கூகுள் பே செயலி மூலம் Wrong Numberக்கு பணம் அனுப்பிட்டீங்களா? திரும்ப கிடைக்க வழி இருக்கே..
இந்தியாவில் பேடிஎம், போன்பே போன்ற யுபிஐ செயலிகளை விட கூகுள் பே (Google Pay) செயலியை தான் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த கூகுள் பே செயலி மூலம் சில நொடிகளில் எளிதாக பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இதுதவிர லோன் எடுக்கும் வசதி, சிபில் ஸ்கோர் பார்க்கும் வசதி பல அசத்தலான வசதிகள் இந்த கூகுள் பே செயலியில் உள்ளன. எனவே தான் அதிக மக்கள் இந்த கூகுள் பே செயலியை பயன்படுத்துகின்றனர்.
இந்த கூகுள் பே செயலி ஆனது மிகவும் பயனுள்ள வகையில் தான் இருக்கிறது. ஆனால் நாம் இந்த செயலியில் சிறு பிழைகள் செய்தால் கூட பணம் இழப்பை ஏற்படுத்தும். அதாவது இந்த செயலியில் ஒருவேளை நீங்கள் தவறான தொடர்பு எண்ணை தேர்வு செய்தாலோ அல்லது எழுத்துப் பிழை ஏற்பட்டாலோ பணம் வேறு ஒருவருக்கு சென்றுவிடும்.

எனவே இதுபோன்ற தவறுகள் நடந்தால் என்ன செய்வது என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலில் நீங்கள் தவறுகள் நிகழாமல் பார்த்துகொள்வது சிறந்தது. அதாவது சரியான மொபைல் நம்பர் மற்றும் பெயர் போன்றவற்றை உறுதி படுத்திவிட்டு அதன்பின்பு பணம் அனுப்புவது மிகவும் நல்லது.
ஒருவேளை நீங்கள் பணத்தை தவறுதலாக வேறு ஒருவருக்கு அனுப்பிவிட்டார், உடனே அவரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப பெற வேண்டும். நமது தொடர்பு பட்டியலில் உள்ளவர்களாக இருந்தால் சிரமம் இருக்காது, பணத்தை எளிதாக திரும்பி பெறலாம். அவர்களை அழைத்து பேசுவதன் மூலமோ அல்லது மெசேஜ் அனுப்புவதன் மூலமோ பணத்தை திரும்பப் பெறலாம்.
கூகுள் பே வாடிக்கையாளர் சேவை
ஆனால் அறிமுகமில்லாத ஒருவருக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தால், அவர்களை அழைத்து மரியாதையுடன் உங்கள் தவறை விளக்கி பணத்தை திரும்பக் கேட்கலாம். குறிப்பாக மரியாதையான அணுகுமுறை பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஆனால் இந்த வழிமுறை பலனளிக்கவில்லை என்றால் கூகுள் பே வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.
குறிப்பாக நீங்கள் புகார் கொடுப்பதற்கு முன்பு பரிவர்த்தனை ஐடி, தேதி, நேரம், எவ்வளவு தொகை, பெறுநரின் ஐடி, போன்ற விவரங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். பின்பு இந்த விவரங்களை கூகுள் பே வாடிக்கையாளர் சேவைக்கு வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்திய தேசிய பணப்பரிமாற்றக் கழகத்திடம் (NPCI) புகார் அளிப்பது மற்றொரு வழி. இதற்கு npci.org.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு What We Do என்பதை கிளிக் செய்து, UPI-ஐத் தேர்வு செய்யவும். அடுத்து பரிவர்த்தனை ஐடி, வங்கி விவரங்கள் மற்றும் தொகை போன்ற அனைத்து விவரங்களை கொடுத்து புகார் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கூட்டணி
மேலும் சமீபத்தில் கூகுள் பே செயலி ஆனது கடன் வழங்குவதற்காக முன்னணி NBFC அதாவது வங்கி சாரா நிதி நிறுவனமான L&T உடன் கூட்டணி அமைத்துள்ளது. பயனர்களுக்கு விரைவான, எளிதான மற்றும் முற்றிலும் டிஜிட்டல் முறையில் கடன்களை வழங்குவதற்காக எல் அண்ட் டி ஃபைனான்ஸ் லிமிடெட், கூகுள் பேவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அதுவும் எல் அண்ட் டி ஃபைனான்ஸ் முன்பு எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது.

கூகுள் பே செயலி ஆனது வெறும் பணம் அனுப்புவதற்கு மட்டுமின்றி, இனி இந்த கடன் வசதியையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த கூட்டாண்மை, எல்&டி ஃபைனான்ஸின் நிதி நிபுணத்துவத்தை கூகுள் பேயின் பயன்பாட்டின் எளிமை மற்றும் பெரிய பயனர் தளத்துடன் இணைத்து, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப எளிதான மற்றும் நம்பகமான கடன்களை வழங்கும்.
குறிப்பாக இது ஒத்துழைப்பு வசதியை மேம்படுத்துவதோடு இந்தியாவின் டிஜிட்டல் நிதியை மேலும் முன்னேற்ற உதவும். ஆனாலும் இந்த கடன்களுக்கான வட்டி சற்று கூடுதலாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








