புதிய கூகுள் நெக்சஸ் கருவியில் ஆப்பிள் ஐபோன் அம்சம்.!!

Written By:

மொபைல் போன் சந்தையை ஒவ்வொரு ஆண்டும் தனது கருவியில் ஏதேனும் புதிய அம்சம் வழங்கி வியப்பில் ஆழ்த்த ஆப்பிள் நிறுவனம் என்றும் தவறியதே இல்லை எனலாம். அந்த வகையில் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த புதிய அம்சம் தான் 3டி டச் தொழில்நுட்பம். தற்சமயம் ஆப்பிள் கருவியில் மட்டும் பயன்பாட்டில் இருக்கும் இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய கூகுள் நெக்சஸ் கருவியில் ஆப்பிள் ஐபோன் அம்சம்.!!

அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் வெளியிட இருக்கும் நெக்சஸ் கருவியில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

எச்டிசி நிறுவனம் தயாரித்து வரும் இந்த கருவியில் 3டி டச் போன்ற பிரஷர் சென்சிட்டிவ் டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என பிரபல இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இந்த அம்சத்தினை கூகுள் முக்கியமான ஒன்றாக கருதுவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் சியோமி, மெய்ஸூ, ஒப்போ மற்றும் விவோ போன்ற சீன நிறுவனங்களும் இந்த தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக கூறப்படுகின்றது.

புதிய கூகுள் நெக்சஸ் கருவியில் ஆப்பிள் ஐபோன் அம்சம்.!!

ஆப் டெவலப்பர்களின் போதுமான ஆதரவு இல்லாதததால் இந்த தொழில்நுட்பம் ஆண்ட்ராய்டு கருவிகளில் குறைபாடாக இருந்தது, ஆனால் கூகுள் இந்த அம்சத்தை வழங்க முன்வந்திருப்பதால் இந்த நிலை விரைவில் மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

3டி டச் அம்சம் மூலம் கருவிகளை நேர்த்தியாக பயன்படுத்த முடியும் என்பதோடு உண்மையான பட்டன் போன்ற அனுபவத்தையும் பெற முடியும். மேலும் இந்த தொழில்நுட்பம் பல்வேறு புதிய செயலி மற்றும் கேம்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும்.

எல்லாம் சரி தான் ஆனால் இந்த கருவி எல்லோரும் வாங்கும் விலையில் வழங்கப்படுமா, என்பதே பலரின் மனக்குரலாக இருக்கின்றது.

English summary
Google Nexus may support a 3D Touch display Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot