Home
News

இனி பணம் செலுத்த PIN நம்பர் தேவையில்லையா? கூகுள் பேவில் புது UPI Lite அறிமுகம்! அப்படினா என்ன?

கூகுள் பே (Google Pay) அதன் தளத்தில் புதிதாக யுபிஐ லைட் (UPI Lite) என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதை கூகுள் பே பயனர்கள் எப்படி பயன்படுத்தலாம் என்ற தகவலை இப்போது பார்க்கலாம்.

இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக கூகுள் பே புதிதாக UPI லைட் என்ற அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. UPI Lite என்பது புதிய லைட் வெர்ஷன் கூகுள் பே அம்சம் என்று நினைத்துவிடாதீர்கள், இது கொஞ்சம் வித்தியாசமான அம்சமாகும். கூகுள் பே யுபிஐ லைட் மூலம், Google Pay பயனர்கள் குறிப்பிட்ட அளவு சிறிய தொகையை PIN நம்பர் உள்ளிடாமல் மேற்கொள்ளலாம்.

இனி பணம் செலுத்த PIN நம்பர் தேவையில்லையா? கூகுள் பேவில் புது UPI Lite!

மளிகை சாமான்கள், உணவுகள் மற்றும் கேப் சவாரிகள் போன்ற அன்றாட செலவு போன்ற, குறைந்த அளவிலான தினசரி பணம் செலுத்தும் முறைக்கு இனி மக்கள் இந்த UPI Lite அம்சத்தை பயன்படுத்தலாம். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய ரிசர்வ் வங்கியால் UPI லைட் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) வடிவமைத்த டிஜிட்டல் கட்டண சேவையாகும்.

பயனர்கள் தங்கள் UPI லைட் கணக்கிலிருந்து ஒரு டச்சில் ரூ.200 வரை மட்டும் பணம் அனுப்ப முடியும். இந்த முறைப்படி, கட்டணத்தைத் தொடங்குவதற்கு பயனர்கள் பின் நம்பரை உள்ளிட வேண்டிய அவசியமில்லை. யுபிஐ லைட்டின் முக்கிய நோக்கமே, டிஜிட்டல் பேமெண்ட்டுகளை எளிமையாகவும் வேகமாகவும் செய்வதாகும்.

UPI லைட் பயனரின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அது நிகழ்நேரத்தில் வழங்கும் வங்கியின் முக்கிய வங்கி முறையை நம்பியிருக்காது. அதிக பரிவர்த்தனை நேரங்களிலும் UPI லைட் அதிக வெற்றி விகிதங்களை உறுதியளிக்கிறது. பயனர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரூ.2,000 வரை யுபிஐ லைட் கணக்கிற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.

இனி பணம் செலுத்த PIN நம்பர் தேவையில்லையா? கூகுள் பேவில் புது UPI Lite!

அதேபோல், UPI லைட் முறைப்படி ஒரு நேரத்தில் ரூ.200 வரை மட்டுமே பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு PIN உள்ளீடு தேவையில்லை. Paytm மற்றும் PhonePe போன்ற பிற தளங்கள் ஏற்கனவே தங்கள் தளங்களில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. தற்போது 15 வங்கிகள் இந்த சேவையை ஆதரிக்கின்றன.

Google Payயில் UPI லைட்டை இயக்குவது எப்படி?
Google Pay ஆப்ஸை ஓபன் செய்யவும்.
உங்கள் போனின் மேல் வலது மூலையில் உள்ள ப்ரொபைல் படத்தை கிளிக் செய்க.
கீழே ஸ்க்ரோல் செய்து 'UPI லைட்' அம்சத்தைக் கண்டறியவும்.
அதை கிளிக் செய்யவும்.
UPI Lite பற்றிய வழிமுறைகள் மற்றும் விவரங்களுடன் தகவல் காண்பிக்கப்படும்.
ஆக்டிவேட் UPI லைட் என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
உங்கள் வங்கிக் கணக்கை இணைத்து, டிஸ்பிளேவில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
பிறகு UPI லைட் செயல்படுத்தப்பட்டதாக உறுதிப்படுத்தும் மெசேஜ்ஜை பெறுவீர்கள்.
இப்போது நீங்கள் ரூ. 2,000 வரை உங்கள் UPI லைட் கணக்கில் பணத்தைச் சேர்க்கலாம்.

இந்த புதிய சேவையை பயன்படுத்தி குறைந்த அளவிலான தொகையை எளிமையாக PIN நம்பர் உள்ளீடு இல்லாமல் ஒரே டச்சில் இனி மேற்கொள்ள பழகுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay Introduces New UPI Lite Feature How To Activate It On Your Smartphone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X