Home
News

Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்.. Phonepe-க்கும் அதே கதி.. என்ன ஆச்சு!

கூகுள் பே (Google Pay), போன் பே (Phonepe) ஆப் யூசர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவானது (National Payments Corporation of India - NPCI) மற்ற யுபிஐ (UPI) ஆப்புகளுடன் கைகோர்த்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தணையில் கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் (Paytm) ஆப்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, பேடிஎம் நிறுவனத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) மூலம் விதித்திருந்தது.

Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்!

இதனால், அந்த நிறுவனம் தனது பங்குகளை இழந்து தவித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான யூசர்கள் பேடிஎம் ஆப்பை விட்டு மற்ற யுபிஐ ஆப்களுக்கு மாறத் தொடங்கினர். இந்த சூழலில் என்பிசிஐ (NPCI) எடுத்துள்ள முடிவானது, கூகுள் பே, போன் பே ஆப் கஸ்டமர்களிடையே சற்று பீதியை கிளப்பிவிட்டுள்ளது.

இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனைகளில் (UPI Transactions) 86 சதவீதம் கூகுள் பே, போன்பே ஆப்கள் மூலம் மட்டுமே நடக்கின்றன. இந்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மற்ற நாடுகளிலும் தங்களது ஆப்களின் சேவையை இந்த 2 ஆப்களும் வழங்க தொடங்கிவிட்டன.

போன்பே நிறுவனமானது, யுஏஇ, சிங்கப்பூர், நேபால், பூடான் போன்ற பல்வேறு நாடுகளில் யுபிஐ சேவையை வழங்க தொடங்கிவிட்டது. கூகுள் (Google) நிறுவனமானது, அமெரிக்கா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வழங்குகிறது. ஆனால், கூகுள் வாலெட் (Google Wallet) சேவையை உலகளவில் வழங்கிவருகிறது.

Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்!

இப்போது, இந்தியாவிலும் கூகுள் வாலெட் சேவையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அப்படி கொண்டுவந்தால், இந்திய யூசர்கள் மற்ற நாடுகளில் அந்த ஆப்பை பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, அந்த 2 நிறுவனங்களும் ஆதிக்கத்தின் உச்சத்தை எட்டி வருகின்றன. இதனாலேயே மத்திய அரசு மற்ற யுபிஐ ஆப்களுக்கு ஆதரவு கொடுக்க திட்டமிட்டிருக்கிறது.

அதே நேரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆப்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முன்னதாக, எஸ்பிஐ (SBI), ஆக்சிஸ் (Axis), யெஸ் (Yes) போன்ற வங்கிகள் தங்களது ஆப்கள் மூலம் அதன் கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற பேங்க் கஸ்டமர்களுக்கும் யுபிஐ சேவை வழங்க அனுமதிக்கப்பட்டன.

இப்போது, வளர்த்து வரும் யுபிஐ ஆப்களை ஆதரிக்க நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதனால், உள்நாட்டு ஃபின்டெக் நிறுவனங்களுடன் ஏப்ரல் மாதத்தில் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை நடத்த இருக்கிறது. கூகுள் பே, போன்பே-க்கு மாற்றாக உள்நாட்டு நிறுவனங்களின் சேவையை ஆதாரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

Google Pay-க்கு அடுத்த ஆப்பு.. உதறிதள்ளிய NPCI.. கதிகலங்கிய யூசர்கள்!

இந்த சூழலில் இந்த கூட்டம் மிகப்பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சொல்லப்போனால், கூகுள் பே, போன்பே நிறுவனங்களுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை. கிரெட் (CRED), பிளிப்கார்ட் (Flipkart), Fampay (ஃபேம்பே), அமேசான் (Amazon) நிறுவனங்களுக்கும் மற்ற உள்நாட்டு ஃபின்டெக் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடையே என்பிசிஐயின் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, அந்த நிறுவனங்களின் யுபிஐ ஆப்களுக்கு ஆதரவு அளிக்கவும், பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய விவரங்கள் பிரபல ஊடகத்தில் வெளியாகி இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு யுபிஐ ஆப்களுக்கான புதிய விதிகள் அமலுக்கு வரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay PhonePe Dominates UPI Transactions NPCI Plan To Empower New UPI Players in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X