சுத்தப்படாது: இனிமே இலவசம் இல்ல- கட்டண வசூலை ஆரம்பிக்கும் Google!

|

கூகுள் போட்டோஸ் ஆனது ஸ்மார்ட்போனிலோ அல்லது வேறு கேமரா மூலமாகவோ எடுக்கும் ஹை குவாலிட்டி புகைப்படங்களை சேமிக்க பயன்படுகிறது. கூகுள் போட்டோஸ் பயன்பாடு சேமிப்பு வரம்பை நிர்ணயித்து கட்டண வசூலை அறிவித்துள்ளது.

கூகுள் பயன்பாடு

கூகுள் பயன்பாடு

இணையத்தையும் கூகுளையும் பிரிக்க முடியாத அளவு கூகுள் பயன்பாடு இருந்து வருகிறது. அமெரிக்காவில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேடுப்பொறி தொழில்நுட்பமாக கூகுள் செயல்பட்டு வருகிறது. முழுமையாகப் பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

அனைத்து பயன்பாடுகளுக்கும் கூகுள்

அனைத்து பயன்பாடுகளுக்கும் கூகுள்

ஏதாவது சந்தேகம் என்றாலும் சரி, எதையாவது படித்து அறிந்துக் கொள்ள வேண்டுமானாலும் சரி நமக்கு கைக் கொடுப்பது கூகுள் தான். மனிதனின் இரண்டாவது மூளையாக செயல்பட்டு வருகிறது. அனைத்து பயன்பாடுகளும் கூகுளில் ஆகச் சிறந்த பயன்பாட்டை அடுத்தடுத்த கட்டத்துக்கு எடுத்துக் கொண்டே வருகிறது.

ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ்

ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ்

கூகுள் தேடிபொறி சேவை மட்டுமின்றி ஜிமெயில், கூகுள் டிரைவ், கூகுள் போட்டோஸ் என பல சேவைகளை வழங்குகிறது. அதன்படி 2015 ஆம் ஆண்டு கூகுள் புகைப்படங்கள் தொடங்கப்பட்டது. இந்த சேவை ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது.

கூகுள் போட்டோஸ்

கூகுள் போட்டோஸ்

கூகுள் போட்டோஸ் ஆனது ஸ்மார்ட்போனிலோ அல்லது வேறு கேமரா மூலமாகவோ எடுக்கும் ஹை குவாலிட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமித்து வைக்க பயன்படுகிறது. அதிக எம்பி இருக்கும் புகைப்படங்களை சேமித்து வைக்க பெரிதளவு கூகுள் போட்டோஸ் பயன்படுகிறது.

கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் வரம்பு

கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் வரம்பு

கூகுள் போட்டோஸ் பயன்பாடானது சேமிப்புக்கு எந்தவொரு அளவும் இதுவரை நிர்ணயக்கவில்லை. அதேபோல் சேமித்து வைப்பதற்கு எந்தவொரு கட்டணமும் நிர்ணயிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கூகுள் போட்டோஸ் பயன்பாடு சில வரம்பை நிர்ணயித்து கட்டண வசூல் அறிவித்துள்ளது.

இனி லைவ் கிரிக்கெட் போட்டியை அமேசானில் பார்க்கலாம்: எப்படி தெரியுமா?இனி லைவ் கிரிக்கெட் போட்டியை அமேசானில் பார்க்கலாம்: எப்படி தெரியுமா?

4 டிரில்லியன் போட்டோ, வீடியோக்கள்

4 டிரில்லியன் போட்டோ, வீடியோக்கள்

கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் இதுவரை 4 டிரில்லியன் போட்டோ, வீடியோக்கள் உள்ளது. அதேபோல் ஒரு வாரத்திற்கு சராசரியாக 28 பில்லியன் போட்டோக்கள், வீடியோக்கள் பதிவேற்றப்படுகிறதாம். இந்த சேவையை இதுவரை கூகுள் இலவசமாகவே வழங்கி வருகிறது.

கூகுள் சில கட்டுப்பாடுகள்

கூகுள் சில கட்டுப்பாடுகள்

இந்த சேவை இலவசமாக வழங்குவதன் காரணமாக கூகுள் போட்டோஸ் சேவைக்கு நிறுவனம் பெருந்தொகை செலவிட்டு வருகிறது. இதன்காரணமாக கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது.

15 ஜிபி வரை போட்டோஸ்கள் பேக் அப்

15 ஜிபி வரை போட்டோஸ்கள் பேக் அப்

கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து பார்க்கையில் 15 ஜிபி வரை போட்டோஸ்களை பேக் அப் செய்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. 2021 ஜூன் 1-க்கு பிறகு இந்த கட்டண விதிமுறை செயல்படுத்தப்பட இருக்கிறது.

தேவைக்கு ஏற்ப கட்டணம்

தேவைக்கு ஏற்ப கட்டணம்

ஜூன் 1, 2021-க்கு முன்புவரை போட்டோ, வீடியோக்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதற்குபிறகு போட்டோக்கள் சேமிக்கும்போது தேவைக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும். ஜூன் 1-க்கு பிறகு கூகுள் போட்டோஸ் சேமிப்பு 15 ஜிபியை தாண்டினால் ஜிமெயில் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

புதுப்பிப்பு பயன்பாடு தாக்கம் இருக்காது

புதுப்பிப்பு பயன்பாடு தாக்கம் இருக்காது

கூகுள் இந்த புதிய புதுப்பிப்பு பயன்பாடு பயனர்களுக்கு எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறப்படுகிறது. பயன்பாட்டின் 80 சதவீத பயனர்கள் 15 ஜிபி இலவச பயன்பாட்டை பயன்படுத்தி 3 வருடத்திற்கு சேமிப்புகளை பயன்படுத்த முடியும்.

தேவைக்கேற்ப கட்டணம்

தேவைக்கேற்ப கட்டணம்

கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் 15 ஜிபி வரம்பை தாண்டிய உடன் நிறுவனம் உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு முன்பு பலமுறை அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. கூகுள் போட்டோஸ் பயன்பாட்டில் 100 ஜிபி சேமிப்பு சேவை தேவைப்பட்டால் மாதம் ரூ.130 அல்லது வருடத்திற்கு ரூ.1300 செலுத்த வேண்டும். அதேபோல் தேவைக்கேற்ப கட்டணங்கள் விதிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Google Photos Free Unlimite Storage Going to End: Now Charges is Applicable

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X