Home
News

Google Pay-க்கு குறிச்சாச்சு.. நவ.7 கடைசி.. உடனே இதை பண்ணுங்க.. ரூ.1001 கேஷ்பேக் அப்புறம் கிடைக்காது.. எப்படி?

கூகுள் பே (Google Pay) ஆப் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு நவம்பர் 7ஆம் தேதி மறக்க முடியாத நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தீபாவளி சலுகையாக ரூ.1001 கேஷ்பேக் கொடுப்பது அந்த தேதியுடன் முடிகிறது. ஆகவே, இந்த ரூ.1001 கேஷ்பேக் சலுகையை எப்படி பெறுவது? ஏற்கனவே தீபாவளி ஸ்கிராட்ச் கார்டு பெற்றுள்ள கூகுள் பே கஸ்டமர்கள் அதை எப்படி கிளைம் செய்வது? போன்ற விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து பரிவர்த்தனை செய்த கஸ்டமர்களுக்கு இது பொருந்தும்.

இந்தியாவில் கோடிக்கணக்கான பேங்க் கஸ்டமர்கள் பயன்படுத்தி வரும் கூகுள் பே ஆப் மூலம், ஒவ்வொரு பரிவர்த்தனை செய்யும்போதும் ஸ்கிராட்ச் கார்டு பெற்று கொள்ளலாம். இந்த ஸ்கிராட்ச் கார்டில் கேஷ்பேக் அல்லது ஷாப்பிங் சலுகைகள் இருக்கும். இது கஸ்டமர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.1001 கேஷ்பேக் தெரிந்திருக்காது.

Google Pay-க்கு குறிச்சாச்சு! நவ.7 கடைசி.. இத பண்ணுங்க.. ரூ.1001 கேஷ்!

இந்த ரூ.1001 கேஷ்பேக் பெற அக்டோபர் 29ஆம் தேதியில் இருந்து பரிவர்த்தனை செய்திருக்க வேண்டும். இந்த பரிவர்த்தனை மூலம் 6 கூகுள் பே லட்டுக்களை (Google Pay Laddoos) கஸ்டமர்கள் சேகரிக்க வேண்டும். உங்களது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஸ்கிராட்ச் கார்டை போன்று ஒரு லட்டு உங்களுக்கு கிடைக்கும். இந்த 6 லட்டுகளுக்கான பரிவர்த்தனைகள் வெவ்வேறாக இருக்கின்றன.

அதாவது, கூகுள் பே மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்த வேண்டும் (குறைந்தபட்சம் ரூ.100 பரிவர்த்தனை). கூகுள் பே மூலம் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் அல்லது போஸ்ட்பெய்ட் பில் செலுத்த வேண்டும் (குறைந்தபட்சம் ரூ.100 பரிவர்த்தனை). குறைந்தபட்சம் ரூ.200 மதிப்பில் கிஃப்ட் கார்டு வாங்க வேண்டும். கூகுள்பே மூலம் கிரெடிட் கார்டு பில் செலுத்த வேண்டும்.

மேலும், உங்களது நண்பர்களுக்கு கூகுள் பே லட்டுக்களை பரிசளிக்க வேண்டும். இந்த ஒவ்வொரு பரிவர்த்தனைகளையும் தனித்தானியாக செய்திருந்தால், உங்களுக்கு 6 லட்டுக்கள் கிரெடிட் செய்யப்பட்டு இருக்கும். இந்த கூகுள் பே லட்டுக்களை கிளைம் செய்ய வேண்டுமானால், உங்களது கூகுள் பே ஆப்-ஐ ஓப்பன் செய்து ஹோம் பக்கத்திலேயே கீழே ஸ்ரோல் செய்து கொள்ளுங்கள்.

ஆஃபர்கள் மற்றும் ரிவார்டுகள் (Offers and Rewards) டேப் தோன்றும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள். இப்போது, 6 லட்டுக்களுக்கான ஐகான் தோன்றும். அதில் நீங்கள் ஏற்கனவே பெற்ற லட்டுக்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். 6 லட்டுக்களுக்கான பரிவர்த்தனைகளை நீங்கள் செய்திருந்தால், லட்டுக்களை நீங்கள் கிளைம் செய்து கேஷ்பேக் பெறுவதற்கான கார்டுகளை பெற்று கொள்ளலாம்.

இதே ஆஃபர்கள் மற்றும் ரிவார்ட்கள் டேப்பில் கிளைம் ஃபைனல் ரிவார்ட் (Claim Final Reward) பக்கத்தில் கிளிக் செய்து கொள்ளுங்கள். இறுதியாக கிளைம் ரிவார்ட் (Final Reward) பக்கம் காண்பிக்கப்படும். இதை கிளிக் செய்த பிறகு கூகுள் பே லட்டுகளுக்கான ஸ்கிராட்ச் கார்டு உங்களுக்கு கொடுக்கப்பட்டுவிடும். இந்த கார்டை வழக்கம்போல ஸ்கிராட்ச் செய்து கொள்ளலாம்.

இந்த கிளைம் செய்யப்பட்ட ஸ்கிராட்ச் கார்டு மூலம் உங்களுக்கு ரூ.51 முதல் ரூ.1001 வரையில் கேஷ்பேக் கொடுக்கப்படும். இந்த கேஷ்பேக் தொகை வழக்கம்போல உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் கிரெடிட் செய்யப்படும். ஒரேவொரு பரிவர்த்தனை மூலமும், ஒரேவொரு நபருக்கு பணம் அனுப்பினாலும் இந்த லட்டுக்களை பெற முடியாது. வெவ்வேறு நபர்களுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Google Pay Rs 1001 Cashback Offer With Laddoos Ends November 7 2024 How To Earn This Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X