சக்சஸ், கூகுள் நெக்சஸ் இந்தியாவில் வெளியானது..!!
பல மாதங்களாக இழுபறியாக இருந்த கூகுள் நெக்சஸ் கருவிகளை அந்நிறுவனம் ஒரு வழியாக வெளியிட்டுள்ளது. அதன் படி எல்ஜி நெக்சஸ் 5எக்ஸ், ஹூவாய் நெக்சஸ் 6பி கருவிகள் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் இன்று முதல் முன்பதிவு செய்ய முடியும், விற்பனை அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி துவங்குகின்றது.

அதன்படி நெக்சஸ் 5எக்ஸ் கருவியானது அமேசான் தளத்திலும், நெக்சஸ் 6பி கருவி ப்ளிப்கார்ட் தளத்திலும் பிரத்யேகமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கருவிகளையும் வாடிக்கையாளர்கள் சில்லறை வர்த்தகர்களிடம் இருந்தும் வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெக்சஸ் 5எக்ஸ் 16 ஜிபி ரூ.31,900, 32 ஜிபி ரூ.35,900 மற்றும் நெக்சஸ் 6பி 32 ஜிபி ரூ.39,999, 64 ஜிபி ரூ.42,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நெக்சஸ் 5எக்ஸ கருவியை முன்பதிவு செய்வோருக்கு ரூ.2,500 மதிப்புடைய ப்ளூடூத் ஹெட்செட், ரூ.6,500 மதிப்புடைய மாற்று திரை சலுகையும் எச்டிஎப்சி வங்கியின் க்ரெடிட் கார்டு பயனாளிகளுக்கு ரூ.3,500 வரை கேஷ்பேக் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெக்சஸ் 6பி கருவியை முன்பதிவு செய்வோருக்கு ரூ.2,999 மதிப்புடைய க்ரோம்காஸ்ட் டாங்கிள் அல்லது ரூ.2,495 மதிப்புடைய ப்ளூடூத் ஸ்பீக்கர் மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு விசேஷ சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications