Home
News

Google Pay-வில் FREE-ஆ கிடைக்கும் Flex கார்டு! பணம் அனுப்பினால் Star கிடைக்கும்.. 1 Star க்கு ரூ.1 கிடைக்கும்!

ஆக்சிஸ் வங்கி மற்றும் கூகுள் பே ஆகிய இரண்டும் ஒன்றிணைந்து கூகுள் பே ஃப்ளெக்ஸ் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டை (Google Pay Flex Axis Bank Credit Card) அறிமுகப்படுத்தி உள்ளன. இது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல்,யுபிஐ அடிப்படையிலான கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு ஆகும்.

இந்த கார்டு ரூபே நெட்வொர்க்கின் கீழ் இயங்குகிறது மற்றும் ஃப்ளெக்ஸ் பை கூகுள் பே (Flex by Google Pay) என்பதன் கீழ் வரும் முதல் தயாரிப்பு ஆகும், இது கூகுள் நிறுவனமானது கோ-பிராண்டட் கிரெடிட் கார்டு துறையில் நுழைவதை குறிக்கிறது.

Google Pay-வில் FREE-ஆ கிடைக்கும் Flex கார்டு!

இந்த கார்டு கிரெடிட் கார்டு பயன்பாட்டை யுபிஐ பாணியிலான கட்டணங்களுடன் ஒருங்கிணைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கூகுள் பே ஆப்பில் முழுமையாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் எந்த கட்டணமும் இல்லாமல் டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்கலாம், சில நிமிடங்களில் இந்த கார்டை பெறலாம் மற்றும் காகிதப்பணி இல்லாமல் பரிவர்த்தனை செய்ய தொடங்கலாம்.

மில்லியன் கணக்கான ஆஃப்லைன் வணிகர்கள் மற்றும் ரூபே நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படும் ஆன்லைன் ஆப்கள் மூலம் பணம் செலுத்தலாம். பரிவர்த்தனைகளில் பெறப்படும் ரிவர்ட்-களான "ஸ்டார்ஸ்" எனப்படும் ரிவார்ட் களை உடனடியாக ரீடீம் செய்யலாம். 1 ஸ்டார் ரூ.1 க்கு சமம்.

மேலும் இந்த கூகுள் பே ஃப்ளெக்ஸ் கிரெடிட் கார்டு பயனர்கள் தங்கள் செலவினங்களை கண்காணிக்கலாம், பில்களை முழுமையாக செலுத்தலாம் அல்லது நிலுவையில் உள்ள தொகைகளை நேரடியாக இஎம்ஐ-களாகவும் மாற்றலாம். பிளாக் அல்லது அன்பிளாக் விருப்பங்கள் மற்றும் பின் ரீசெட் உள்ளிட்ட கார்டு மேலாண்மை அம்சங்களும் கூகுள் பே ஆப்பிலேயே கிடைக்கின்றன.

இதுபற்றி ஆக்சிஸ் வங்கியின் கார்டுகள், பணம் செலுத்துதல் மற்றும் வெல்த் மேனேஜ்மென்ட் தலைவர் ஆன அர்னிகா தீட்சித் கூறுகையில், யுபிஐ ஆனது மிகவும் விருப்பமான கட்டண முறையாக உருவாகி வருவதால், டிஜிட்டல்-பர்ஸ்ட் நுகர்வோருக்கு ஏற்றவாறு கிரெடிட் சலுகையை இணைந்து உருவாக்குவதற்கான தெளிவான வாய்ப்பை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கூகுள் பே ஆப்பில் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த கார்டு, நவீன இந்திய வாழ்க்கை முறையை முழுமையாக பூர்த்தி செய்யும் ஒரு பாதுகாப்பான, வசதியான மற்றும் பலனளிக்கும் அனுபவத்தை வழங்குகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து கூகுள் பே தயாரிப்பு மேலாண்மையின் மூத்த இயக்குனர் ஆன ஷரத் புலுசு கூறுகையில், இந்தியாவில் டிஜிட்டல் பேமண்ட்ள் எங்கும் நிறைந்ததாக மாறியுள்ள நிலையில், பரிவர்த்தனை கிரெடிட் குறைவாகவே உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த இடைவெளியை குறைக்கவும், அடுத்த தலைமுறை பயனர்களுக்கான கார்டு அனுபவத்தை எளிமைப்படுத்தவும், மறுபரிசீலனை செய்யவும் நாங்கள் ஃப்ளெக்ஸ்- உருவாக்கினோம் என்று கூறியுள்ளார். மேலும் ரூபே-வின் ஏற்றுக்கொள்ளும் நெட்வொர்க், ஆக்சிஸ் வங்கியின் நிதி நிபுணத்துவம் மற்றும் கூகுள் பேவின் தளம் ஆகியவற்றின் கலவையானது பயனர்களுக்கு தினசரி பரிவர்த்தனைகள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நுகர்வோருக்கு நம்பகமான மற்றும் தடையற்ற டிஜிட்டல் கட்டண அனுபவங்களை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், மேலும் கூகுள் பே ஃப்ளெக்ஸ் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு அன்றாட கட்டணங்களை சிறந்ததாக்குவதன் மூலம் இந்த நோக்கத்தை மேலும் மேம்படுத்துகிறது என்று என்பிசிஐ -யின் வளர்ச்சி நிர்வாக இயக்குநர் ஆன சோஹினி ராஜோலா கூறி உள்ளார்

கூகுள் பே ஃப்ளெக்ஸ் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு வெளியீடு ஏற்கனவே தொடங்கி விட்டது, வரும் மாதங்களில் பரந்த அளவில் கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் கூகுள் பே ஆப் மூலம் காத்திருப்புப் பட்டியலில் சேரலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Pay Axis Bank Launched UPI Powered Flex Credit Card With Rewards Called Star
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X