இந்திய மாணவருக்கு கூகுளில் ரூ.62 லட்சம் சம்பளம்!!

|

உலக அளவில் பிரபலமாக இருக்கும் இன்டர்நெட் கம்பெனியான கூகுள், கொல்கத்தாவில் இருக்கும் பிரபல கல்லூரியான ISIயில் (Indian statistical institute) M.Tech படிக்கும் ஒரு மாணவரை தனது நிறுவனத்திறக்கு தேர்வு செய்துள்ளது. அவருக்கு சம்பளம் ரூ.62 லட்சம் ஆகும்.

ISI கல்லூரியின் 82 ஆண்டு கால வரலாற்றில் தங்கள் கல்லூரியில் படித்த மாணவர் ஒரு இன்டர்நேஷ்னல் கம்பெனியில் இவ்வளவு அதிக சம்பளத்துடன் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என அந்த கல்லூரியின் டீன் தெரிவித்தார்.

இந்திய மாணவருக்கு கூகுளில் ரூ.62 லட்சம் சம்பளம்!!

கடந்த ஆண்டில் ரூ.28 லட்சம் சம்பளத்தில் ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டதே இதுவரை அதிகபட்ச சம்பளமாக இருந்து வந்தது. இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் உள்ளனர். இதன் கிளைகள் டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களிலும் உள்ளன.

கடந்த ஆண்டு இந்த கல்லூரியில் 43 கம்பெனிகள் மாணவர்களை தேர்வு செய்தனர், இந்த ஆண்டு 50க்கும் அதிகமான கம்பெனிகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதன் பிளேஸ்மென்ட் ஆபீஸர் தெரிவித்தார். கடந்த ஆண்டு தேர்வான மாணவர்களின் சராசரி சம்பளம் ரூ.12 லட்சம் ஆகும்.

இவ்வளவு அதிக சம்பளத்தில் மாணவர்களை தங்கள் நிறுவனத்திற்க்கு தேர்வு செய்வது கூகுளுக்கு புதிதல்ல. ஏற்கனவே Delhi Technological Universityயில் ஒரு மாணவரை ரூ.93 லட்சம் சம்பளத்திலும் மற்றும் NIT Warangalல் ஒரு மாணவரை ரூ. 84.6 லட்சம் சம்பளத்தில் தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X