Home
News

Google Pay கதை முடிந்தது.. ஜூன் 4ஆம் தேதி கெடு.. கூகுள் வாலெட் இருக்கா? அதை வெச்சிக்கோங்க!

இந்தியாவில் பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற பணப்பரிவர்த்தனை ஆப்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை கொண்டுவர திட்டமிட்டுள்ள நேரத்தில் கூகுள் பே யூசர்களுக்கு தூக்கி வாரிப்போடும் அறிவிப்பு வந்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்துக்கு எதிரான ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் (Reserve Bank of India) நடவடிக்கையானது, அடுத்து கூகுள் பே, போன்பே போன்ற ஆப்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. BHIM போன்ற உள்நாட்டு பேமெண்ட் ஆப்களை ஊக்குவிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Google Pay கதை முடிந்தது.. ஜூன் 4ம் தேதி கெடு.. கூகுள் வாலெட் இருக்கா!

இந்த சூழலில் கூகுள் பே ஆப் சேவைகள் வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதோடு கூகுள் வாலெட் (Google Wallet) மூலம் தொடர்ந்து பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளது. இந்த சேவை நிறுத்தம் அமெரிக்காவில் அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து, குழு தயாரிப்பு மேலாளர், கூகுள் பே (Group Product Manager, Google Pay) ஜோரிஸ் வான் மென்ஸ் (Joris van Mens) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு கூகுள் பே மூலம் எளிய மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை வழங்கி வருகிறோம். 180க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் கூகுள் பே ஆப்பை பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும், அமெரிக்காவில் ட்ரான்ஸிட் கார்டுகள், ஓட்டுநர் உரிமங்கள், மாநில ஐடிகள் மற்றும் ஸ்டோர்களில் டேப் அண்ட் பே போன்ற சேவைகளில் கூகுள் வாலெட் முதன்மையாக இருக்கிறது. சொல்லப்போனால், கூகுள் பே ஆப்பை விட கூகுள் வாலெட் ஆப் பயன்பாடு அமெரிக்காவில் 5 மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆகவே, கூகுள் பே ஆப்பின் அமெரிக்க வெர்ஷன் ஜூன் 4ஆம் தேதி முதல் பயன்படுத்தப்படாது.

Google Pay கதை முடிந்தது.. ஜூன் 4ம் தேதி கெடு.. கூகுள் வாலெட் இருக்கா!

இருப்பினும், கூகுள் பேவில் வழங்கப்பட்ட டேப் டூ பே (Tap to Pay) மற்றும் பேமெண்ட் முறைகளை கூகுள் வாலெட் ஆப்பில் (Google Wallet App) பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, அமெரிக்க யூசர்கள் கூகுள் பே ஆப்பை பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் (ஆன்லைனில் செக் அவுட் செய்வது முதல் கடைகளில் டேப் டூ பே வரையில்) கூகுள் வாலெட் ஆப்பை ஒரே மாதிரியாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்தியா மற்றும் சிங்கப்பூரில் கூகுள் பே ஆப்பை பயன்படுத்தும் மில்லியன் கணக்கான மக்களுக்கு, அந்த சேவைகளில் எந்தவித மாற்றமும் இருக்காது. அமெரிக்க வெர்ஷனில் மட்டும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஜூன் 4ஆம் தேதி வரையில் கூகுள் பே ஆப் செயல்பாட்டில் இருக்கும். அதன் பிறகு கூகுள் பே வெப்சைட் (Google Pay Website) மூலம் மட்டுமே பேமெண்ட் சேவைகள் வழங்கப்படும்.

இதில் பணப்பரிவர்த்தை மற்றும் பேலன்ஸ் பராமரிப்பு செய்து கொள்ளலாம். அதேபோல ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு கூகுள் பே ஆப்பில் பியர்-டு-பியர் பேமெண்ட்ஸ் மூலமும் பணம் அனுப்புதல் மற்றும் பெறுதலை செய்து கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சற்று பரபரப்பு அடைந்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Google Pay App Shutting Down in US From June 4 2024 Payments Methods Go With Google Wallet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X