Home
News

அதர பழசு.. Google-ஏ இப்படி பண்ணா எப்படி.. Pixel 9a பற்றி வெளியான பகீர் தகவல்.. நல்லது இப்போவே தெரிஞ்சுடுச்சு!

சில தினங்களுக்கு முன்னர், கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் "பட்ஜெட்-விலை" ஸ்மார்ட்போன் ஆக, அதாவது பிக்சல் 9 சீரீஸின் (Google Pixel 9 Series) கீழ் கிடைக்கும் மலிவான ஆப்ஷன் ஆக பிக்சல் 9ஏ (Google Pixel 9a) மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இது ரூ.50,000 க்குள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 2025 ஏப்ரல் முதல்விற்பனைக்கு வர உள்ளது.

"பட்ஜெட் மாடலாக இருப்பதால் இது, மற்ற பிக்சல் 9 சீரீஸில் உள்ள சில பிரீமியம் அம்சங்களை (Premium Features) தியாகம் செய்யலாம். அதற்காக இப்படியா?" என்று கேட்கத் தூண்டும் படியான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் மோடம் ஆனது மற்ற பிக்சல் 9 மாடல்களில் காணப்படும் மோடத்துடன் ஒப்பிடும் போது பழைய மாடலை (Older Modem in Google Pixel 9a) பயன்படுத்துகிறது.

Google-ஏ இப்படி பண்ணா எப்படி.. Pixel 9a பற்றி வெளியான பகீர் தகவல்!

புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் எக்ஸினோஸ் 5300 மோடம் (Samsung Exynos 5300 modem) உள்ளதை கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. நினைவூட்டும் வண்ணம் எக்ஸினோஸ் 5300 மோடம் என்பது கடந்த அக்டோபர் 2022 இல் கூகுள் நிறுவனம் அதன் பிக்சல் 7 சீரிஸ் (Google Pixel 7 Series) உடன் அறிமுகப்படுத்தப்பட்ட அதே மோடம் ஆகும்.

இது கூகுள் பிக்சல் 6 (Google Pixel 6) ஸ்மார்ட்போனின் ஷானான் ஏ5123 5ஜி (Shannon A5123 5G) மோடமின் மேம்படுத்தலாக அறிமுகமானது. இது கால் டிராப்ஸ் மற்றும் மெதுவான 5ஜி ஸ்பீட் (Call drops and slow 5G speeds.) போன்ற பொதுவான சிக்கல்களால் பாதிக்கப்பட்டதற்காக பரவலாக விமர்சிக்கப்பட்ட மோடம் ஆகும்.

இருப்பினும், எக்ஸினோஸ் 5300 மோடமில் அந்த சிக்கல்கள் காணப்படவில்லை. ஆனால் பயனர்கள் அதிக பேட்டரி நுகர்வு மற்றும் நெட்வொர்க் முறிவுகளை (high battery consumption and network breaks) எதிர் கொள்வதாக தெரிவித்தனர். அதன் பின்னர் கூகுள் அதன் லேட்டஸ்ட் பிக்சல் 9 சீரீஸ் மற்றும் எக்ஸினோஸ் 5400 (Exynos 5400) வழியாக அந்த சிக்கல்களையும் சரி செய்தது.

ஆனால் புதிய பிக்சல் 9ஏ மாடலில் பழைய எக்ஸினோஸ் 5300 மோடமையே பேக் செய்து உள்ளது. இது பிக்சல் 9ஏ மாடலின் விற்பனையை கடுமையாக பாதித்தாலும் ஆச்சரியப்படுவதற் இல்லை. பிளாக்ஷிப் பிக்சல் 9 சீரீஸில் புதிய எக்ஸினோஸ் 5400 மோடம் பொருத்தப்பட்டுள்ளது. இது 3GPP ரிலீஸ் 17 தர நிலையின் காரணமாக ஹையர் பீக் டவுன்லிங்க் ஸ்பீட் மற்றும் செயற்கைக்கோள் இணைப்பை (higher peak downlink speeds and satellite connectivity) ஆதரிக்கிறது, அதே நேரத்தில் பேட்டரி லைஃப்பையும் (Battery Life) மேம்படுத்துகிறது.

சுவாரசியமாக பிக்சல் 9ஏ ஆனது பிக்சல் 9 சீரீஸ் மாடல்களை போலவே டென்சர் ஜி4 சிப்செட்டால் (Google Tensor G4 Chipset) இயக்கப்படுகிறது. இருந்தாலும் கூட கனெக்டிவிட்டி க்கு வரும்போது அது மாறுபடுகிறது. பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் மோடம் மற்ற பிக்சல் 9 சீரீஸ் மாடல்களின் FOPLP (ஃபேன்-அவுட் பேனல் லெவல் பேக்கேஜிங் - Fan-Out Panel Level Packaging) தொகுப்பிற்கு மாறாக IPoP-ஐ (இன்டெக்ரேடட் பேக்கேஜ் ஆன் பேக்கேஜ் - Integrated Package on Package) பயன்படுத்துகிறது.

Take a Poll

பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் (Google Pixel 9a Specifications):
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS)
- 7 ஆண்டுகளுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும்
- டூயல் சிம் (நானோ+இசிம்)
- 60Hz மற்றும் 120Hz இடையேயான ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)
- 2700 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் (Gorilla Glass 3 Protection)
- 6.3-இன்ச் (1080 x 2424 பிக்சல்ஸ்) ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே

- நான்காவது தலைமுறை டென்சர் ஜி4 சிப்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- எக்ஸ்டர்னல் மெமரி கார்டு ஆதரவு கிடையாது
- டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup)

- 1/2-இன்ச் சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், குளோஸ்டு-லூப் ஆட்டோஃபோகஸ் மற்றும் f/1.7 அபெர்க்ஷர் கொண்ட 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா (இது 8x வரை சூப்பர் ரெஸ் ஜூமையும் ஆதரிக்கிறது)
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா (இது 120 டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் f/2.2 அபெர்க்ஷரை கொண்டுள்ளது)
- முன்பக்கத்தில் f/2.2 அபெர்க்ஷர் கொண்ட 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- மேக்ரோ ஃபோகஸ், ஆட் மீ, நைட் சைட், ரீமேஜின், மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக், போட்டோ அன்பிளர் மற்றும் போர்ட்ரெய்ட் லைட் உள்ளிட்ட பல கேமரா தொடர்பான அம்சங்களுக்கான ஆதரவு
- ரியர் கேமராவை பயன்படுத்தி 4K/60fps வரை ரெக்கார்டிங் (இது 5x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது)
- செல்பீ கேமராவில் 4K/30fps வீடியோ ரெக்கார்டிங்

- ஆடியோ மேஜிக் ஏரேசர், மேக்ரோ ஃபோகஸ் வீடியோ, சினிமாடிக் பான், ஸ்லோ-மோ (240fps), டைம்லேப்ஸ் ஸ்டெபிலைசேஷன், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி டைம்லேப்ஸ், நைட் சைட் டைம்லேப்ஸ், ஆப்டிகல் வீடியோ ஸ்டெபிலைசேஷன், ஃபியூஸ்டு வீடியோ ஸ்டெபிலைசேஷன் மற்றும் சினிமாடிக் பான் வீடியோ ஸ்டெபிலைசேஷன் ஆகிய வீடியோ அம்சங்கள்

- 5100mAh பேட்டரி
- கூகுளின் 45W பவர் அடாப்டருடன் பயன்படுத்தும்போது 23W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7.5W வயர்லெஸ் (Qi) சார்ஜிங்
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணிநேர பேட்டரி லைஃப்
- எக்ஸ்ட்ரீம் பேட்டரி சேவர் மோட்-ல் 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஃபேஸ் அன்லாக் ஆதரவு

புதிய பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் (Google Pixel 9a Price and Sale Details): இந்தியாவில் கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போன் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சிங்கிள் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஐரிஸ், அப்சிடியன், பியோனி மற்றும் போர்சலைன் ஆகிய 4 கலர்களில், ஏப்ரல் 2025 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்; சரியான தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Packed Older Modem in Pixel 9a Compared to Pixel 9 Series Models All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X