Google போட்டோஸ் இருக்கா? போட்டோ டூ வீடியோ.. பிக்ஸ் ரீமிக்ஸ்.. இனிமே நிமிடங்களில் எடிட்.. புது கிரியேட் டேப்!
உங்களது போட்டோவை வீடியோவாக மாற்ற வேண்டுமானாலும் சரி, போட்டோவை ரீமிக்ஸ் செய்ய வேண்டுமானாலும் சரி, ஓரிரு நிமிடங்களில் அதை செய்து கொள்ளும்படியான பீச்சரானது கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆப்-இல் சேர்க்கப்பட்டுள்ளது. கிரியேட் டேப் (Create Tap) மூலம் கிடைக்கும் இந்த பீச்சர்கள் எப்படி வேலை செய்கிறது? இதை எப்படி பயன்படுத்துவது? உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
* போட்டோ டூ வீடியோ (Photo to Video)
* பிக்ஸ் ரீமிக்ஸ் (Pics Remix)
* கிரியேட் டேப் (Create Tap)

போட்டோ டூ வீடியோ:
இந்த பீச்சரானது ஏற்கனவே ஜெமினி வியோ 2 (Gemini Veo 2) மூலம் கிடைத்தது. இப்போது, நேரடியாக கூகுள் போட்டோஸ் ஆப்-இல் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் உங்களது போட்டோவை வீடியோவாக மாற்ற வேண்டுமானால், ஜெமினி ஆப்-ஐ தேடிச் செல்ல வேண்டியது கிடையாது. கூகுள் போட்டோஸ் மூலமே உருவாக்கி கொள்ளலாம்.
ஆனால், 6 நொடிகளுக்கு மட்டுமே போட்டோவை வீடியோவாக மாற்றி கொள்ள முடியும். அதுவே, கூகுள் ஜெமினி மூலம் போட்டோவை வீடியோவாக மாற்றினால், உங்களுக்கு 8 நொடிகளுக்கு வீடியோ கிடைக்கும். ஏனென்றால், இப்போது ஜெமினியில் போட்டோ டூ வீடியோ பீச்சரானது, வியோ 3 மூலம் இயக்கப்படுகிறது. ஆகவே, வேறுபாடுகள் இருக்கும்.
உங்களது போட்டோ கேலரியில் இருக்கும் ஏதாவது ஒரு போட்டோவை தேர்ந்தெடுத்து, அதற்காக ப்ராம்ப்ட்களை கொடுத்தால் போதும். உங்களது போட்டோவானது 6 நொடிகளுக்கான வீடியோவாக ஜெனரேட் செய்து கொடுக்கப்படும். இப்போதைக்கு இந்த பீச்சர் அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் யூசர்களுக்கு கிடைக்கிறது.

பிக்ஸ் ரீமிக்ஸ்:
கூகுள் போட்டோஸ் கேலரியில் இருக்கும் உங்களது போட்டோக்களை ரீமிக்ஸ் செய்து கொள்ள இந்த பீச்சர் கொடுக்கப்படுகிறது. அதாவது, உங்களது ஒரு போட்டோவை அனிமேட்டட், காமிக்ஸ், ஸ்கெட்ச்கள் அல்லது 3டி அனிமேஷன் போல மாற்ற விரும்பினால், இந்த ரீமிக்ஸ் பீச்சரை பயன்படுத்தி அதை செய்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு ஸ்டைல்கள் இருக்கின்றன.
உங்களது போட்டோவை தேர்ந்தெடுத்து அந்த ஸ்டைல்களை கிளிக் செய்து ஜெனரேட் செய்தால் போதும், நிமிடங்களில் அதை செய்து கொள்ளலாம். இந்த ரீமிக்ஸ் பீச்சரும் அமெரிக்காவில் இருக்கும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் யூசர்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருக்கிறது. மற்ற நாடுகளில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரியேட் டேப்:
மேலே பார்த்த போட்டோ டூ வீடியோ, பிக்ஸ் ரீமிக்ஸ் மட்டுமல்லாமல், போட்டோ கோலாஜ்கள் (Photo Collages), ஹைலைட்டெட் வீடியோக்கள் (Highlight Videos) போன்ற பல்வேறு பீச்சர்களையும் இனிமேல் கிரியேட் டேப் மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். இப்போதைக்கு இந்த டேப் ஆப்ஷன் கொண்டுவரப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவில் கொண்டுவரப்பட இருக்கிறது.
இருப்பினும், போட்டோ டூ வீடியோ, பிக்ஸ் ரீமிக்ஸ் மட்டுமல்லாமல், போட்டோ கோலாஜ்கள் போன்ற பீச்சர்கள் நேரடியாக பயன்படுத்த கிடைக்கின்றன. இதையெல்லாம், ஒரே டேப்-இன் கீழ் கொண்டு வருவது மட்டுமே ஆகஸ்ட் மாதத்தில் நடக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் அனைத்தும் ஏஐ மூலம் வேலை செய்ய இருக்கின்றன.
ஆகவே, கூகுள் போட்டோஸ் யூசர்களுக்கு டிரான்ஸ்பரன்சியை உறுதி செய்ய போட்டோ மற்றும் வீடியோக்களை ஜெனரேட் செய்யும்போது உங்களுக்கு சின்த்ஐடி (SynthID) என்னும் டிஜிட்டல் வாட்டர்மார்க் (Digital Watermark) கொடுக்கப்படுகிறது. அதேபோல விசுவல் வாட்டர்மார்க் இருக்கிறது. ஆகவே, உங்களது போட்டோக்கள் எங்கும் பகிரப்படாது. பாதுகாப்பாக ஜெனரேட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








