Google Pay வழியாக கடன்.. இந்தியாவில் புது வகை கல்லாப்பெட்டியை திறந்த சுந்தர் பிச்சை!
கூகுள் பே செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதுவும் தற்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த யுபிஐ செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. இதுதவிர மின்சார கட்டணத்தைக் கூட இந்த UPI செயலிகள் மூலம் செலுத்த முடியும்.

அதேபோல் கூகுள் பே செயலியில் சில மாதங்களுக்கு முன்புதான் யுபிஐ லைட் எனும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய சேவை கூகுள் பே செயலியில் கொண்டுவரப்பட இருக்கிறது. அதாவது சிறு வர்த்தகங்கள், நிறுவனங்கள், வணிகங்களுக்கு உதவும் வகையில் கூகுள் பே செயலி மூலம் சாசெட் கடன்களை (sachet loans) அதாவது சிறிய அளவிலான தொகை கொண்ட கடன்களை வழங்க உள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சிறு வணிகர், நிறுவனங்களுக்கு அன்றாட தேவைகளுக்குச் சிறிய தொகைகள் தேவைப்படலாம். இதற்கு வேண்டி வங்கிகளுக்கு சென்று அந்த கடன்களை வாங்க முடியாது. எனவே தான் அவர்களது உடனடி தேவைகளை அதாவது அன்றாட வணிகத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கடன் வசதியைக் கூகுள் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கான கூகுளின் வருடாந்திர கூட்டத்தின் போது, இந்தியாவில் இருக்கும் வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு சாசெட் கடன்களை வழங்குவதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்து. குறிப்பாக இதனைக் கூகுள் பே செயலியில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடன் சேவைகளை வழங்க டிஎம்ஐ ஃபைனான்ஸ் உடன் கூகுள் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.
மேலும் இந்த ளயஉாநவ கடன்கள் என்பது என்னவென்றால், கூகுள் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களுக்கு ரூ.15,000 மதிப்பிலான தொகையை ளயஉாநவ டழயளெ என்ற சிறு கடனாக வழங்கும். பின்பு இந்த கடன் வாங்கியவர்கள் இத்தொகையை வெறும் 111 ரூபாய் என்று சிறு தொகையைக் கூட திருப்பி செலுத்தும் வசதியைக் கூகுள் அளிக்கிறது.
குறிப்பாக இந்த தொகை வணிகர்கள் தங்களுக்குத் தேவையான சரக்குகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் ஆஃப்லைன் வாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கூகுள் கொண்டுவரும் இந்த புதிய சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கூகுள் பே (Google Pay) செயலியில் யுபிஐ பின் (UPI PIN) பதிவிடாமல் ஒரே கிளிக்கில் பணம் செலுத்த முடியும். அதாவது யுபிஐ பின் பதிவிடாமல் ஒரு கிளிக் மூலம் பேமண்ட் செய்யும் புதிய UPI LITE சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது எந்தவொரு யுபிஐ பேமண்ட் ஆக இருந்தாலும் பின் பாஸ்வேர்டு கொடுத்துத் தான் பேமெண்ட் செய்வோம். ஆனால் இனிமேல் பின் பதிவிடாமல் பேமெண்ட் செய்ய முடியும். பேடிஎம் நிறுவனம் யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்தது. இந்த சேவையிலும் பாஸ்வேர்ட் பதிவிடாமல் யார் வேண்டுமானாலும் பேமன்ட் செய்ய முடியும். சமீபத்தில் இதே சேவையை தான் கூகுள் பே அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கூகுள் பே செயலியில் தொடர்ந்து புதிய புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த செயலியில் இருக்கும் புதிய வசதிகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications








