Home
News

Google Pay, PhonePe கதை முடிந்தது.. இனி 500 ரூபாயோ 1000 ரூபாயோ.. சார்ஜ் இருக்கு.. BHIM-க்கு இல்ல.. என்ன வருது!

யுபிஐ (UPI) என்றழைக்கப்படும் யுனிஃபைடு பேமண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface) சேவையை கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஆப்கள் மூலம் பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் கஸ்டமர்கள் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு இனிமேல் கட்டணங்கள் இருக்கப் போகிறது. இது ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் பொருந்துமா? எந்தெந்த பேமெண்ட்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்பட இருக்கிறது? எந்த யுபிஐ ஆப்பில் இனிமேல் ஜீரோ சார்ஜ் இருக்கும்? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

யுபிஐ ஆப்கள் மூலம் எலக்ட்ரிசிட்டி பில், கேஸ் கட்டணம், வாட்டர் பில், மொபைல் பில் போன்வற்றை செலுத்தும் கஸ்டமர்களுக்கு இனிமேல் வசதி கட்டணம் (Convenience Fee) வசூலிக்கப்பட இருக்கிறது. இது ஒட்டுமொத்த யுபிஐ கஸ்டமர்களுக்கும் பொருந்துமா என்றால் அதுதான் கிடையாது. கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பில் செலுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது.

Google Pay, PhonePe கதை முடிந்தது.. 500 ரூபாயோ 1000 ரூபாயோ.. சார்ஜ்!

அதாவது, நேரடியாக பேங்க் அக்கவுண்ட் மூலம் இணைக்கப்பட்ட யுபிஐ ஆப்களில் இருந்து மேற்கண்ட எலக்ட்ரிசிட்டி, கேஸ் அல்லது வாட்டர் போன்ற பில்களை செலுத்தினால், உங்களிடம் வசதி கட்டணம் வசூலிக்கப்படாது. அதுவே, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி யுபிஐ ஆப்கள் மூலம் பில்களை செலுத்தினால் உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆகவே, கூடுதலாக தொகையை செலுத்த வேண்டி இருக்கும். இந்த வசதி கட்டணமானது, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றன. இப்போது, கூகுள் பே நிறுவனமும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சொல்லிவிட்டது. இதனால் யுபிஐ கஸ்டமர்கள் இனிமேல் இலவசமாக இந்த சேவையை பெற முடியாது என்பது உறுதியாகிவிட்டது.

இவ்வளவு நாள் இலவசமாக கிடைத்த சேவை இனிமேல் கட்டணமாக மாறினால், இது யுபிஐ கஸ்டமர்களுக்கு சற்று சிரமத்தை வழங்கலாம். இந்த கட்டணமானது 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் இருக்கும் என்றும் அதோடு ஜிஎஸ்டி (GST) வசூலிக்கப்படும் என்றும் கூகுள் பே உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆகவே, எலக்ட்ரிசிட்டி பில்லில் ரூ.15 கூடுதலாக கட்டணம் இருக்க வாய்ப்புள்ளது.

இதேபோல அந்தந்த பில்களுக்கு ஏற்ப கட்டணங்கள் இருக்கப்போகிறது. ஆகவே, 500 ரூபாயோ அல்லது 1000 ரூபாயோ கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி யுபிஐ மூலம் பில் செலுத்தும் போது கூடுதலாக கட்டணத்தை செலுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு விட்டது. இதே போலத்தான் பேடிஎம் மற்றும் போன்பே ஆப்களிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவில் முக்கால்வாசி யுபிஐ கஸ்டமர்கள் இந்த மூன்று யுபிஐ ஆப்களையே பயன்படுத்துகின்றனர். இதனால், இவற்றில் ஏதாவது மாற்றங்கள் வந்தால், ஒட்டுமொத்த கஸ்டமர்களிடமும் கவனம் பெறுகிறது. ஆனால், இப்போது வந்துள்ள வசதி கட்டணமானது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் - என்சிபிஐ (National Payments Corporation of India - NPCI) கீழ் இருக்கும் பீம் ஆப்பில் கிடையாது.

இந்த பீம் யுபிஐ (BHIM UPI) ஆப் நேரடியாக மத்திய அரசின் கீழ் செயல்படுவதால் இதில் வசதி கட்டணம் கிடையாது. சொல்லப்போனால், பீம் யுபிஐ ஆப் மூலம் செய்யும் எந்தவொரு பரிவர்த்தனைகளுக்கும் கட்டணங்கள் கிடையாது. இனிமேலும் இதில் கட்டணம் வருவதற்கு வாய்ப்பும் இல்லை. ஏனென்றால், டிஜிட்டல் இந்தியாவின் திட்டத்தில் ஒரு பகுதியாகவே இது இருக்கிறது.

ஆகவே, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற தனியார் நிறுவனங்களைவிட இலசமாகவும் பாதுகாப்பாகவும் பீம் ஆப்பில் சேவைகள் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது. இந்த பீம் ஆப் மூலம் பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே செகண்டரி அக்கவுண்ட் பயன்படுத்தும்படி யுபிஐ சர்க்கிள் (UPI Circle) ஆப்ஷன் இருக்கிறது. இது மற்ற யுபிஐ ஆப்களில் இன்னும் வரவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay PhonePe Convenience Fee For UPI Bill Payments Via Credit Debit Cards Zero Charge on BHIM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X