Home
News

Google Pay-க்கு ஆப்பு.. பேங்க் ஆப்-தான்.. எஸ்பிஐ, ஆக்சிஸ் முடிவு.. எந்த கஸ்டமர்களும் மாறலாம்.. வருது புதுசா!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த எஸ்பிஐ (SBI), ஆக்சிஸ் (Axis) மற்றும் யெஸ் (Yes) போன்ற வங்கிகள் தங்களது ஆப்களுக்கு கஸ்டமர்களை மாற்ற திட்டமிட்டுள்ளன. இதனால் என்னென்ன மாறப் போகிறது?

யுபிஐ பேமெண்ட் ஆப்களில் (UPI Payment Apps) ஆதிக்கம் செலுத்திவரும் கூகுள் பே, போன்பே போன்ற நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்பிஐ (RBI), என்பிசிஐ (NPCI) ஆகியவற்றுடன் புதிய விதிமுறைகளை உருவாக்கி வருகிறது.

Google Pay-க்கு ஆப்பு.. பேங்க் ஆப்-தான்.. எஸ்பிஐ, ஆக்சிஸ் ஆப்ஸ் ரெடி!

இந்த புதிய விதிமுறைகள் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India), ஆக்சிஸ் பேங்க் (Axis Bank), யெஸ் பேங்க் (YES BANK) ஆகியவை, கூகுள் பே, போன்பே யூசர்களை படிப்படியாக தங்களது மொபைல் பேங்கிங் ஆப்களுக்கு (Mobile Banking Apps) மாற்ற திட்டமிட்டுள்ளன.

அந்த பேங்க் கஸ்டமர்கள், அதனுடைய மொபைல் பேங்கிக் ஆப்பை பயன்படுத்துகிறார்கள் இதில் என்ன இருக்கிறது? என்று சாதாரணமாக தோன்றலாம். ஆனால், மேற்கூறிய மூன்று பேங்குகளும் தங்களது கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற பேங்க் கஸ்டமர்களுக்கும் யுபிஐ (UPI) சேவையை முழு வீச்சில் வழங்க திட்டமிட்டுள்ளன.

இவை கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆப்களை போலவே சேவைகளை வழங்க இருப்பதுதான் கவனிக்க வேண்டியது. வரும் காலங்களில் பேடிஎம் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் போல கூகுள் பே, போன்பே நிறுவனங்களுக்கும் விதிகப்பட்டால், கஸ்டமர்கள் அந்தந்த பேங்க் ஆப்களுக்கே மாற வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Google Pay-க்கு ஆப்பு.. பேங்க் ஆப்-தான்.. எஸ்பிஐ, ஆக்சிஸ் ஆப்ஸ் ரெடி!

அப்படியில்லை என்றால், எஸ்பிஐ போன்ற அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பேங்க்கின் ஆப்களையே கஸ்டமர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. "இப்போதுள்ள யுபிஐ ஆப்களுக்கு மாற்றாக எங்களது ஆப்க செயல்பட வேண்டும். எங்களது பேங்க்கில் புதிய கஸ்டமர்கள் அல்லது கஸ்டமர்கள் அல்லாதவர்களுக்கும் இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக யோனோ 2.0 (YONO 2.0) ஆப் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. இதில் கஸ்டமர்கள் மற்ற ஆப்களை போலவே பொருட்களை வாங்கவும், பலதரப்பட்ட சேவைகளை பெற்று கொள்ளவும் முடியும்" என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் (டிஜிட்டல் பேங்கிங் மற்றும் டிரான்பர்மேஷன்) நிதின் சுக் தெரிவித்திருக்கிறார்.

அதோடு "எஸ்பிஐ பேங்க் அக்கவுண்ட் இல்லையென்றாலும், யோனோ ஆப்பில் விவரங்களை பதிவு செய்து, ஃபோன்பே அல்லது கூகுள் பேவில் செய்வதை போலவே யுபிஐ பேமெண்ட்டுகளை செய்ய தொடங்கலாம்" என்றும் தெரிவித்திருக்கிறார். கோடிக்கணக்கான கஸ்டமர்களை வைத்திருக்கும் எஸ்பிஐ இந்த களத்தில் குதித்திருப்பது பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை.

எஸ்பிஐ பேங்க் மட்டுமல்ல, யெஸ் பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) ஆகியவை கூட கஸ்டமர்கள் அல்லாதவர்களை தங்களது மொபைல் யுபிஐ ஆப்களுக்கு இழுக்க குறிவைக்கின்றன. இதற்காக, இலவச சலுகைகள், கேஷ்பேக்குகள் போன்றவையும் அடுத்தடுத்த அறிவிக்க காத்திருக்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் போன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் ஆகியவை யுபிஐ பரிவர்த்தனையில் 95 சதவீதத்தை எட்டி இருக்கின்றன. ஆனால், இப்போது பேடிஎம் நிறுவனம், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களில் காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இது மற்ற நிறுவனங்களுக்கு ஒரு சமிக்கையை வழங்கி இருக்கிறது என்பதே உண்மையாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay, PhonePe Dominates UPI Market SBI, Axis Banks Add Non Customers To Mobile Banking Apps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X