Home
News

Google-க்கு கும்பிடு.. செப்டம்பர் 15 கடைசி.. ரூ.19,500-க்கான இலவச மெம்பர்ஷிப்.. மாணவர்கள் எப்படி பெறுவது?

இந்திய மாணவர்களுக்கு ரூ.19,500 மதிப்பிலான கூகுள் ஒன் மெம்பர்ஷிப் (Google One Membership) ஆஃபரை அந்த நிறுவனம் கொடுக்கிறது. கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro), ஜெமினி வியோ 3 ஃபாஸ்ட் (Gemini Veo 3 Fast), டீப் ரிசர்ச் (Deep Research) போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் சலுகைகளையும் கொடுக்கிறது. இந்த ஜெமினி அப்கிரேட்டை எப்படி பெறுவது? எந்தெந்த மாணவர்களுக்கு இது கிடைக்கும்? உள்ளிட்ட முழு விவரங்கள் இதோ.

1 வருட ஜெமினி அப்கிரேட் (1 Year Gemini Upgrade): இந்த அப்கிரேட் மூலம் ஒரு வருடத்துக்கு கூகுள் ஒன் மெம்பர்ஷிப்பை இலவசமாக பெற்று கொள்ளலாம். இதில் கூகுள் ஏஐ ப்ரோ, ஜெமினி விஐ3 பாஸ்ட், டீப் ரிசர்ச், நோட்புக்எல்எம் மற்றும் 2 டிபிக்கான ஸ்டோரேஜ் ஆகிய சலுகைகள் இலவசமாக கொடுக்கப்படும். ரைட்டிங், ஹோம்வொர்க் போன்றவற்றில் கூகுள் ஏஐ ப்ரோ உதவியாக இருக்கும்.

Google-க்கு கும்பிடு.. செப்டம்பர் 15 கடைசி.. ரூ.19,500-க்கான சலுகை!

ஜெமினி 2.5 ப்ரோ (2.5 Pro) மாடல் மூலம் இந்த இந்த அவுட்புட் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜெமினி விஐ3 பாஸ்ட் ஏஐ மாடலில் வீடியோ ஜெனரேஷன் செய்து கொள்ளலாம். டீப் ரிசர்ச் மூலம் குறிப்பிட்ட தலைப்புகளில் ஒரு ரீப்போர்ட்டை தயார் செய்து கொள்ளலாம். மேலும், ஆடியோ ஓவர்வியூ (Audio Overview), ஜெமினி லைவ் (Gemini Live) போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன.

மேலும், 2 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதை கூகுள் டாக்ஸ் (Google Docs), கூகுள் டிரைவ் (Google Drive), கூகுள் போட்டோஸ் (Google Photos) போன்ற கூகுள் ஆப்களின் பயன்படுத்தி கொள்ளலாம். நோட்புக்எல்எம் மூலம் ஏஐ ரிசர்ச் அசிஸ்டன்ட்டை (AI Research Assistant) பயன்படுத்தி கொள்ள முடியும். பிடிஎப், வீடியோ, டாக்ஸ் போன்ற எந்த ஃபைல்கள் மூலம் டாப்பிக் எடுக்கலாம்.

கூகுள் ஒன் மெம்பர்ஷிப் ஆஃபர் விதிமுறைகள்: இந்த மெம்பர்ஷிப்பை கல்லூரி மாணவர்கள் மட்டுமே பெற முடியும். ஆகவே, 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் மட்டுமே அப்ளை செய்து பெற்று கொள்ள முடியும். அதேபோல இந்தியாவை சேர்ந்த் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் கொடுக்கப்படும்.

Google-க்கு கும்பிடு.. செப்டம்பர் 15 கடைசி.. ரூ.19,500-க்கான சலுகை!

இதை பர்சோனல் கூகுள் அக்கவுண்ட்டில் (Personal Google Account) மட்டுமே பெற்று கொள்ள முடியும். கூகுள் பேமெண்ட் அக்கவுண்ட் மூலம் பேமெண்ட்டை பதிவு செய்ய வேண்டி இருக்கும். ஆனால், பணம் டெபிட் செய்யப்படாது. கூகுள் பே, போன்பே போன்ற ஏதாவது ஒரு யுபிஐ அல்லது ஆன்லைன் பேமெண்ட் ஆப்ஷன்களை தயார் செய்து வைத்து கொள்ளுங்கள்.

கூகுள் ஒன் மெம்பர்ஷிப்பை எப்படி பெறுவது? கூகுள் ஏஐ ப்ரோ (Google AI Pro) ஆப் மூலம் பெற்று கொள்ளலாம். கூகுள் ஒன் அல்லது ஜெமினி வெப்சைட் மூலமும் பெற்று கொள்ளலாம். இதில் கூகுள் ஏஐ ப்ரோ ஆப் ஆனது கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கிறது. ஷீர்ஐடி (SheerID) மூலம் உங்களது மாணவர் ஸ்டேட்டஸை வெரிபை செய்து கொள்ளலாம்.

உங்களிடம் வேறு மெம்பர்ஷிப் இருந்தால், அதை கேன்சல் செய்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்களது தற்போதை பில்லிங் சைக்கிள் முடியும் வரையில் காத்திருக்க வேண்டும். அதன்பிறகு புதிய மெம்பர்ஷிப்பை பெற்று கொள்ள முடியும். இப்படியே இந்த மாணவர்களுக்கான கூகுள் ஒன் மெம்பர்ஷிப்பை பெற்று கொள்ள முடியும். செப்டம்பர் 15ஆம் தேதியை நினைவில் வையுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Offers One Year Gemini Upgrade To Indian College Students Check Requirements Eligibility
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X