Home
News

தம்பி என் கிட்டயேவா.. தண்ணி காட்டிய ஸ்ரீனிவாஸ்.. 300% சம்பள உயர்வு கொடுத்து தட்டி தூக்கிய சுந்தர் பிச்சை!

என்னது? ஒரே ஒரு ஊழியருக்கு 300% சம்பள உயர்வா? இதெல்லாம் கனவிலும், கற்பனையிலும் தான் நடக்குமென்று நீங்கள் நினைத்தால்.. அது முற்றுலும் தவறு. ஏனென்றால் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனம் தனது ஊழியர் ஒருவருக்கு 300% சம்பள உயர்வை வழங்கியுள்ளது.

அதிகபட்சம் 50% அல்லது அதைவிட சற்று அதிகமான சம்பள உயர்வை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் 300% என்பது உண்மையிலேயே மிகப்பெரிய அளவாகும். இந்த அளவிற்கு "வாரி வழங்கப்பட்டுள்ளது" என்றால் அந்த ஊழியர், கூகுள் (Google) நிறுவனத்திற்கு எவ்வளவு முக்கியமானவராக இருக்க வேண்டும்? யார் அவர்? என்ன நடந்தது? இதோ விவரங்கள்:

300% சம்பள உயர்வு.. தட்டி தூக்கிய சுந்தர் பிச்சை!

அரவிந்த் ஸ்ரீனிவாஸ் (Arvind Srinivas) என்பவர் அமெரிக்காவை தளமாக கொண்ட பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ (Perplexity AI) என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் சிஇஒ-வாக (Startup Company CEO) உள்ளார். அலெக்ஸ் கான்ட்ரோவிட்ஸ் (Alex Kantrowitz) நடத்திய பிக் டெக்னாலஜி போட்காஸ்ட் ஷோவில் கலந்துகொண்ட போது, கூகுள் நிறுவனத்துடன் தான் சந்தித்த "300% சம்பள உயர்வு" கதையை பகிந்துகொண்டார்.

ஐஐடி மெட்ராஸை சேர்ந்த ஸ்ரீனிவாஸ், கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு "அற்புதமான" ஊழியரை, தனது பெர்ப்ளெக்ஸிட்டி ஏஐ ஸ்டார்ட்அப் கம்பெனியில் வேலைக்கு அமர்த்த முயற்சி செய்துள்ளார். புதிய வேலை வாய்ப்பு (New Job Offer) கிடைத்தால், ஒரு ஊழியர் தனது முதலாளியை தொடர்புகொண்டு அதுகுறித்த தகவலை தெரிவிப்பது வழக்கம்.

300% சம்பள உயர்வு.. தட்டி தூக்கிய சுந்தர் பிச்சை!

இப்படி செய்வதன் மூலம் வெளியில் இருந்து புதிய வாய்ப்புகளை பெறும் ஊழியர்கள், வேலையை விட்டு செல்லாமல் இருப்பதற்கான கூடுதல் சலுகைகள் அல்லது சம்பள உயர்வை பெறுவார்கள். ஆனால் கூகுள் நிறுவனமோ அந்த ஊழியருக்கு "யாருமே நினைத்து கூட பார்க்காத அளவிலான" சம்பள உயர்வை கொடுத்து, அவரை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைநீக்கங்களால் (Layoffs) பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில்.. தன்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு "தாவப் பார்த்த" கூகுள் ஊழியருக்கு, அவர் ஏற்கனவே வாங்கும் சம்பளத்தில் இருந்து, நான்கு மடங்கு (அடிப்படையில் 300 சதவீதம்) அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாக அரவிந்த் ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

300% சம்பள உயர்வு.. தட்டி தூக்கிய சுந்தர் பிச்சை!

கூகுள் நிறுவனத்தின் இந்த செயல், வேறு வேலைக்கு செல்ல பார்த்த ஊழியர் மற்றும் அவரை தன் நிறுவனத்தில் பணியமர்த்த பார்த்த சிஇஓ, ஆகிய இருவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அந்த ஊழியர் இன்னும் அங்கேயே தான் பணிபுரிகிறார் என்கிற விவரத்தையும் ஸ்ரீநிவாஸ் வெளிப்படுத்தினார். அதாவது கூகுளின் 300% சம்பள உயர்வை அந்த நபர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வேளையில், ஒரே ஒரு ஊழியருக்கு 300% சம்பள உயர்வு கொடுக்கப்பட்ட சம்பாமானது, சரியாக எந்த தேதியில் அல்லது எந்த மாதத்தில் நடந்தது என்கிற விவரங்கள் வெளிப்படுத்தவில்லை.

நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு முதலே கூகுள் நிறுவனம் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. கடந்த 1.5 மாதங்களில், இந்நிறுவனம் கூகுள் அசிஸ்டண்ட், ஹார்டுவேர் மற்றும் சென்ட்ரல் இன்ஜினியரிங் ( Google Assistant, hardware, and central engineering) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிநீக்கங்களை செயல்படுத்தியது.

இருப்பினும், பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனத்திற்குள்ளான மாற்று பதவிகளை தேட அனுமதிப்பதன் (Alternative positions within Google) மூலம், கூகுள் நிறுவனமே அவர்களுக்கான இரண்டாவது வாய்ப்பை வலுப்படுத்தியும் கொடுத்துள்ளது. இருப்பினும் கூகுள் நிறுவனத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்த ஊழியர்களுக்கு ஒரு முக்கிய கெடுவும் உள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் அவர்கள் கூகுளில் புதிய பதவியை (New role) பெறாவிட்டால், அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

Best Mobiles in India

English summary
Google Offered 300 percent Salary Hike To an Employee To Stop Joining in Another company
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X