Home
News

கொடுத்து வச்ச Google Pay பயனர்கள்.. இனி வெளிநாடுகளிலும் பரிவர்த்தனை செய்யலாம்.. புதிய ஒப்பந்தம்..

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர் என்பது தான் உண்மை.

யுபிஐ செயலிகள் செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூகுள் பே பயனர்களுக்கு ஒரு சந்தோஷமான தகவல் வெளியாகி உள்ளது.

Google Pay.. இனி வெளிநாடுகளிலும் பரிவர்த்தனை செய்யலாம்..

அதாவது இந்தியாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் யுபிஐ பரிவர்த்தனையை விரிவுபடுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூகுள் இந்தியா மற்றும் இந்திய பேமெண்ட் கார்ப்பரேஷனின் (NPCI) துணை நிறுவனமான என்.பி.சி.ஐ கையொப்பமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்த தகவல்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கூகுள் இந்தியா மற்றும் இந்திய பேமெண்ட் கார்ப்பரேஷனின் (NPCI)துணை நிறுவனமான என்.பி.சி.ஐ கையொப்பமிட்டுள்ள இந்த ஒப்பந்தம் மூலம் இனி வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி யுபிஐ மூலம் நேரடியாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கூகுள் இந்தியா மற்றும் என்.பி.சி.ஐ இடையே கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. அதாவது இந்தியாவுக்கு வெளியே செல்லும் பயணிகள் யுபிஐ பேமெண்ட் வசதியைப் பயன்படுத்தும் வாய்ப்பை அளிப்பது. அடுத்து மற்ற நாடுகளில் UPI போன்ற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளை நிறுவுவதற்கு உதவுவது மற்றும் யுபிஐ மூலம் நாடுகளுக்கு இடையே பணம் அனுப்புவதை எளிதாக்குதல் ஆகிய மூன்று நோக்கங்களை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.

அதேபோல் இந்த புதிய சேவை மூலம் வெளிநாட்டு வணிகர்கள் இந்திய வாடிக்கையாளர்களுடன் எளிமையாகப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாய்ப்பையும் வழங்கும். பின்பு இதன் மூலம் வெளிநாட்டு நாணயம் அல்லது கிரெடிட் அல்லது ஃபாரெக்ஸ் கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி பணம் செலுத்தவேண்டிய தேவை இனிமேல் இருக்காது.

மேலும் இதுகுறித்து கூகுள் பே (Google Pay) இந்தியாவின் இயக்குனர் தீக்ஷா கௌஷா தெரிவித்தது என்னவென்றால், சர்வதேசச் சந்தைகளுக்கு யுபிஐ-ன் வரம்பை விரிவுபடுத்துவதற்காக என்ஐபிஎல் ஆதரவு தெரிவிப்பதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல் எளிமையாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் பணம் செலுத்தும் சேவையை அளிக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Google Pay.. இனி வெளிநாடுகளிலும் பரிவர்த்தனை செய்யலாம்..

பின்பு இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL) சி.இ.ஓ. ரித்தேஷ் சுக்லா கூறியது என்னவென்றால், யுபிஐ-ஐ உலக அரங்கில் கொண்டு செல்ல கூகுள் பே உடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது இந்திய பயணிகளுக்காக வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளை எளிமையாக்குவது மட்டுமின்றி வெற்றிகரமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சுற்றுச்சூழலை மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தவும் உதவும் என்று கூறினார்.

உலகெங்கிலும் உள்ள வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் கூகுள் பே நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay has signed agreement with NPCI to use UPI outside India : check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X