Google Pay: இனி பல நாடுகளில் வேலை செய்யாது? ஜூன் 4க்கு பிறகு மக்கள் என்ன செய்வது? தெளிவுதந்த Google நிறுவனம்..
கூகுள் (Google) நிறுவனம் வரும் ஜூன் 4, 2024 ஆம் தேதிக்கு பிறகு பல நாடுகளில் அதன் கூகுள் பே (Googlr Pay) சேவையை நிறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தேதிக்கு பிறகு கூகுள் பே சேவை இயங்காது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க சுமார் 195 நாடுகள் உள்ளது. இதில் 180 நாடுகளுக்கு மேற்பட்ட நாடுகளில் கூகுள் பே சேவை வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்த மூன்று நாட்களில் இந்த நிலைமை அப்படியே தலைகீழாக மாறப்போகிறது. ஆம், கூகுள் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, 180 நாடுகளில் உள்ள பல நாடுகளில் கூகுள் பே சேவையை நிறுவனம் ஜூன் 4ம் தேதிக்கு பிறகு முடக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

ஜூன் 4 முதல் பல நாடுகளில் Google Pay சேவை நிறுத்தப்படும்:
இந்த செய்தி உலகளவில் உள்ள கூகுள் பே சேவை பயனர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் ஆப்ஸ்களில் மிகவும் பிரபலமானது கூகுள் பே ஆப்ஸ் (Google Pay Apps) தான். இந்தப் ஆப்ஸ் பணத்தைப் பரிமாற்றம் செய்வதையும், கட்டணங்களை எளிமையாக செலுத்துவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், ஜூன் 4க்குப் பிறகு பல நாடுகளில் கூகுள் பே செயல்படுவதை நிறுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் தாக்கம்:
QR குறியீடு ஸ்கேனிங் மூலம் எளிதாக பணப் பரிமாற்றம் மற்றும் மொபைல் நம்பர் கொண்டு பணம் செலுத்தும் சேவைகளை Google Pay அனுமதிக்கிறது. Google Pay உடனாக கிடைக்கும் மற்ற டிஜிட்டல் சேவைகளுடன் கூகுள் நிறுவனம் விரைவில் பல நாடுகளில் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
கூகுள் பே பயனர்களை Google Wallet சேவைக்கு மாற்ற வலுக்கட்டாய முயற்சி:
ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு, அமெரிக்காவில் உள்ள பயனர்கள் Google Pay மூலம் பணத்தை அனுப்பவோ பெறவோ முடியாது. அதற்குப் பதிலாக, Google Wallet சேவைக்கு மாறுவதற்கு Google நிறுவனம் அதன் பயனர்களை ஊக்குவிக்கிறது. ஏற்கனவே 180 நாடுகளில் பயன்படுத்தப்படும் புதிய கூகுள் வாலெட் ஆப், பல மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது.

Google Wallet அம்சங்கள்:
சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது, Google Wallet டெபிட், கிரெடிட், லாயல்டி மற்றும் கிஃப்ட் கார்டுகளை சேமிக்கிறது. தொலைந்த அல்லது திருடப்பட்ட சாதனங்களுக்கு PIN பாதுகாப்பு மற்றும் தொலைநிலை முடக்கம் ஆகியவை இதில் அடங்கும். பயனர்கள் மொபைல் எண்கள் அல்லது மின்னஞ்சல் ஐடிகளைப் பயன்படுத்தி பணம் அனுப்பலாம்.
இந்தியா மற்றும் சிங்கப்பூரில் தொடர்ந்து கிடைக்கும்:
ஜூன் 4க்குப் பிறகு இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் Google Pay செயல்படும். Google Wallet ஆப்ஸ் PhonePe, Google Pay மற்றும் Paytm ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. இது தொடர்பு இல்லாத கட்டணங்களை ஆதரிக்கிறது, இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான பல்துறை கருவியாக அமைகிறது.
ஜூன் 4, 2024 ஆம் தேதிக்குப் பிறகு Google Pay நிலை என்ன? எந்த நாடுகளில் சேவை தொடரும்?
அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் கூகுள் பே சேவை தொடர்ந்து பயன்படுத்த கிடைக்கும் என்று கூகுள் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிங்கப்பூர் நாட்டிலும் கூகுள் பே சேவை தொடர்ந்து பயன்படுத்த கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜூன் 4ம் தேதி முதல் பயன்படுத்த கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் அதன் புதிய அம்சங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட பயன்பாட்டுடன், உலகளாவிய பயனர்களுக்கு டிஜிட்டல் கட்டண அனுபவத்தை மேம்படுத்துவதை Google Wallet நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேபோல் விரைவில் மற்ற நாடுகளிலும் கூகுள் பே சேவையை துண்டித்து, நிறுவனம் அதன் பயனர்களை கூகுள் வாலெட் பக்கம் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications