Home
News

ஜிமெயில் பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய வசதி.. இனி அந்த சிரமம் இருக்காது.. ஏன்?

கூகுள்(google) நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, இனி நீங்கள் புதிய அக்கவுண்ட் உருவாக்காமல், உங்களது பழைய ஜிமெயில் முகவரியை (Username) மாற்றிக்கொள்ள முடியும். குறிப்பாக இப்படி மாற்றும்போது உங்கள் பழைய அக்கவுண்டில் உள்ள ஈமெயில்கள், கூகுள் போட்டோஸ், கூகுள் டிரைவ் கோப்புகள், அக்கவுண்ட் ஹிஸ்டரி என எதுவுமே அழியாது. அனைத்தும் அப்படியோ இருக்கும்.

இந்த புதிய அப்டேட் ஆனது @gmail.com என முடிவடையும் மெயில் முகவரிகளுக்கு மட்டும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் சிறு வயதில் விசித்திரமான பெயர்களில் ஜிமெயில் கணக்கை உருவாக்கி இருப்போம். ஆனால் வேலைக்கு செல்லும் போது அந்த ஜிமெயில் ஐடியை பயன்படுத்த தயக்கமாக இருக்கும்.

ஜிமெயில் பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய வசதி..

ஆனால் தற்போது அந்த கவலை இருக்காது நீங்கள் சிறு வயதில் விசித்திரமான பெயர்களில் உருவாக்கிய ஜிமெயில் கணக்கின் ஜிமெயில் முகவரியை (Username) எளிதாக மாற்றிக்கொள்ள முடியும். நீங்கள் கூகுள் கணக்கில் பழைய ஜிமெயில் ஐடியை மாற்றி புதிய ஜிமெயில் யூசர்நேமை தேர்வு செய்யலாம், ஆனால் இந்த மாற்றத்தினால் Google Drive, Photos, YouTube, Play Store போன்ற போன்ற சேவைகளில் உள்ள டேட்டா, வாங்கிய சப்ஸ்கிரிப்ஷன்கள் அல்லது கணக்கு வரலாற்றில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதேசமயம் உங்கள் பழைய முகவரிக்கு யாராவது மெயில் அனுப்பினால், அது உங்கள் புதிய முகவரிக்கே வந்து சேரும். அதுவும் ஜிமெயில், யூடியூப் (YouTube), மேப்ஸ் (Maps) என எதில் லாகின் (Login) செய்யவும் பழைய அல்லது புதிய ஐடி இரண்டையுமே பயன்படுத்தலாம். மேலும் பழைய முகவரியை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. அது உங்களுடன் தான் இணைந்திருக்கும். அதாவது பழைய மெயில் ஐடி, ரிகவரி மெயிலாக சேமிக்கப்படும் என்பதால், பாதுகாப்பு அம்சமும் இருக்கும்.

குறிப்பாக ஒரு முறை ஜிமெயில் யூசர்நேம் மாற்றிய பிறகு, அடுத்த மாற்றத்திற்கு 12 மாதங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தில் பழைய ஐடிக்கு மீண்டும் திரும்பும் வசதியும் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்க. ஒரு கூகுள் கணக்கில் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே யூசர்நேம் மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே கணக்கில் காலப்போக்கில் 4 ஜிமெயில் முகவரிகள் வரை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.

ஜிமெயில் சேவையில் வந்துள்ள இந்த புதிய வசதி அனைவருக்கும் ஒரே நேரத்தில் கிடைக்காது. கூகுள் நிறுவனம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதியை வெளியிடும் என்று தெரிவித்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் இந்த ஜிமெயில் சேவையில் உள்ள இந்த புதிய வசதி உங்களுக்கு கிடைத்துள்ளதா என்று பார்க்கவும், மாற்றவும் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

ஜிமெயில் பயனர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய வசதி..

1.உங்கள் மொபைல் அல்லது கணினியில் myaccount.google.com/google-account-emailஎன் இந்த பக்கத்தில் உள்நுழையவும்
2.அடுத்து Personal info எனும் விருப்பம் இருக்கும் அதை தேர்வு செய்யவும்.
3.அதன்பின்னர் Email என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து அதில் Google Account email என்பதை கிளிக் செய்யவும்
4.அதன்பிறகு Change Google Account email என்ற விருப்பம் இருக்கும், அதை கிளிக் செய்யவும் (இந்த விருப்பம் இல்லை என்றால், உங்களுக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை என்று அர்த்தம்).
5.அடுத்து உங்களுக்கு பிடித்த புதிய ஜிமெயில் ஐடியை டைப் செய்து அது கிடைக்கிறதா என்று சரிபார்க்கவும். கடைசியாக Change email என்பதை கொடுத்து உறுதி செய்யவும். அவ்வளவுதான் இனி எளிதாக புதிய ஐடிக்கு மாறிவிட முடியும்.

முன்பு கூறியதுபோல் இந்த வசதி இன்னும் அனைத்து பயனர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கவில்லை. தற்போது சோதனை அடிப்படையில் தான் இந்த வசதி வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google now lets you change Gmail address: Heres step by step guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X