Home
News

தேட வேண்டாம்! இனிமேல் இந்த பட்டன் Google Search பக்கத்தில் கிடைக்காது.. திடீர் அறிவிப்பு.. பயனர்கள் குழப்பம்!

பொதுவாக கூகுள் (Google) நிறுவனம் சரியான காரணத்தை சொல்லாமல், பயனர்களுக்கு முறையான விளக்கத்தை அளிக்காமல்.. எந்தவொரு வேலையையும் செய்யாது; குறிப்பாக எதையும் திடீரென நீக்காது. ஆனால் தற்போது அப்படியான ஒரு வேலையை கூகுள் பார்த்துள்ளது. அப்படி எதை நீக்கியுள்ளது? இதோ விவரங்கள்:

கூகுள் எதை நீக்குகிறது? கூகுள் நிறுவனம் தனது சேர்ச் ரிஸல்ட்களில் (Search Results) இருந்து கேச்ட்டு பட்டனை (Cached Button) அகற்றுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நினைவூட்டும் வன்ணம், கேச்ட்டு பட்டன் ஆனது, கூகுளால் கடைசியாக பார்வையிடப்பட்ட மற்றும் இன்டெக்ஸ்டு (Last visited and Indexed) செய்யப்பட்ட பக்கத்தின் பதிப்பை பார்க்க பயனர்களை அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

Google Search பக்கத்தில் இனிமேல் இந்த பட்டன் கிடைக்காது!

கேச் பட்டன் நீக்கப்பட்ட என்ன காரணம்? இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த, கூகுள் சேர்ச் இணைப்பாளர் டேனி சல்லிவன், "விஷயங்கள் பெரிதும் மேம்பட்டுள்ளன" என்பதால், சேர்ச் ரிசல்ட்களில் இருந்து இந்த அம்சம் அகற்றப்பட்டது என்று கூறியுள்ளார். இருப்பினும் அவர் கூகுளின் இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள சரியான காரணத்தை குறிப்பிடவில்லை.

முன்னதாக கேச் பட்டன் அனைத்து சேர்ச் ரிசல்ட்ளுக்கும் அடுத்ததாக தோன்றியது. பின்னர் அபௌட் திஸ் ரிசல்ட் (About This Result) என்கிற விருப்பத்தின் கீழ் இடமாற்றம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட வலைப்பக்கத்தில், சற்று அவுட்-டேடட் வெர்ஷனை (Outdated version of a webpage) பார்க்க விரும்பினால் அல்லது.. செயலிழந்த அல்லது வேலை செய்யாத இணையதளத்தை (Down or not working website) பார்க்க விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும்.

Google Search பக்கத்தில் இனிமேல் இந்த பட்டன் கிடைக்காது!

மேலும் வெப்சைட்டின் வேலிடிட்டியை (Validity of a website) சரிபார்க்க விரும்பும் பயனர்கள் மற்றும் தங்கள் பக்கத்தில் உள்ள பிழைகளுக்கு (Page for errors) சரிபார்க்க விரும்பும் எஸ்சிஓ மேனேஜர்களுக்கும் (SEO Managers) கூட இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சிலர் ஜியோ-பிளாக்டு வலைத்தளங்களை (Geo-blocked websites.) அணுகுவதற்காக கூட இந்த கேச்ட்டு பட்டனை பயன்படுத்துகின்றனர்.

சேர்ச் ரிசல்ட்களில் இருந்து கேச்ட்டு பட்டன் மறைந்துவிட்டாலும் கூட, கூகுள் சேர்ச்சில் உள்ள இணைப்பின் ப்ரெபிக்ஸ்-ல் கேச்: என்று டைப் செய்வதன் (Type 'cache:' as a prefix in Google Search Link) மூலம், பயனர்கள் வலைப்பக்கத்தின் கேச்ட்டு வெர்ஷனை அணுகலாம்.

Google Search பக்கத்தில் இனிமேல் இந்த பட்டன் கிடைக்காது!

இருப்பினும், இந்த செயல்பாடு விரைவில் நிறுத்தப்படும் என்பதையும் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் இது எப்போது அகற்றப்படும் என்பது குறித்த சரியான தேதி அல்லது டைம்லைனை (Date or Timeline) கூகுள் நிறுவனம் பகிரவில்லை. பெரும்பாலும் இது நீண்ட காலத்திற்கு கிடைக்காது; இதுவும் கூடிய விரைவில் அகற்றப்படும்.

கூகுள் சேர்ச் இணைப்பாளர் ஆன டேனி சல்லிவன், இன்டர்நெட் ஆர்கைவ்வில் இருந்து கேச்ட்டு பட்டன் ஆனது இணைப்புகளுடன் ரீபிளேஸ் (Replace cached button with links from Internet Archive) செய்யும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார். ஆனால் கூகுள் நிறுவனம் அது தொடர்பான வேலைகளில் ஈடுபடுவது போல் தெரியவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google officially confirmed removing cached button from search results Because Things Improved
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X