நெக்சஸ் 5எக்ஸ் விலை குறைக்கப்பட்டது..!!
எல்ஜி நிறுவனம் தயாரித்த கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் எதிர்பார்த்த வெற்றியை பெற்றிருந்த போதிலும் இந்த கருவியின் விலை பெரும்பாலானோரையும் முகம் சுழிக்க செய்தது என்றும் கூறலாம். கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் 16ஜிபி மாடல் இந்தியாவில் ரூ. 31,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. விலை அதிகமாக இருப்பதை உணர்ந்தோ விற்பனையை மேலும் அதிகரகிக்கவோ கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளது.

அதன் படி புத்தம் புதிய கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் கருவியின் விலை ரூ.31,990 இல் இருந்து ரூ.24,573க்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ஆன்லைன் வர்த்தகர்களிடம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் நேரடி விற்பனை நிலையங்களில் இது சார்ந்த தகவல் ஏதும் இல்லை என்றே கூற வேண்டும்.

அனைவருக்கும் பிடித்த நெக்சஸ் 5எக்ஸ் ப்ளிப்கார்ட் தளத்தில் தற்சமயம் ரூ.25,259க்கும் அமேசான் தளத்தில் ரூ.25,900க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. எப்படி பார்த்தாலும் வெளியானதை விட தற்சமயம் ரூ.7,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதே போன்று 32ஜிபி கூகுள் நெக்சஸ் 5எக்ஸ் ரூ.35,990 இல் இருந்து ரூ.4000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.31,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது. விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது ஒன்ப்ளஸ் 2 மற்றும் மோட்டோரோலா மோட்டோ எக்ஸ் ஸ்டைல் போன்ற கருவிகளுக்கு விற்பனை ரீதியாக கடும் போட்டியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது.


Click it and Unblock the Notifications