Home
News

Google Pay பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! அறிமுகமானது புதிய வசதி.! முழு விவரம்.!

கூகுள் பே, போன்பே, கூகுள் பே, பேடிஎம் செயலிகளை இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கூகுள் பே, போன் பே செயலிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கு ஸகேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. இதுதவிர மின்சார கட்டணத்தைக் கூட இந்த UPI செயலிகள் மூலம் செலுத்த முடியும்.

கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! அறிமுகமானது புதிய வசதி.!

இந்நிலையில் கூகுள் பே செயலியில் இப்போது ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது இது சார்ந்த தவலை சற்று விரிவாகப் பார்ப்போம். கூகுள பே-வில் ரூபே கிரெடிட் கார்டு (RuPay) அடிப்படையிலான யுபிஐ பேமெண்ட்டுகளை தொடங்குவதற்குக் கூகுள், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (என்சிபிஐ) ஒப்பந்தம் செய்துள்ளது.

எனவே பயனர்கள் இப்போது கூகுள் பே-வில் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து பணம் செலுத்தலாம். அதேபோல் தற்போது ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை கூகுள் பே ஆதரிக்கிறது.

இனி வரும் நாட்களில் மேலும் சில வங்கி கார்டுகளை இணைக்க கூகுள் பே திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கூகுள் பே செயலியில் வங்கி கணக்கு இணைக்கும் போது டெபிட் கார்டு பயன்படுத்தி மட்டுமே இணைத்து வந்தோம். இந்நிலையில் கிரெடிட் கார்டு இணைக்கும் வசதியும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் விசா மற்றும் மாஸ்டர் வழங்கிய கிரெடிட் கார்டுகளை தற்போது இணைக்க முடியாது. ரூபே கார்டு மட்டுமே இணைக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கூகுள் பே பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! அறிமுகமானது புதிய வசதி.!

இப்போது கூகுள் பே செயலியில் ரூபே கிரெடிட் கார்டு இணைப்பது எப்பது என்பதைப் பார்ப்போம். அதாவது டெபிட் கார்டு இணைப்பது போலவே இதையும் எளிமையாக இணைக்க முடியும். முதலில் கூகுள் பே ஓபன் செய்து settings பக்கம் செல்ல வேண்டும். அடுத்து Setup payment method செலக்ட் செய்து Add ரூபே கிரெடிட் கார்டு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதன்பின்பு கிரெடிட் கார்டு விவரங்கள், 6 இலக்க கிரெடிட் கார்டு எண், எக்ஸ்பைரி டேட், பின் நம்பர் ஆகியவை கொடுத்த பின் ஓ.டி.பி வரும். அவ்வளவு தான், ரூபே கிரெடிட் கார்டு இணைக்கப்படும். அதன்பிறகு பணம் செலுத்தும் போது ரூபே கிரெடிட் கார்டு என்ற ஆப்ஷனையும் செலக்ட் செய்து பணம் செலுத்த முடியும்.

அதேபோல் கூகுள் பே செயலியில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இந்த செயலியில் வரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay now accepts RuPay credit cards for UPI payments for Indian users : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X