்பாடு சிறப்பான தீர்வாக இருக்கிறது.

கிளவுட் ஸ்டோரேஜ் சேவை

கிளவுட் ஸ்டோரேஜ் சேவை

எனினும், பெரும்பாலான கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளில் குறிப்பிட்ட அளவு மெமரி மட்டுமே வழங்குகின்றன. அதன்பின் கூடுதல் மெமரியை பெற பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதுபோன்ற விதிமுறை மற்றும் நிபந்தனைகளிலும், புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய ஒரு வழிமுறை இருக்கிறது. கூகுள் போட்டோஸ் (Google Photos) இதற்கு சரியான பதிலாக இருக்கிறது. கூகுள் பயனர்களை தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை கிளவுடில் பதிவேற்றம் செய்ய உதவுகிறதரு. கூகுள் போட்டோஸ் சேவையில் ஹை ரெசல்யூஷன் புகைப்படங்கள் அதிகபட்சம் 16 எம்.பி. வரையிலானவற்றை பதிவேற்றம் செய்ய முடியும். எனினும், இவ்வாறு செய்ய அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ் பெற வேண்டியது அவசியாகும். இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

புகைப்படம் மற்றும் வீடியோக்கள்

புகைப்படம் மற்றும் வீடியோக்கள்

முதலில் செய்ய வேண்டியவை: பயனர்கள் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை உயர் ரெசல்யூஷனிற்கு மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. கூகுள் போட்டோஸ் ஆப் தானாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை உயர் ரெசல்யூஷனில் மாற்றிக் கொள்ளும். உயர் ரெசல்யூஷன் புகைப்படங்கள் அதன் தரத்தை எவ்விதத்திலும் பாதிக்காது. எனினும், இவை அதிக மெமரியை ஆக்கிரமித்துக் கொள்ளும்.

அன்லிமிட்டெட் ஸ்டோரேஜ் பெற:

1 - முதலில் பேக்கப் மோட் ஆப்ஷனை தேர்வு செய்து ஹை குவாலிட்டியை க்ளிக் செய்ய வேண்டும்

2 - கூகுள் போட்டோஸ் ஆப் திறக்க வேண்டும்

3 - வலதுபுறம் மேல்பக்கமாக காணப்படும் மூன்று கோடுகள் கொண்ட ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

4 - செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்

5 - இனி பேக் & சின்க் பட்டனை ஆன் செய்ய வேண்டும்

6 - பேக்கப் மோட் ஆன் செய்து ஹை குவாலிட்டியை தேர்வு செய்ய வேண்டும்

7 - இனி பேக்கப் டிவைஸ் ஃபோல்டர்ஸ் ஆப்ஷனில் நீஙகள் அப்லோடு செய்ய வேண்டிய ஃபோல்டர்களை தேர்வு செய்ய வேண்டும்

Best Mobiles in India

English summary
Google Photos Unlimited Storage Ends From June 1: Here the Storage Plan Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X