Just In
- 9 min ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 11 min ago
புதிய ஆடியோ தொழில்நுட்பத்துடன் அதிரடி காட்டும் Netflix: என்னென்ன அம்சங்கள்.!
- 2 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
- 4 hrs ago
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுக தேதி இதுதான்.!
Don't Miss
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- News
சர்வதேச கேன்சர் தினம்.. புற்றுநோய் குறித்த "இந்த" வதந்திகளை நம்பாதீங்க! மருத்துவர்கள் விளக்கம்
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Movies
Simbu Net worth: சிம்புவுக்கு 40 வயசாகிடுச்சு.. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
- Sports
"இந்தியா அநியாயமாக நடந்துக்கொண்டது" ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. முன்னாள் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டு
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..
இன்றைய தங்கத்தின் விலை என்ன? தலைவலிக்கு என்ன செய்வது? இளைய தளபதி விஜய் போன் நம்பர் என்ன? சமந்தாவின் வாட்ஸ்அப் நம்பர் என்ன? என்று நமக்கு தேவையான பெரும்பாலான விஷயங்களை எல்லாம் நாம் இப்போது கூகிள் மூலமாகத் தான் சர்ச் செய்து அறிந்துகொள்கிறோம். இது சிலருக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. என்ன தேவை என்றாலும் உடனே கூகிளிடம் கேள்வி கேட்டுவிடவேண்டும். இப்போது, நீங்கள் மேலே படித்த விஷயங்கள் எல்லாம், இந்த மாதம் கூகிளில் அதிகம் சர்ச் செய்யப்பட்ட கேள்விகள் என்று கூகிள் நிறுவனமே அதன் பக்கத்தில் காண்பிக்கிறது.

கூகிளில் உங்க போன் நம்பர், இமெயில், முகவரி இருக்க வாய்ப்பு
இப்படி, நமக்குத் தேவையான விஷயங்களை நாம் கூகிள் மூலம் தேடித் தெரிந்துகொள்வது போல், சில முக்கிய நபர்களின் தகவல்களை நாம் கூகிள் சர்ச் செய்து கண்டுபிடிக்க முயல்கிறோம். இதேபோல், உங்களின் மொபைல் எண், ஈமெயில் விபரம், வீட்டு முகவரி, போன்ற தகவல்கள் கூட கூகிளில் காண்பிக்க வாய்ப்புள்ளது என்று தெரிந்தால் என்ன செய்வீர்கள். ஆம், இதற்கும் வாய்ப்புள்ளது. உங்கள் மொபைல் எண், ஈமெயில் முகவரி, வாட்ஸ்அப் நம்பர், தனிநபர் விலாசம், புகைப்படம், வீடியோ, போன்ற ஆதாரங்கள் கூகிளில் இருக்க வாய்ப்புள்ளது.

இதைக் கூகிள் திருடியதா! என்று சந்தேகிக்க வேண்டாம்
இதை கூகிள் உங்களுக்குத் தெரியாமல் திருடிவிட்டதாக உடனே எண்ணிவிட வேண்டாம், நீங்கள் இதற்கு முன் எங்கோ பதிவிட்ட தகவலில் இருந்து, இது கூகிள் சர்ச்சில் காண்பிக்கப்படலாம். மற்றொரு புறம் உங்களுக்கு வேண்டியவர் அல்லது வேண்டாதவர் செய்த வேலையாகக் கூட இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எதுவும் கூகிள் சர்ச்சில் காண்பிக்கப்படுகிறது. அது உங்களுக்கு ஏதேனும் சிக்கலை உருவாக்குகிறது என்றால், அவற்றை நீங்கள் கூகிளிலிருந்து நீக்கம் செய்யலாம். அதற்கான புதிய விதியை கூகிள் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இப்படி ஒரு சிக்கலை நீங்கள் சந்தித்தால் என்ன செய்வது?
ஒருவேளை இப்படி ஒரு சிக்கலை நீங்கள் சந்தித்தால், என்ன செய்வது என்று பார்க்கலாம். அதற்கு முன், கூகிள் வெளியிட்ட தகவலின் படி, அதன் புதிய விதி எப்படி செயல்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம். பயனர்களின் வேண்டுகோளின் பேரில் தேடல் முடிவுகளில் இருந்து நீக்கக்கூடிய விதிமுறைகளைக் கூகிள் தற்போது விரிவுபடுத்தியுள்ளது. ஆல்ஃபாபெட் நிறுவனம், அடையாளத் திருட்டுக்கு வழிவகுக்கும் தகவல்கள் உட்பட, தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது வீட்டு முகவரி போன்ற தனிப்பட்ட தகவல்களை அகற்றுவதற்கான கோரிக்கைகளை இப்போது ஏற்றுக்கொண்டு நீக்கம் செய்வதாகக் கூறியுள்ளது.

