நீங்க தினமும் 3 முறை UPI பண்ணா.. அதுல 1 பேமண்ட்? Google Pay பற்றி வெளியான பகீர் உண்மை!
பிரபல யுபிஐ பேமண்ட் ஆப் ஆன கூகுள் பே (Google Pay) ஆனது எப்ஆர்ஐ (FRI) என்கிற ஃபிராட் ரிஸ்க் இன்டிகேட்டர் (Fraud Risk Indicator) உடன் இணைக்கப்படவில்லை என்று தொலைத்தொடர்புத் துறை (DoT) செயலாளர் ஆன நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.
எப்ஆர்ஐ (ஃபிராட் ரிஸ்க் இன்டிகேட்டர்) என்றால் என்ன? இதனுடன் இணைக்கப்படாததால் கூகுள் பே ஆப்பிற்கு என்ன சிக்கல்? எப்ஆர்ஐ என்பது டிஓடி (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்பு துறையால் (Department of Telecommunications) உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு" அமைப்பு ஆகும்.

இந்த அமைப்பு - நிதி மோசடிகளுடன் இணைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மொபைல் எண்களை "ஆபத்தானது" என்று சுட்டிக்காட்டும், குறிப்பாக டிஜிட்டல் கட்டண தளங்களில் நடக்கும் மோசடியான பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்க உதவும். எப்படி தடுக்குமென்றால் - நீங்கள் டிஜிட்டல் தளங்கள் மூலம் பணம் செலுத்த முயற்சிக்கும்போது, மீடியம்-ரிஸ்க் நம்பர்களுக்கான வார்னிங் ஆனது ப்-அப்களாக தோன்றும்.
அதுவே ஹை-ரிஸ்க் மற்றும் வெரி ஹை-ரிஸ்க் நம்பர்களாக வைப்படுத்தப்பட்டு இருந்தால், அந்த பரிவர்த்தனையே தடை செய்யப்படும். இப்படிப்பட்ட எப்ஆர்ஐ பாதுகாப்பு அமைப்பை, கூகுள் பே இன்னும் அதன் கட்டண அமைப்பில் ஒருங்கிணைக்காததால், கூகுள் பே வழியாக யுபிஐ சேவையை பயன்படுத்தும் இந்தியர்களின் 3 யுபிஐ பேமெண்ட்களில் 1 பாதுகாப்பற்றதாக இருக்கும் என்றும் "பெயர் கூற விரும்பாத" டிஓடி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக எச்டி (HT) அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூகுள் பே ஆனது சராசரியாக அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளிலும் சுமார் 30% முதல் 35% பங்கை கொண்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிகாட்டனார். கூகுள் பேயின் போட்டியாளர்களான போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) ஆகியவைகள் ஏற்கனவே எப்ஆர்ஐ அமைப்பை தங்கள் கட்டண சேவைகளில் ஒருங்கிணைத்துள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஒருங்கிணைப்பிற்காக கூகுளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். ஒரு பன்னாட்டு நிறுவனமாக இருப்பதால், அவர்களின் வளர்ச்சிக்கு அதிக நேரம் எடுக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையில், நாட்டில் 50 க்கும் மேற்பட்ட வங்கிகள் மற்றும் யுபிஐ நிறுவனங்கள் இரண்டு மாதங்களுக்குள் இதை செயல்படுத்தியுள்ளன என்று அந்த டாட் அதிகாரி கூறினார்.
கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் (IMC) நிகழ்வில், போன்பே, பேடிஎம் மற்றும் டாட் ஆகியவற்றின் குழு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு விளக்கக்காட்சியை வழங்கியது. அதில் போன்பே நிறுவனமானது - குடிமக்கள் சுமார் ரூ.125 கோடி நிதி மோசடி இழப்புகளை தவிர்க்க உதவியதாக கூறியது, அதே நேரத்தில் எப்ஆர்ஐ காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் ரூ.68 கோடியை சேமிக்க உதவியதாக பேடிஎம் கூறியது.
போன்பே தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை போன்பே பிஜி (PhonePe PG) என்று சுருக்கமாக அழைக்கப்படும் போன்பே பேமண்ட் கேட்வே (PhonePe Payment Gateway) ஆனது ரூபே (RuPay) மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) உடன் இணைந்து, தொடர்ச்சியான சந்தா கட்டணங்களை எளிதாக்கும் நோக்கத்தின் கீழ், ரூபே கிரெடிட் கார்டுகளால் ஆதரிக்கப்படும் யுபிஐ ஆட்டோபே அம்சத்தை (UPI Autopay Feature) அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த முயற்சி, வங்கி கணக்குகளுடன் நேரடியாக இணைப்பதற்கு பதிலாக, தங்கள் ரூபே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி யுபிஐ வழியாக சந்தா கட்டணங்களை செட் செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. இது லோ பேலன்ஸ் அக்கவுண்ட்களால் ஏற்படும் கட்டண தோல்விகளைக் குறைக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் ஜியோஸ்டார் போன்ற சந்தா அடிப்படையிலான சேவைகளுக்கு தடையற்ற அணுகலையும் உறுதி செய்யும்.


Click it and Unblock the Notifications








