Sundar Pichai: கூகுள் மூலம் ரூ. 5.7 லட்சம் கோடி சம்பாத்தியம்., யார், எதற்கு தெரியுமா?

|

ஆண்ட்ராய்டு மொபைலாக இருந்தாலும் சரி, ஐஓஎஸ் ஆக இருந்தாலும், நாம் அனைவரும் நமது ஸ்மார்ட்போன்களை மிகவும் நேசிப்போம். இந்த ஸ்மார்ட் இயங்குதளங்கள் வழங்கும் வசதிகளுக்காக மட்டுமல்லாமல், உண்மையில் அவற்றின் ஆப் ஸ்டோரில் உள்ள செயலிகள் ஒவ்வொன்றும், ஸ்மார்ட்போன்களின் முழு அனுபவத்தையும் மிகவும் மதிப்புக்குரியதாக மாற்றுகின்றன.

கூகிள் ப்ளே ஸ்டோர்

கூகிள் ப்ளே ஸ்டோர்

கூகிள் ப்ளே ஸ்டோர் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை, ஆப் டெவலப்பர்கள் (செயலி வடிவமைப்பாளர்கள்) 80 பில்லியன் டாலருக்கும் அதிகமாக (சுமார் 5.7 லட்சம் கோடி ரூபாய்) சம்பாதித்துள்ளனர் என கூகுள் நிறுவனம் தற்போது அறிவித்ததுள்ளது.

ஆல்பாபெட்

ஆல்பாபெட்

கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் அதன் 2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான வரவுசெலவு விவரங்களை வெளியிட்ட பிறகு இந்த தகவல்கள் உலகிற்கு தெரியவந்துள்ளது. தற்போது பகிரப்பட்டுள்ள இந்த வருவாய் கணக்குகள் சீனாவைச் சேர்ந்த டெவலப்பர்களை தவிர்த்தது ஆகும். கூகிளின் மூத்த துணைத் தலைவர் ஹிரோஷி லாக்ஹைமர் இது குறித்து ட்வீட் செய்கையில், ஆண்ட்ராய்டு இயங்குதளம் செழிக்க உதவிய டெவலப்பர் சமூகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

குறி வச்சுட்டா 200 கி.மீ-க்கு அந்த பக்கம் இருந்தாலும் தாக்குவோம்: புது வகை ஏவுகணை தயாரிப்பு?குறி வச்சுட்டா 200 கி.மீ-க்கு அந்த பக்கம் இருந்தாலும் தாக்குவோம்: புது வகை ஏவுகணை தயாரிப்பு?

அதிக டெவலப்பர்களை கொண்ட கூகுள் ப்ளே

அதிக டெவலப்பர்களை கொண்ட கூகுள் ப்ளே

2017 ஆம் ஆண்டின் ஆராய்ச்சியின் படி, கூகிள் ப்ளே ஸ்டோரில் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலிகளை உருவாக்க 724,000 டெவலப்பர்கள் உள்ளனர். மாறாக 494,000 டெவலப்பர்கள் மட்டுமே iOS சாதனங்களுக்கான (ஐபோன்கள் / ஐபாட்கள்) செயலிகளை உருவாக்குகிறார்கள். ப்ளே ஸ்டோரில் டெவலப்பர்களின் எண்ணிக்கை நிறைய இருப்பதாகத் தோன்றினாலும், ஆப்பிள் டெவலப்பர்களால் அதிக பணம் சம்பாதிக்க முடிகிறது.

அதிகம் சம்பாதிக்கும் ஆப்பிள் டெவலப்பர்கள்

அதிகம் சம்பாதிக்கும் ஆப்பிள் டெவலப்பர்கள்

2008 ஆம் ஆண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோர் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் டெவலப்பர்கள் 120 பில்லியன் டாலர் (சுமார் ரூ 8.5 லட்சம் கோடி) சம்பாதித்ததாக ஆப்பிள் 2019ஆம் ஆண்டு தெரிவித்தது. இதே ஆண்டு தான் கூகுள் அதன் ஆண்ட்ராய்டு மார்க்கெட்-ஐ அறிமுகப்படுத்தியது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அது ப்ளே ஸ்டோர் என மறுபெயரிடப்பட்டது.

ஏன் இப்படி?

ஏன் இப்படி?

சந்தையில் ஆண்ட்ராய்டு சாதனங்களுடன் ஒப்பிடுகையில் குறைவான ஐஓஎஸ் சாதனங்களே உள்ளன என்பது இன்னும் ஆச்சரியமளிக்கிறது. ஆனால் பலரும் உணராதது என்னவென்றால், ஐஓஎஸ் உடன் ஒப்பிடும்போது ப்ளே ஸ்டோரில் ஏகப்பட்ட இலவச செயலிகள் உள்ளன. மேலும் விலையுயர்ந்த சாதனங்களை வாங்கும் நபர்கள் ஒரு செயலிக்கு பணம் செலுத்துவதைப் பொருட்படுத்த மாட்டார்கள் எனும் போது, குறைவான பட்ஜெட்-ல் மொபைல் வாங்கும் ஆண்ராய்டு பயனர்கள் இலவச செயலிகளையே நாடுவர்.

Indian Railways: புதிய வசதியை அறிமுகம் செய்த ஐஆர்சிடிசி: இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.!Indian Railways: புதிய வசதியை அறிமுகம் செய்த ஐஆர்சிடிசி: இனிமேல் அந்த பிரச்சனை இருக்காது.!

 30 சதவிகிதம் குறைத்துள்ளது

30 சதவிகிதம் குறைத்துள்ளது

மேலும், கூகுள் ப்ளே தளத்தில் செயலிகளின் விற்பனையில் 30 சதவிகிதம் குறைத்துள்ளது. இதன் அடிப்படையில் பார்த்தால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. சுமார் 114 பில்லியன் டாலர் (ரூ. 8.1 லட்சம் கோடிக்கு மேல்) இருந்திருக்கலாம்.

​​

Best Mobiles in India

English summary
Google Paid 5.7 Lakh Crore to App Developers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X