நிதி மோசடிக்கு வழிவகுக்கும் தகவல் மற்றும் தனிநபர் புகைப்படங்கள் அகற்ற அனுமதி
இதற்கு முன், நிதி மோசடிக்கு வழிவகுக்கும் வங்கிக் கணக்கு அல்லது கிரெடிட் கார்டு நற்சான்றிதழ்களுடன் தேடல் முடிவுகளிலிருந்து முக்கியமான மற்றும் தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களை அகற்ற Google அனுமதித்தது என்பது கவனிக்கத்தக்கது. இதேபோல், அக்டோபர் 2021 முதல், 18 வயதுக்குட்பட்ட பயனர்கள் அல்லது அவர்களின் பெற்றோர் / பாதுகாவலர்களிடமிருந்து எழுப்பப்படும் வேண்டுகோள்களின் பெயரில், தேடல் முடிவுகளிலிருந்து தனிப்பட்ட நபரின் படங்களை அகற்றுவதற்கான கோரிக்கைகளையும் Google ஏற்றுக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகிள் நிர்வாகி சொன்னது என்ன?
"இந்தப் புதிய கொள்கை விரிவாக்கத்தின் கீழ், தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது முகவரி போன்ற தனிப்பட்ட தொடர்புத் தகவல் உட்பட, தேடல் முடிவுகளில் மக்கள் கூடுதல் தகவல்களைக் கண்டறியும் போது, அவற்றை அகற்றக் கோரலாம். தேடல் முடிவுகளில் தோன்றும் ரகசிய உள்நுழைவுச் சான்றுகள் போன்ற அடையாளத் திருட்டுக்கான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கூடுதல் தகவல்களை அகற்றவும் இந்த கொள்கை அனுமதிக்கிறது," என தேடலுக்கான உலகளாவிய கொள்கை முன்னணி மிச்செல் சாங் ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்திருக்கிறார்.

இதை முக்கியமாகத் தெரிந்துகொள்ளுங்கள்.. கூகிளின் விதி இப்படி தான் செயல்படும்
ஒரு வலைப்பக்கத்தின் அனைத்து அம்சங்களையும் Google மதிப்பீடு செய்யும் என்றும், உள்ளடக்கத்தை அகற்றுவதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டால் அவை எவ்வாறு பாதிக்கப்படும் என்றும் சாங் விளக்கியுள்ளார். அரசாங்க இணையதளத்தில் பொதுப் பதிவின் ஒரு பகுதியாக உள்ளடக்கம் பட்டியலிடப்பட்டிருந்தால், அந்த தகவல்கள் அகற்றுதல் செய்யப்படாது என்றும் அவர் மேலும் கூறினார். அதேபோல், கூகுள் தேடல் முடிவுகளிலிருந்து உள்ளடக்கத்தை அகற்றுவது என்பது இணையத்திலிருந்து உள்ளடக்கம் முழுவதுமாக அகற்றப்படும் என்று அர்த்தமல்ல என்று சாங் எச்சரித்தார்.

கூகிள் தவிர்த்துப் பிற தளங்களில் தனிப்பட்ட தகவல் இருந்தால் என்ன செய்வது?
பிற தேடுபொறிகளின் முடிவுகளில் இது தொடர்ந்து காண்பிக்கப்படும் என்பதை மக்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். கூகிளில் புகாரளித்தால், கூகிளில் இருந்து அந்த தகவல் நிரந்தரமாக நீக்கப்படும். மற்ற நிறுவனங்களின் சர்வர்களில் இருப்பதை, அந்த பயனர் அதற்குத் தொடர்பான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தகவலை நீக்கம் செய்ய விண்ணப்பிக்க வேண்டும் என்பதே இதற்கான அர்த்தம். தனி நபர் தகவல் அழிப்பைக் கோரப் பயனர்கள் ஹோஸ்டிங் தளத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட தரவை வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் உரிமைத் தரவுக் கொள்கை
தனிப்பட்ட தரவை அழிக்கக் கோருவதற்கான உரிமை இப்போது தரவுப் பாதுகாப்புச் சட்டங்களால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR) கட்டுரை 17ன் கீழ் உள்ள விதிகளை அழிக்கும் உரிமையின் மூலம் ஆன்லைன் பயனர்கள் தங்களுக்குரிய உள்ளடக்கத்தை அகற்றக் கோர அனுமதிக்கிறது. இந்தியாவின் தரவுப் பாதுகாப்பு மசோதா (2019) தனிப்பட்ட தரவை வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் உரிமை தரவுக் கொள்கைகளை அனுமதிக்கும் விதிகளையும் கொண்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470