கூகுள் நெக்சஸ் 5 (2015) : எதிர்பார்ப்பு தொகுப்பு..!
கூகுள் நிறுவனத்தின் புதிய கருவி வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததின் விளைவு தான் கூகுள் நெக்சஸ் சார்ந்த எதிர்பார்ப்பு செய்திகள். கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்தை வெளியிட்டிருப்பது மேலும் பல புதிய செய்திகளுக்கு வழி வகுத்திருக்கின்றது.
புதிய எதிர்பார்ப்பு செய்திகளின் படி புதிய நெக்சஸ் கருவியில் வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புதிய கூகுள் கருவியானது இரு வித அளவுகளில் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் புதிய கருவிகளை எல்ஜி மற்றும் ஹூவாய் போன்ற நிறுவனங்கள் தயாரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
அதன் படி புதிய நெக்சஸ் கருவியில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சில சிறப்பம்சங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

எல்ஜி நெக்சஸ் 5 (2015)
எல்ஜி நிறுவனம் அடுத்த நெக்சஸ் கருவியை தயாரித்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் புதிய கருவியானது 2013 ஆம் ஆண்டு வெளியான நெக்சஸ் 5 கருவியின் மேம்படுத்தப்பட்ட கருவி என்றும் இந்த கருவியானது எல்ஜி நெக்சஸ் 5 (2015) என்றே அழைக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

டிஸ்ப்ளே
இந்த ஆண்டு இரு நெக்சஸ் கருவிகள் எதிர்பார்க்கப்படுவதால் சிறிய கருவியை எல்ஜி நிறுவனம் தயாரிக்கலாம் என்றும் கூறப்படுவதால் நெக்சஸ் 5 (2015) 5.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றே தெரிகின்றது.

பிராசஸர்
எல்ஜி நிறுவனம் நெக்சஸ் 5 (2015) கருவியை ஸ்னாப்டிராகன் 808 ஹெக்ஸா கோர் பிராசஸர் ஏஆர்எம் சிப்செட் மற்றும் 3ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றே கூறப்படுகின்றது.

பென்ச்மார்க் சோதனை
கடந்த மாதம் நெக்சஸ் 5 (2015) கருவியானது 85,530 புள்ளிகளை பெற்றிருப்தாக AnTuTu எனும் பென்ச்மார்க்கிங் தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

யுஎஸ்பி டைப்-சி
ஆண்ட்ராய்டு எம் இயங்குதளமானது யுஎஸ்பி டைப்-சி சப்போர்ட் செய்யும் என்பதால் வெளியாக இருக்கும் நெக்சஸ் கருவியிலும் யுஎஸ்பி டைப்-சி வழங்கப்படலாம்.

ஹூவாய்
2015 ஆம் ஆண்டின் நெக்சஸ் கருவிகளில் ஒன்றை ஹூவாய் நிறுவனம் தயாரிப்பதாக அந்நிறுவனத்தின் ஊழியர் தெரிவித்திருக்கின்றார்.

கைரேகை ஸ்கேனர்
ஹூவாய் தயாரிக்கும் நெக்சஸ் கருவியில் கைரேகை ஸ்கேனர் இருக்கும் என்று கூறப்படுகின்றது. மேலும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும் கைரேகை ஸ்கேனர் சப்போர்ட் செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிராசஸர்
ஹூவாய் தயாரிக்கும் நெக்சஸ் கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகின்றது.

டிஸ்ப்ளே
ஹூவாய் நெக்சஸ் ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் குவாட் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 2560*1440 ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மெட்டல்
ஹூவாய் நெக்சஸ் கருவியில் நேரோ மெட்டல் பாடி கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications