Home
News

கூகுள் பே தளத்தில் புது அம்சம்: இனி ஒரு தட்டு தட்டினால் போதும்- பணம் உங்க கையில்!

ஆன்லைன் பேமெண்ட் தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் யூபிஐ பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சமீபத்தில் UPI ஆப்ஸ்களை இந்தியர்கள் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். முக்கிய நகரங்கள் முதல் துவங்கி. உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். டிஜிட்டல் பேமெண்ட சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்கு சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை தற்போது அதிகரித்து வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் செயலி

பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் செயலி

இந்தியாவில் பல்வேறு ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் பிரதான பயன்பாடாக இருப்பது கூகுள் பே என்றே கூறலாம். இந்தியாவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் செயலியான கூகுள் பே புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பணம் அனுப்புவதை எளிதாக்கும் வகையில் டேப் டூ பே அம்சத்தை கூகுள் பே அறிமுகப்படுத்தியுள்ளது. பைன் லேப் உடன் இணைந்து கூகுள் பே இந்த வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. யூபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கான ஸ்டெப்களின் எண்ணிக்கையை கூகுள் பே குறைத்திருக்கிறது. தற்போது வரை முழுமையாக இந்த அம்சம் பயனர்களுக்கு கிடைக்கவில்லை.

போனை டேப் செய்தால் மட்டுமே போதும்

போனை டேப் செய்தால் மட்டுமே போதும்

இந்த அம்சம் புதுப்பிப்பு வரும் காலத்தில் அனைத்து கடைகளின் பரிவர்த்தனை பயனர்களுக்கும் கிடைக்கும். இந்த அம்சத்தின் விவரங்கள் குறித்து பார்க்கையில், கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் ஸ்கேன் செய்வதற்கு பதிலாக அவரது போனை டேப் செய்தால் மட்டுமே போதுமானது. டேப் செய்வதன் மூலம் கூகுள் பே செயலிக்கு தானாக சென்று யூபிஐ பின் கேட்கப்படும், தொடர்ந்து யூபிஐ பாஸ்வேர்ட் மட்டும் டைப் செய்தால் பணம் விரைவாக அனுப்பப்படும். இந்த வசதியின் மூலம் பயனர்கள் ஒவ்வொரு முறையும் கூகுள் பே தளத்துக்குள் சென்று கேமராவை ஓபன் செய்து பணம் அனுப்ப வேண்டிய தேவை இருக்காது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் உடன் தொடக்கம்

ரிலையன்ஸ் ரீடெய்ல் உடன் தொடக்கம்

கூகுள் இந்த வசதியை ரிலையன்ஸ் ரீடெய்ல் உடன் முன்னோடியாக தொடங்கப்பட்டுள்ளது. ஃப்யூச்சர் ரீடெய்ல் மற்றும் ஸ்டார்பக்ஸ் போன்ற பெரிய சில்லறை விற்பனையாளர்களுக்கு பணம் செலுத்தும் போது இந்த அம்சம் கிடைக்கும் என கூறப்படுகிறது. விற்பனையாளர்கள் மற்றும் கடைகளில் பயன்படுத்தும் கார்டு இயந்திரங்களில் உள்ள பிஓஎஸ் டெர்மினலில் தங்களை ஸ்மார்ட்போன்கலை தட்டுவதன் மூலம் பயனர்கள் பணம் செலுத்தலாம். அதிக வாடிக்கையாளர்களை பெறும் சில்லறை விற்பனை நிலையங்களில் உள்ள கூட்ட நெரிசல் மற்றும் வரிசையை வெகுவாக குறைக்க இந்த அம்சம் வருகிறது. இதுகுறித்து பைன் லேப்ஸ் தெரிவித்த அறிக்கையில், இது நாட்டில் உள்ள அதிவேக யூபிஐ பரிவர்த்தனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

கூகுள் பே டேப்-ஐ எவ்வாறு பயன்படுத்துவது

கூகுள் பே டேப்-ஐ எவ்வாறு பயன்படுத்துவது

பணம் செலுத்துவதற்கு கூகுள் பே டேப்-ஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்

பணம் செலுத்த பயனர்கள் தங்கள் மொபைலை பிஓஎஸ் டெர்மினலில் தட்ட வேண்டும்.

க்யூஆர் ஸ்கேனிங் பரிவர்த்தனை போன்றே இதற்கும் இணைய இணைப்பு தேவை என்பது கவனிக்கத்தக்க ஒன்று. யூபிஐ பின்-ஐ பயன்படுத்தி போனில் இருந்து பணம் செலுத்துவதற்கான அங்கீகாரம் பயனரிடம் இருந்து கிடைத்த உடன் பரிவர்த்தனை நடைபெறும்.

இந்த புதிய அம்சத்தின் மூலம் உங்கள் கட்டண பரிவர்த்தனையை இரண்டு ஸ்டெப்கள் குறைக்கிறது. செயலியை ஓபன் செய்து கேமராவுக்கு செல்ல வேண்டிய தேவை இதற்கு இல்லை.

பிரதான பயன்பாடாக வளரும் டிஜிட்டல் பேமெண்ட்

பிரதான பயன்பாடாக வளரும் டிஜிட்டல் பேமெண்ட்

ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. ஆன்லைன் பெண்ட் பிரிவில் கூகுள் பே என்பது இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. கூகுள் பே-ல் உள்ள பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கும் வணிகர்களுக்கும் ஒரு பட்டணை அழுத்துவதன் மூலம் பண பரிவர்த்தனை செய்யலாம். சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை வாசலில் க்யூ ஆர் கோட் வைத்து பரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Google Pay announced to Launch Tap to Pay Feature: New feature for Transfer money quickly
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X