Home
News

ஜூன் 4ஆம் தேதி கடைசி.. Google Pay செயல்படாது.. என்ன காரணம்? இதோ முழு விபரம்..

கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக இந்த செயலிகள் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளன. இந்நிலையில் கூகுள் பே (Google Pay) செயலி ஆனது வரும் ஜூன் 4க்கு பிறகு இயங்காது தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

கூகுள் பே செயலி மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது . அதுவும் நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.

ஜூன் 4ஆம் தேதி  கடைசி.. Google Pay செயல்படாது.. என்ன காரணம்?

குறிப்பாக இந்த கூகுள் பே செயலி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் கூகுள் பே சேவையை ஜூன் 4ம் தேதி முதல் நிறுத்தப் போகிறது கூகுள் நிறுவனம். இதன் பிறகு ஆப் மூலம் பணம் செலுத்த முடியாது.

அதாவது கடந்த 2022-ம் ஆண்டு தான் கூகுள் வாலட்(Google Wallet) அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்பு கூகுள் பே பயனர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஆனாலும் கூகுள் பே செயலியை வரும் ஜூன் 4 -ம் தேதி முதல் நிறுத்த உள்ளது கூகுள் நிறுவனம்.

ஜூன் 4ஆம் தேதி  கடைசி.. Google Pay செயல்படாது.. என்ன காரணம்?

குறிப்பாக இந்த செய்தி வந்தவுடன் அனைத்து பயனர்களும் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இது குறித்து தேடிப்பார்த்தபோது, கூகுள் நிறுவனம் இந்தியாவில் கூகுள் பே சேவையை நிறுத்தப்போவதில்லை என்று தகவல் தெரிந்த பிறகு தான் நிம்மதியடைந்தார்கள்.

அதேபோல் ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, அமெரிக்காவில் இருக்கும் மக்கள் கூகுள் பே மூலம் பணம் அனுப்பவோ, பணம் பெறவோ முடியாது என்று தான் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 180 நாடுகளில் பயனர்கள் கூகுள் பே செயலிக்கு பதிலாக கூகுள் வாலட் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த கூகுள் வாலட். அதனால் பல்வேறு மக்கள் இதை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

மேலும் கூகுள் நிறுவனம் அனைத்து அமெரிக்க பயனர்களையும் கூகுள் வாலட்டுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனாலும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு, கூகுள் பே செயலி இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் கூகுள் வாலட் ஆப் (Google Wallet App)வசதியை அறிமுகம் செய்தது கூகுள். குறிப்பாக டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிஃப்ட் கார்டுகள் போன்றவற்றைச் சேமிக்க அனுமதிக்கிறது கூகுள் வாலட் ஆப்.

கூகுள் வாலட் ஆப் வசதியில் பின் பாதுகாப்பு (PIN protection) மற்றும் தொலைந்த போன அல்லது திருடப்பட்ட டிவைஸில் உள்ள சேவையைத் தொலைவிலிருந்தே முடக்கும் திறன் (Remotely disable the service) உள்ளிட்ட சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஜூன் 4ஆம் தேதி  கடைசி.. Google Pay செயல்படாது.. என்ன காரணம்?

இந்த கூகுள் வாலட்டைப் பயன்படுத்துபவர்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எளிதாக பணம் அனுப்புவது மட்டுமின்றி, மொபைல் எண், ஈமெயில் ஐடி பயன்படுத்தியும் பணம் அனுப்பலாம். அதேபோல் மற்றவர்களிடமிருந்தும் நேரடியாகக் கூகுள் வாலெட் கணக்கிற்குப் பணத்தைப் பெறலாம்.

இணையத்தில் ஏதேனும் பொருட்கள் வாங்கும்போது செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் இதன் மூலமாக எளிதாகிறது. மேலும் போன் பே, கூகுள் பே, பேடிஎம் செயலிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது இந்த கூகுள் வாலட் ஆப். குறிப்பாக காண்டாக்ட் லெஸ் முறையில் இதன் மூலமாகப் பணம் செலுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay service shutdown in US on June 4: Do you know the reason?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X