மொபைலில் Google Pay, PhonePe, Paytm யூஸ் செய்யுறீங்களா? ஏப்ரல் 1 முதல் புது UPI ரூல்ஸ்.. உடனே கவனியுங்க..
ஏப்ரல் 1, 2025 ஆம் தேதியான இன்று முதல் ஒரு முக்கியமான விதி யுபிஐ செயலிகளை பயன்படுத்தும் பயனர்களுக்காக மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. UPI செயலிகளான கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேட்டியும் (Paytm) போன்ற மொபைல் ஆப்ஸ் பயன்பாடுகளை பயன்படுத்தி பணபரிவர்தனைகளை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த புதிய விதிமுறையை தெரிந்துகொள்வது மிக முக்கியமானது. புதிய விதிமுறை உங்கள் மொபைல் எண்களுடன் தொடர்புடையது என்பதனால் உடனே இதை தவறாமல் கவனிக்கவும்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேட்டியும் (Paytm) போன்ற மொபைல் யுபிஐ ஆப்ஸ் (mobile UPI apps) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பயனர்களின் மொபைல் எண்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்றும், அவை முழுமையான செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்றும் NPCI வலியுறுத்தியுள்ளது.

அதாவது, இன்று (ஏப்ரல் 1, 2025) முதல், Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகள் மூலம் UPI சேவையை பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட செயலற்ற மொபைல் எண்களை நீங்கள் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இனி செயலற்ற மொபைல் எண்களின் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட செயலற்ற மொபைல் எண்களை அகற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) இந்த புதிய விதியின் மூலம் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி மற்றும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்த விதியை நடைமுறைப்படுத்தியுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது. செயலற்ற மொபைல் எண்களை மக்கள் தங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதை துண்டிக்க வேண்டும் என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பழைய மொபைல் எண்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு UPI சேவைகளை நீங்கள் தொடங்கி இருந்து, அந்த மொபைல் எண் தற்போது பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் நீங்கள் கவனம் கொள்ள வேண்டுமென்று NPCI தெரிவித்துள்ளது. செயலற்ற மொபைல் எண்களை உங்கள் வங்கி கணக்கு மற்றும் UPI சிஸ்டம்களில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது. காரணம், செயலற்ற எண்களை டெலிகாம் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மறுசுழற்சி செய்து, மற்றவர்களுக்கு வழங்கிவிடும்.
இதன் மூலம், உங்களுடைய செயலற்ற மொபைல் எண் மற்றவர் கரங்களில் சொந்தமாகும் பொழுது, அது மோசடிக்கு வழிவகுக்க அதிக வாய்ப்பிருப்பதாக NPCI எச்சரித்துள்ளது. வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்கள் UPI பரிவர்த்தனைக்கான அடையாள எண்களாக கருதப்படுவதினால், இவற்றை சரியான முறையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரையை NPCI வழங்கியுள்ளது.
ஒருவேளை உங்களுக்கு சொந்தமான மொபைல் எண் செயல் இழந்திருந்தது, அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தால், நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாக NPCI தெரிவித்துள்ளது. டெலிகாம் நிறுவனங்கள் உங்கள் செயலற்ற மொபைல் எண்களை மற்றவருக்கு புதிய எண்ணாக வழங்கியிருந்தால், உங்கள் UPI பரிவர்த்தனைகள் இனி தோல்வி அடைவதை உங்களால் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் விஐ (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) போன்ற எந்தவொரு டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து நீங்கள் சிம் கார்டு வாங்கி இருந்தாலும் சரி, உடனே உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண் ஆக்டிவ் நிலையில் இருக்கிறதா இல்லையா என்பதை ஒருமுறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் மொபைல் எண் செயல் இழந்திருந்தால், உடனே உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் எண்ணின் விபரத்தை அப்டேட் செய்யவும்.


Click it and Unblock the Notifications








