Home
News

UPI-க்கு திடீர் மாற்றம்.. Google Pay, PhonePe இருக்கா.. இனி ATM கதை முடிஞ்சது.. ஒரே மாசத்துல எல்லாமே மாறுது!

பேங்க் கஸ்டமர்களிடையே கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் (UPI Apps) தவிர்க்க முடியாததாக மாறிவிட்டன. பொட்டிக்கடை முதல் சூப்பர் மார்கெட் வரையில் யுபிஐ ஆப்கள் மூலம் பணத்தை அனுப்ப முடிகிறது. இதனால், ஒரே மாதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை யுபிஐ பரிவர்த்தனைகள் (UPI Transactions) சந்தித்து இருக்கிறது. இனிமேல் ஒட்டுமொத்தமாக யுபிஐ ஆப்களுக்கு மாற வேண்டி இருக்கும்.

இனிமேல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை தவிர்த்துவிட்டு பணத்தை அனுப்பவோ பெறுவதோ சுலபமாக இருக்காது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஏடிஎம் மெஷின்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் அடிமட்டத்துக்கு சென்று கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் யுபிஐ ஆப்கள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் புது உச்சத்தை தொட்டு இருக்கிறது.

UPI-க்கு திடீர் மாற்றம்! Google Pay, PhonePe இருக்குல.. ATM முடிஞ்சது!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்கள் மட்டுமல்லாமல், பேங்க் ஆப்கள் (Bank Apps), ஐஎம்பிஎஸ் (IMPS) போன்ற நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் மூலமும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகமாக நடக்கின்றன. இது ஏடிஎம் மற்றும் கையில் பணத்தை வைத்து கொண்டு செய்யும் பரிவர்தனைகளை முடித்துகட்ட இருக்கிறது.

ஏனென்றால், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங் இல்லாமலேயே கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களில் மட்டும் 16.58 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்து முடிந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 23.5 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இந்த பரிவர்த்தனைகளை 2023ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 45 சதவீத வளர்ச்சியை எட்டி இருக்கிறது. இது கிட்டத்தட்ட பாதிக்குப்பாதி அதிகரிப்பை குறிக்கிறது. 11.40 பில்லியன் பரிவர்த்தனைகள் இப்போது, 16.58 பில்லியனாக அதிகரித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளும் 632 பேங்குகள் மூலம் நடந்து இருக்கின்றன.

ஆகவே, ஒரே மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளின் வளர்ச்சி மிகப்பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இது ஏடிஎம் பரிவர்த்தனைகளை (ATM Transactions) ஒட்டுமொத்தமாக மாற்றி வருகிறது. ஏனென்றால், ஏடிஎம் கார்டு மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.43,350 கோடியாக இருந்தது. இது செப்டம்பர் மாதத்தில் ரூ.39,920 கோடி சரிந்துள்ளது.

இப்படி ஏடிஎம் கார்டு மூலம் செய்யும் பரிவர்த்தனைகளின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது. இது, ஏடிஎம் மெஷின்களின் பயன்பாட்டை குறைக்க வாய்ப்புள்ளது. ஆகவே, பணத்தை கையில் எடுத்து செலவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை பேங்குகளுக்கு செலுத்த வேண்டி வரும். ஏனென்றால், பேங்குகள் அந்த சேவையை வழங்க சிரமத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.

இது தொடர்ந்தால், ஏடிஎம் கார்டு மூலம் பணம் எடுக்கும் நடைமுறை அப்படியே மாறிவிடும். ஏடிஎம் நம்பரை மட்டுமே வைத்து கொண்டு டிஜிட்டலில் பணம் அனுப்புவது மட்டும் தொடர வாய்ப்புள்ளது. மேலும், நவம்பர் மாதத்தில் நடந்த யுபிஐ பரிவர்த்தனைகளை எடுத்து பார்த்தால், அக்டோபர் மாதத்தைவிட குறைந்து இருக்கின்றன. இது பெஸ்டிவல் சீசனை குறிக்கிறது.

அதாவது, அக்டோபர் மாதம் பண்டிகை நிறைந்த மாதமாக இருந்ததால், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து இருக்கின்றன. ஆன்லைன் ஷாப்பிங், கடைகளில் கியூஆர் கோட் பரிவர்த்தனைகள் (QR Code Transactions) அதிகளவில் நடந்துள்ளன. ஆனால், நவம்பர் மாதத்தில் 15.48 பில்லியன் பரிவர்த்தனைகளில், 21.5 லட்சம் கோடிகள் கைமாற்றப்பட்டுள்ளன. இது 7 சதவீத சரிவை கொடுத்துள்ளது.

ஆனால், இது அடுத்தடுத்த மாதங்களில் அதிகரிக்கவே வாய்ப்புகள் இருக்கிறது. யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய இப்போது, ஒரு பேங்க் அக்கவுண்ட் மூலம் பல யுபிஐ ஐடிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு மொபைல் நம்பரில் பல யுபிஐ ஐடிகளை (UPI ID) பயன்படுத்த முடியும். இது மேலும் யுபிஐ பரிவர்த்தனைகளை அதிகரிக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay, PhonePe UPI Apps Digital Transactions Reached Peak ATM Transactions Declined 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X