Home
News

Google Pay மூலம் ரூ.15000 உடனடி கடன் பெறலாம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்ன செய்ய வேண்டும்?

கூகுள் பே (Google Pay) பயனர்களுக்கு இது ஒரு குட் நியூஸ். கூகிள் பே பயனர்கள் இப்போது, அவர்களின் கூகுள் பே கணக்கில் இருந்து ரூ.15000 வரை உடனடி கடனை (Instant loan) பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் மக்களே.! இப்போது நீங்கள் உங்களுடைய கூகுள் பே ஆப்ஸ் (Google Pay Apps) கணக்கில் இருந்து உடனடியாக கடனை பெற முடியும். இதற்கான புதிய அம்சத்தை கூகுள் (Google) நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம். இதை கூகுள் நிறுவனம் சாச்செட் லோன்ஸ் (Sachet loans) என்ற புதிய அம்சத்தின் கீழ் வழங்குகிறது.

Google Pay மூலம் ரூ.15000 உடனடி கடன் பெறலாம்.. யாருக்கு கிடைக்கும்?

கூகுள் பே மூலம் உடனடி கடன் பெறுவது எப்படி (How to get instant loans from Google Pay):

நாட்டிலுள்ள சிறு வணிகங்களுக்கு உதவ Google Pay ஆப்ஸ் இல் புதிதாக சாச்செட் லோன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம், கூகுள் பே நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கான கடன் சார்ந்த தயாரிப்புகளை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சிறு வணிகர்களுக்கு கடன்களை விரிவுபடுத்துவதற்காக ஆக்சிஸ் பேங்க் (Axis bank) மற்றும் ஐசிஐசிஐ பேங்க் (ICICI bank) போன்ற வங்கிகளுடன் கூகுள் பே கைகோர்த்துள்ளது.

இதுமட்டுமின்றி, இபேலேட்டர் (ePayLater) போன்ற (non-banking financial companies - NBFCs) வங்கியில்லா கடன் வழங்குநர்களுடனும் கூகுள் பே நிறுவனம் இப்போது கைகோர்த்துள்ளது. இதன் மூலம் கடன் தேவைப்படும் பயனர்கள், கூகுள் பே மூலம் கடனை பெற்றுக்கொண்டு, மீண்டும் சில குறிப்பிட்ட காலத்திற்குள் பெற்ற கடனை தவணை முறையில் அடைக்க இந்த ePayLater அம்சம் அனுமதிக்கிறது.

ரூ.15,000 வரை உடனடி கடன்.. மாத தவணை ரூ.111 முதல் மட்டுமே (Instant Loan up to Rs.15,000.. Monthly Installment from Rs.111 only):

கூகுள் பே அறிமுகம் செய்துள்ள இந்த புதிய சாச்செட் லோன் (sachet loan) வசதி மூலம் இந்தியாவில் உள்ள SMB-களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று நிறுவனம் நம்புகிறது. ஜிபே (Gpay) ஆப்ஸ் இப்போது, DMI ஃபைனான்ஸ் உடன் இணைந்து ரூ.15000 முதல் உடனடி கடனை வழங்குகிறது. இந்த கடனுக்கான மாத தவணை ரூ.111 முதல் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கடன் சாச்செட் லோன் கீழ் கிடைக்கிறது.

கூகுள் பே பயனர்களுக்கு இந்த உடனடி லோன் டையர் 2 (tier 2 cities) மற்றும் அதற்குமேல் உள்ள நகரங்களில் வாழும் பயனர்களுக்கு பயன்படுத்த கிடைக்கும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், மாதம் ரூ.30,000 வருமானத்திற்கு மேல் பெரும் தகுதியான வாடிக்கையாளர் மற்றும் வணிகர்களுக்கே இந்த கடன் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உண்மையை சொல்ல போனால், கூகுள் பே பயனர்களில் உள்ள 5 நபர்களில் ஒருவருக்கு தான் இந்த சாச்செட் லோன் கிடைக்க தகுதியானவர்களாகிறார்கள். பெரும்பாலும், இத்தகைய இன்ஸ்டன்ட் லோன் (instant loan) கடன்கள், பயனர்களின் வங்கி பரிவர்த்தனை வரலாற்று (bank transaction history) மற்றும் பயனரின் வருமான தகவல்களை (customer credit details) வைத்து வழங்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Google Pay மூலம் ரூ.15000 உடனடி கடன் பெறலாம்.. யாருக்கு கிடைக்கும்?

கடன் தரும் வங்கிகள் எப்போதும் இத்தகைய நடவடிக்கைகளை பின்பற்றுவது வழக்கமே. குறிப்பாக கடன் வழங்கும் போது வங்கிகள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது. இருப்பினும், கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, கூகுள் பே பயனர்களுக்கு எந்த ஆவணமும் இன்றி உடனடி லோன் (no document instan loan approval) வழங்கப்படும் என்று கூறியுள்ளது. இதை நாம் ட்ரை செய்து பார்த்தால் தான் தெரியும்.

கூகுள் பே மொபைல் ஆப்ஸில் இப்போது பல NBFC நிறுவனங்கள் மூலமும் இன்ஸ்டன்ட் லோன்ஸ் கிடைக்கிறது. ஆனால், இந்த கடன் வழங்குநர்களுடன் மேற்கொள்ளப்படும் சேவைக்கு கூகுள் பே பொறுப்பாகாது என்று நிறுவனம் தெளிவாக கூறியுள்ளது. உங்களில் யாருக்காவது உடனே லோன் வேண்டும் என்றால், கூகுள் பே ஆப்ஸில் இந்த செயல்முறையை பின்பற்றவும்.

கூகுள் பே மொபைல் ஆப்ஸ் மூலம் எப்படி கடன் பெறுவது? (How to get loan through Google Pay mobile app):

- Google Pay பயன்பாட்டைத் திறக்கவும்.
- "Money" பிரிவில், loan என்று கடன் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- நீங்கள் பெற விரும்பும் முன் தகுதி பெற்ற கடன் சலுகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- Continue என்பதை கிளிக் செய்யவும்.
- OTP ஐ உள்ளிடவும்.
- Submit என்பதை கிளிக் செய்து உங்கள் கடனை பெறவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Google Now Introduced Sachet Loans and Instant Loans Through Google Pay or Gpay Mobile Apps In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X