Google Pay செயலியில் இப்படியொரு வசதியா? இனி சிக்கல் இருக்காது.. உற்சாகத்தில் பயனர்கள்..
இந்தியாவில் போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), செயலிகளை விட கூகுள் பே (Google Pay) செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த கூகுள் பே செயலியை எளிைமையாக பயன்படுத்த முடிகிறது, அதேசமயம் இந்த செயலியில் அவ்வப்போது புதிய புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது கூகுள் நிறுவனம். எனவே தான் கூகுள் பே செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் கூகுள் பே பயனர்களுக்கு மீண்டும் ஒரு அசத்தலான புதிய வசதி ஒன்று கிடைக்க உள்ளது. அதாவது தற்போது நீங்கள் கையால் டைப் செய்து தான் யுபிஐ (UPI) மூலம் பணம் அனுப்பி வந்தீர்கள். ஆனால் விரைவில் கூகுள் பே செயலியில் பேசுவதன் மூலம் பணம் செலுத்த முடியும். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கூகுள் பே புதிய அம்சம்
அதாவது புதிய ஏஐ (AI) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. எனவே பயனர்கள் வாய்ஸ் கமெண்ட் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். கூகுள் நிறுவனம் தற்போது இதற்கான பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த அம்சம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும், இதன் மூலம் படிக்காதவர்களும் எளிதாகப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செயலியில் அனைத்து இந்திய மொழிகளையும் சேர்க்க கூகுள் (Google) முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் வாய்ஸ் கமெண்ட் மூலம் யுபிஐ பணம் அனுப்பும் இந்த புதிய அம்சம் எவ்வாறு செயல்படும் என்பது குறித்து அதிகமான தகவல்கள் வெளியாகவில்லை. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, பேசுவதன் மூலம் பணம் செலுத்துவது சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் தற்போது ஆன்லைனில் அதிகரித்து வரும் மோசடிகளை சமாளிக்க கூகுள் நிறுவனம் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்திய மொழிகளில் டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தியா அரசின் பாஷினி ஏஐ திட்டம் (Bhashini AI project) உடன் கூகுள் இணைந்து செயல்படுவதால் இந்த அம்சம் விரைவில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கூகுள் பே செயலியில் குரல் அம்சம் (voice based UPI payments) மட்டும் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டால் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கூகுள் பே செயலியில் விரைவில் வரவுள்ள புதிய குரல் அம்சம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் கூகுள் பே மூலம் பணம் அனுப்பும்போது தவறுதலாக நாம் வேறு யாருக்காவது பணத்தை அனுப்பி விட்டால் அதை எப்படித் திரும்பப் பெறுவது என்று பார்க்கலாம். அதன்படி தவறான யுபிஐ நம்பருக்கு பணம் போனால், அதனை பெற்றவரைத் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெறுவதற்கு உதவி கோரலாம்.
இதுதவிர கூகுள் செயலியின் கஸ்ட்மர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு தவறாக பணம் அனுப்பிய விவரத்தைக் கூறலாம். பணத்தை திரும்ப பெற வேண்டியதற்கு, அது சார்ந்த தகவல்களைப் பயனர்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் பே சேவை மையம் எண் 1800-419-0157 என்று indiatvnews இணையதளம் வெளியிட்டுள்ளது.
அதன்பின்பு கூட உங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், ஆர்பிஐ அமைப்பின் NPCI portal இணையப் பக்கத்தில் புகார் அளிக்கலாம். அதன்படி NPCI வலைத்தளமான npci.org.in தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு What we do tab என்ற பக்கத்திற்குச் சென்று, பின்னர் UPIஐத் தேர்வு செய்து Dispute Redressal Mechanism என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த பக்கத்தில் இருக்கும் புகார் பெட்டியில் நீங்கள் மேற்கொண்ட தவறான பரிவத்தனைக் குறித்த விவரங்களைப் பதிவிடவும். அதாவது புகார் பெட்டியில், யுபிஐ பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், விர்ச்சுவல் பேமெண்ட் முகவரி, மாற்றப்பட்ட தொகை, பரிவர்த்தனை தேதி, மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதைச் செய்தால் அடுத்த 24-48 மணி நேரத்தில் பணம் திரும்ப வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கூகுள் பே செயலியில் கூடிய விரைவில் பல அம்சங்கள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications