திடீரென Google Pay பயனர்களுக்கு இலவசமாக வந்த 88,000 ரூபாய்: என்ன காரணம்?
கூகுள் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கூகுள் பே பயனர்களுக்கு இலவசமாக ரூ.88,000 வரை பணம் வந்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது போன்பே செயிலைய விட கூகுள் பே செயலியைத் தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இன்னும் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், மொபைல் பரிவர்த்தனை செயலிகளில் கூகுள் பே முன்னணி செயலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூகுள் பே பயனர்கள் சிலருக்கு சுமார் 1072 டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.88,000) இலவசமாக வந்துள்ளதாகப் பல பயனர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கூகுள் பே செயலியில் கூகுள் நிறுவனம் இப்போது ஒரு புதிய பரிவர்த்தனை சேவையைச் சோதனை செய்து வருவதாகத் தெரிகிறது. எனவே தற்போதைய சூழலில் இந்த பரிவர்த்தனை சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மாறாக கூகுள் ஊழியர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
எனவே இந்த சோதனை ஓட்டத்தின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூகுள் ஊழியர்களுக்குப் பதிலாக சில கூகுள் பே பயனர்களுக்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதனால் பல்வேறு மக்கள் தங்களுக்கு வெவ்வேறு அளவிலான தொகையில் பணம் வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பல்வேறு மக்களுக்குச் சாதாரண அளவிலேயே தொகை செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அதிகபட்சமாக 1072 டாலர் வரை பணம் வந்துள்ளதாகச் சிலர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கூறியது போல் 1072 டாலர் என்பது இந்திய மதிப்பில் ரூ.88,000 ஆகும்.
தற்போது வரை இதுபோல எத்தனை பேருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது என்று தெளிவாகத் தெரியவில்லை. அதேபோல் எவ்வளவு தொகை மொத்தமாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. மேலும் செலுத்தப்பட்ட தொகையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை முயற்சி செய்தபிறகும் பணத்தை மீட்க முடியவில்லை என்றால், பயனர்களே அந்த பணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கூகுள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூகுள் பிக்சல் மொபைல் வைத்திருப்பவர்களுக்குக் கூகுளிடம் இருந்து பணம் வந்துள்ளது.
அதேபோல் சமீபத்தில் மக்களுக்குப் பயனுள்ள வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள். அதாவது ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோஸ்-க்கு எளிதாக ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோ ஷேர் செய்யும் வகையில் Nearby Share desktop ஆப் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம் ஆண்ட்ராய்டு போனில் இருந்து விண்டோஸ்-க்கும், வீண்டோஸ்ஸில் இருந்து ஆண்ட்ராய்டு போனிற்கும் ஃபைல்ஸ், போட்டோஸ், வீடியோ ஷேர் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கூட பலரும் யுஎஸ்பி கேபிள் மூலம் தான் ஃபைல்ஸ், போட்டோ போன்ற அனைத்தையும் ஷேர் செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது கூகுள் கொண்டு வந்துள்ள புதிய வசதி அனைவருக்கும் மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த புதிய வசதியானது தற்போது பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய வசதி அனைத்து பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








