Google Pay செய்த தரமான சம்பவம்.. இனி ரீசார்ஜ் செய்யும் போது கவனமா இருங்க.. ஏன்?
இந்தியாவில் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். அந்த அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. குறிப்பாக யுபிஐ பயன்பாடுகள் மூலம் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது என்பது தான் உண்மை.
அதேபோல் இந்த யுபிஐ செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கியூஆர் கோடு ஸ்கேனர் இல்லாத மளிகைக் கடைகளே இல்லை.

இந்நிலையில் கூகுள் பே (Google Pay) செயலியில் ரீசார்ஜ் செய்யும் போது கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். அதாவது mysmartprice தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, கூகுள் பே மூலம் ரீசார்ஜ் செய்யும் போது 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை convenience fee எனும் கட்டணம் வசூலிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
இப்போது கூகுள் பே Convenience Fee கட்டண விபரங்களைப் பார்க்கலாம். அதாவது 100 ரூபாய் வரை எந்த கட்டணமும் இல்லை. ஆனால் ரூ.100 முதல் ரூ.200 வரை ரீசார்ஜ் செய்தால் ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும். ரூ.201 முதல் ரூ.300 வரை ரூ.2 கட்டணமாக வசூலிக்கப்படும். ரூ.301 மற்றும் அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.3 கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கூகுள் பே நிறுவனம் இந்த Convenience Fee கட்டணத்தை வெறும் மொபைல் ரீசார்ஜ்-க்கு (Mobile Recharges) மட்டுமே வசூலித்து வருகிறது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மற்றபடி நண்பர்களுக்கு அல்லது கடைகளுக்குச் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. அதேசமயம் போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் கூட Platform Fee எனும் பெயரில் கூடுதல் கட்டணம் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூகுள் பே தளத்தில் சமீபத்தில் சாசெட்(Sachet Loan) கடன்/லோன் எனும் புதிய லோன் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது சிறு வர்த்தகங்கள் நிறுவனங்கள், வணிகங்களுக்கு உதவும் வகையில் கூகுள் பே செயலி மூலம் சாசெட் கடன்களை(sachet loans) அதாவது சிறிய அளவிலான தொகை கொண்ட கடன்களை வழங்க உள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறு வணிகர், நிறுவனங்களுக்கு அன்றாட தேவைகளுக்குச் சிறிய தொகைகள் தேவைப்படலாம். இதற்கு வேண்டி வங்கிகளுக்குச் சென்று அந்த கடன்களை வாங்க முடியாது. எனவே தான் அவர்களது உடனடி தேவைகளை அதாவது அன்றாட வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கடன் வசதியைக் கூகுள் இந்தியா அறிமுகம் செய்தது.

இந்தியாவில் உள்ள சிறு வணிகர்களுக்கு ரூ.15,000 மதிப்பிலான தொகையை sachet loans என்ற சிறு கடனாக வழங்கும். கூகுள் பே-இன் இந்த Sachet Loan ஃபெடரல், கோடக் மஹிந்திரா, HDFC வங்கி மற்றும் ICICI ஆகிய நான்கு வங்கிகளுடன் கூகுள் கூட்டுச் சேர்ந்துள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த புதிய சேவையைக் கூகுள் பே நிறுவனம் தற்போது 2 நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த கூகுள் பே செயலியில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதேபோல் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த கூகுள் பே செயலி.


Click it and Unblock the Notifications