Home
News

அப்படி போடு.. தனிநபர் கடன்கள் வழங்க பிரபல நிறுவனத்துடன் இணைந்த Google Pay.. இதோ முழு விவரம்..

இந்தியா முழுவதும் கூகுள் பே (Google Pay) செயலி ஆனது மிகவும் பிரபலமாக உள்ளது. அதாவது இந்த கூகுள் பே செயலி மூலம் சில நொடிகளில் பணம் அனுப்பவும், பெறவும் முடிகிறது. இதுதவிர லோன் எடுக்கும் வசதி, பில் ஸ்பிளிட் அம்சம், சிபில் ஸ்கோர் (CIBIL Score) தெரிந்து கொள்வது என பல சிறப்பான வசதிகள் இந்த கூகுள் பே செயலியில் உள்ளன. எனவே தான் அதிக மக்கள் இந்த கூகுள் பே செயலியை பயன்படுத்துகின்றனர்.

கூகுள் பேவின் புதிய கூட்டணி

இந்நிலையில் கூகுள் பே செயலி ஆனது கடன் வழங்குவதற்காக முன்னணி NBFC அதாவது வங்கி சாரா நிதி நிறுவனமான L&T உடன் கூட்டணி அமைத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தனிநபர் கடன்கள் வழங்க பிரபல நிறுவனத்துடன் இணைந்த Google Pay..

பயனர்களுக்கு விரைவான, எளிதான மற்றும் முற்றிலும் டிஜிட்டல் முறையில் கடன்களை வழங்குவதற்காக எல் அண்ட் டி ஃபைனான்ஸ் லிமிடெட், கூகுள் பேவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதுவும் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் முன்பு எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக எல் அண்ட் டி ஃபைனான்ஸ் மற்றும் கூகுள் பே இடையேயான இந்த புதிய கூட்டணி, அதன் தயாரிப்புகளை அதிகமான மக்களுக்கு சென்று அடைய வேண்டும் என்பது தான் நிறுவனத்தின் முக்கிய நோக்கம். முன்னதாக, எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஆனது போன்பே, கிரெடிட் மற்றும் அமேசான் பே போன்ற பெரிய தளங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.

அதுவும் இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு விரைவான வசதிகளையும், சேவைகளையும் தீவரமாக செயல்படுவதை காண முடிகிறது. அதேபோல் கூகுள் பே பயனர்களுக்கு, இந்த கூட்டாண்மை அதிக வசதி மற்றும் தனி நபர் கடன்களை கொடுக்க முடியும்.

தற்போது கூகுள் பே செயலி ஆனது வெறும் பணம் அனுப்புவதற்கு மட்டுமின்றி, இனி இந்த கடன் வசதியையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த கூட்டாண்மை, எல்&டி ஃபைனான்ஸின் நிதி நிபுணத்துவத்தை கூகுள் பேயின் பயன்பாட்டின் எளிமை மற்றும் பெரிய பயனர் தளத்துடன் இணைத்து, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப எளிதான மற்றும் நம்பகமான கடன்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒத்துழைப்பு வசதியை மேம்படுத்துவதோடு இந்தியாவின் டிஜிட்டல் நிதியை மேலும் முன்னேற்ற உதவும். ஆனாலும் இந்த கடன்களுக்கான வட்டி சற்று கூடுதலாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 1
சமீபத்தில் வெளியான தகவலின்படி, அக்டோபர் 1-ம் தேதி கூகுள் பே, போன்பே, போன்ற யுபிஐ செயலிகளில் P2P என்ற பரிவர்த்தனைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வசதி யுபிஐ பயனர்களுக்குப் பணம் செலுத்துவதற்கான வேண்டுகோளாக இருந்தது. அதாவது collect request எனும் ஆப்ஷன் தான் இனி பயன்படுத்த முடியாது. அதுவும் இந்த வசதி அதிகமாக முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும், மோசடி செயல்கள் அதிகரிப்பதால் தான் இந்த நடவடிக்கை என்.பி.சி.ஐ எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

கலெக்ட் ரெக்யூஸ்ட் (collect request) வசதியை பெரும்பாலும் மோசடி கும்பலே அதிகளவில் பயன்படுத்துவதாகவும், பயனர்கள் பணம் செலுத்துவதற்கான கோரிக்கையை ஏற்றவுடன் தங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் சென்றுவிடும், பணம் எடுப்பதற்கான கோரிக்கை என்று அறியாமலே பலர் இதில் ஏமாந்துவிடுவதால் இந்த வசதி நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் கடன்கள் வழங்க பிரபல நிறுவனத்துடன் இணைந்த Google Pay..

முன்னதாக ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் ரூ.2000 வரை மட்டுமே செலுத்த முடியும் என்ற கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. இது மோசடியை அதிகளவில் கட்டுப்படுத்திய நிலையில், இத்தகைய மோசடிகளை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் என்.பி.சி.ஐ இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே இதன் மூலம் இனிமேல் பயனர்கள் யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றால் கியூ ஆர் கோடு அல்லது தொடர்பு எண்களைப் பயன்படுத்தி மட்டுமே அனுப்ப முடியும். குறிப்பாக இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி அமலுக்கு வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மாற்றங்கள் வணிக பரிவர்த்தனைகளைப் பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஐஆர்சிடிசி, பிளிப்கார்ட் அமேசான், ஸ்விக்கி போன்ற தளங்கள் வழக்கம் போல கலெக்ட் ரெக்யூஸ்ட் கொடுத்து பண பரிவர்த்தனைகள் பயனர்களிடம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவற்றை அப்ரூவ் செய்ய பயனர்கள் யுபிஐ பின் நம்பரை கட்டாயம் பதிவிட வேண்டியிருக்கும். அதாவது ஆன்லைன் பேமெண்டின் போது வழக்கம் போல பரிவர்த்தனை செய்ய முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay partners with L&T Finance to offer personal loans: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X