என்ன இப்படி ஆகிடுச்சு? Password-களை ஒழித்துக்கட்ட ஆரம்பித்த Google.. இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

|

கூகுள் (Google) நிறுவனத்தின் ஒரு சமீபத்திய நடவடிக்கையானது, வெப்சைட் மற்றும் ஆப்களை பாஸ்வேர்ட்களை பயன்படுத்தி பாதுகாத்து வரும் பயனர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

அதென்ன நடவடிக்கை? பாஸ்வேர்ட்களை ஒழித்துக்கட்டும் அளவிற்கு கூகுளில் என்ன நடக்கிறது? இதோ விவரங்கள்:

பாஸ்வேர்ட்களுக்கு குட்-பை!

பாஸ்வேர்ட்களுக்கு குட்-பை!

உலகின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் (Google), பாஸ்வேர்ட் தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அந்த மாற்றம் கூகுள் க்ரோமில் (Google Chrome) எதிரொலிக்கிறது.

அதாவது கூகுள் அதன் பயனர்களுக்காக பாஸ்கீ (Passkey) என்கிற ஒரு அம்சத்தை / ஆதரவை அறிமுகம் செய்துள்ளது.

பாஸ்கீ என்றால் என்ன? இதனால் என்ன பயன்? இதுவந்த பிறகு கூகுளில் உங்கள் பாஸ்வேர்டுகள் என்ன ஆகும்? இந்த மாற்றம் எங்கெல்லாம் பொருந்தும்?

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

பாஸ்கீ (Passkey) என்றால் என்ன?

பாஸ்கீ (Passkey) என்றால் என்ன?

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - பாஸ்கீஸ் (Passkeys) என்பது பாஸ்வேர்ட்களுக்கான (Passwords) ஒரு பாதுகாப்பான மாற்று ஆகும்.

இதுநாள் வரையிலாக, நம்முடைய டிஜிட்டல் வாழ்க்கையின் முக்கிய பாதுகாவலாக இருந்தாலும் கூட, பாஸ்வேர்ட்கள் எப்போதுமே ஆபத்தானவைகள் தான். ஏனென்றால் பாஸ்வேர்ட்கள் ஆனது திருடப்படலாம்; ஹேக் (Hack) செய்யப்படலாம்; ஃபிஷ் (Phish) செய்யப்படலாம்.

அது மட்டுமில்லாமல் நம்மில் பலரும், மிகவும் எளிமையான மற்றும் யூகிக்கக்கூடிய பாஸ்வேர்ட்களையே பயன்படுத்தி வருகிறோம். எனவே தான், மக்கள் பாஸ்வேர்ட்களுக்கு பதிலாக பாஸ்கீகளை பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் விரும்புகிறது!

பாஸ்கீ-யில் பாதுகாப்பு ஓட்டை இருக்காதா?

பாஸ்கீ-யில் பாதுகாப்பு ஓட்டை இருக்காதா?

கூகுளின் கூற்றுப்படி, பாஸ்கீகளை மீண்டும் பயன்படுத்த முடியாது, அது சர்வர் மீறல்களின் (Server breaches) வழியாக லீக் ஆகாது; ஃபிஷிங் அட்டாக்களில் இருந்து உங்களை வெகுதூரம் கொண்டு செல்லும்.

அதுமட்டுமின்றி பாஸ் கீ-யில் இன்னொரு நல்ல விஷயமும் உள்ளது, அது என்னவென்றால், அவைகளை வெவ்வேறு ஆப்ரேட்டிங் சிஸ்டம்ஸ் (Operating Systems) மற்றும் ப்ரவுசர்களில் (browser) வேலை செய்யும். மேலும் வெப்சைட்டுகள் மற்றும் ஆப்கள் என இரண்டிலுமே பயன்படுத்தலாம்!

பாஸ்கீஸ் - யாருக்கெல்லாம் அணுக கிடைக்கிறது?

பாஸ்கீஸ் - யாருக்கெல்லாம் அணுக கிடைக்கிறது?

கூகுள் க்ரோமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாஸ்கீ-களை பயன்படுத்த விரும்புபவர்கள், தங்களது க்ரோம்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

அறியாதோர்களுக்கு தற்போது இது Windows 11, macOS மற்றும் Android-ல் அணுக கிடைக்கிறது. ஆக எந்தெந்த வலைதளங்கள் மற்றும் ஆப்கள் ஆனது பாஸ்கீக்கான ஆதரவை வழங்குகிறதோ அவைகளில் அதை பயன்படுத்த முடியும்!

பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த "எமன்".. என்னது அது?

அப்போ அவ்ளோ தானா.. பாஸ்வேர்ட்களின் கதை முடிகிறதா?

அப்போ அவ்ளோ தானா.. பாஸ்வேர்ட்களின் கதை முடிகிறதா?

அப்படி சொல்லிவிட முடியாது.ஏனென்றால் பாஸ்கீஸ் என்பது இது பாஸ்வேர்ட்களை மாற்றுவதற்கான ஒரு ஆரம்ப கட்டமே ஆகும். கூகுளும் கூட இதையே தான் சொல்கிறது.

கூகுளின் கூற்றுப்படி, இந்த மாற்றம் நடந்துகொண்டிருக்கும் மறுகையில், பாஸ்வேர்ட்கள் தொடர்ந்து நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும்.

அதாவது கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் (Google Password Manager) ஆனது வழக்கம் போல செயல்படும்; பாதுகாப்பான மற்றும் எளிமையான லாக்-இன்களை வழங்கும்.

அதாவது கூகுள் என்ன சொல்ல வருகிறது என்றால்.. எல்லா டெவலப்பர்களும் தங்கள் ஆப்ஸ் மற்றும் இணையதளங்களில் பாஸ்வேர்ட்களுக்கு பதிலாக பாஸ்கீகளை ஏற்க சிறிது காலம் ஆகும்; அதுவரையிலாக பாஸ்வேர்ட்கள் எங்கும் போகாது!

Best Mobiles in India

English summary
Google Passkey Is Now Available For Chrome Users Why It Is A Best Alternative For Password

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X