ஒட்டுமொத்தமாக மாறிய Google News பக்கம்; இனி ஒரு நியூஸும் மிஸ் ஆகாது!

|

125-க்கும் மேற்பட்ட நாடுகளில், உலகம் முழுவதும் 40 மொழிகளில் அணுக கிடைக்கும் கூகுள் நியூஸ்-க்கு (Google News) வயது 20 ஆகிவிட்ட நிலையில் அதற்கு ஒரு தரமான "அப்டேட்" கிடைத்துள்ளது.

ஒருவேளை உங்களுக்கு தெரியாவிட்டால், கூகுள் நியூஸ் என்பது கடந்த 2002 ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு "செய்தி சேகரிப்பு" சேவையாகும்!

இதுக்கு முன்னாடி ஒரே மாதிரி.. இனிமே வேற மாதிரி!

இதுக்கு முன்னாடி ஒரே மாதிரி.. இனிமே வேற மாதிரி!

கூகுள் நியூஸ் சேவை தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகும் நிலைப்பாட்டில், கூகுள் நியூஸ் ஆனது முற்றிலும் வேறுபட்ட தோற்றத்தை பெற்றுள்ளது.

செய்திகளை தேடி வரும் யூசர்களுக்கு சில ஸ்பெஷலான கஷ்டமைஸபிள் (customisable) ஆப்ஷன்களையும் அறிமுகம் செய்ததோடு நில்லாமல், இந்த "அப்டேட்" கூகுள் நியூஸின் ஒட்டுமொத்த கஸ்டமைசேஷன் (customization) மற்றும் பெர்சனலைஷேனிலும் (personalization) அதிக கவனம் செலுத்தி உள்ளது.

இதுபோல ஒரு அப்டேட்டை முன்னர் பார்த்ததே இல்லை!

இதுபோல ஒரு அப்டேட்டை முன்னர் பார்த்ததே இல்லை!

கூகுள் நியூஸின் இந்த லேட்டஸ்ட் அப்டேட்டின் கீழ் மக்கள் முக்கியமான செய்தி கட்டுரைகளில் ஆழமாக மூழ்கலாம், உலகெங்கிலும் உள்ள உள்ளூர் செய்திகளை எளிதாக கண்டறியலாம். அந்த அளவிற்கு கூகுள் நியூஸ் ஆனது 'ரீடிசைன்' செய்யப்பட்டு, இஷ்டம் போல 'கஸ்டமைஸ்' செய்யும்படி உருமாறி உள்ளது.

பழைய கூகுள் நியூஸ் மிகவும் நெரிசலாக இருந்தது மற்றும் குறிப்பாக அது அழகாக இல்லை. ஆனால் புதிய கூகுள் நியூஸ் எளிமைப்படுத்தப்பட்ட, இரண்டு நெடுவரிசை வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும் பெரும்பாலான நேவிகேஷன் பக்கத்தின் மேல் பகுதியிலேயே உள்ளதால், ஒட்டுமொத்தமாக இது ஒரு பெரிய முன்னேற்றம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது அலெர்ட்! இனிமே புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது "இதை" மறக்காம செக் பண்ணுங்க!

லோக்கல் நியூஸ்-க்கு மேலதிக கவனம்!

லோக்கல் நியூஸ்-க்கு மேலதிக கவனம்!

ரீடிசைன் செய்யப்பட்ட கூகுள் நியூஸ் இப்போது முக்கியச் செய்திகள், உள்ளூர் செய்திகள் மற்றும் உங்களுக்கான "தனிப்பயனாக்கப்பட்ட" தேர்வுகளை உங்கள் டெஸ்க்டாப் ஸ்க்ரீனின் மேல் பக்கத்தில் கொண்டு வரும்.

இதன் கீழ், மக்கள் லோக்கல் நியூஸ் பிரிவை எளிதாக கண்டறிவதற்காக கூகுள் நிறுவனம் அதை கூகுள் நியூஸ் பக்கத்தின் மேல் பகுதிக்கு நகர்த்தியுள்ளது. மேலும் இந்த உள்ளூர் செய்திகள் பிரிவில் பல இடங்களை சேர்க்க உதவும் ஃபில்டர் (Fliter) பட்டனும் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

அதை பயன்படுத்தி நீங்கள் விரும்பும் நகரங்கள் மற்றும் இடங்கள் பற்றிய முக்கியமான செய்திகள் மற்றும் அப்டேட்களை நீங்கள் தவறாமல் படிக்கலாம்.

இடது பக்கத்தில் இருந்து மேலே!

இடது பக்கத்தில் இருந்து மேலே!

தொழில்நுட்பம், வணிகம், அறிவியல், சுகாதாரம், உலகம் மற்றும் அரசியல் உள்ளிட்ட செய்தி பிரிவுகளில் ஏற்பட்டுள்ள கவனிக்கத்தக்க மற்றும் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், முன்னதாக இவைகள் எல்லாமே கூகுள் நியூஸ் பக்கத்தின் இடது புறத்தில் இருந்தது, ஆனால் இப்போது மேலே உள்ள மெனு பார்-க்கு மாற்றப்பட்டுள்ளது.

டாப் ஸ்டோரீஸ் மற்றும் பிக்ஸ் ஃபார் யூ!

டாப் ஸ்டோரீஸ் மற்றும் பிக்ஸ் ஃபார் யூ!

கூகுள் நியூஸின் ரீடிசைன் செய்யப்பட்ட பக்கமானது இனிமேல், "டாப் ஸ்டோரீஸ்" மற்றும் "பிக்ஸ் ஃபார் யூ" ஆகியவைகளை பக்கத்தின் மேல் பகுதியில் காட்சிப்படுத்தும்; ஸ்க்ரோல் டவுன் செய்ய, நீங்கள் ஃபாலோ செய்யும் தலைப்புகளின் விரிவான விளக்கத்தைப் பெறுவீர்கள். மேலும் "கஸ்டமைஸ்" பட்டனை கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு தேவையான மாற்றங்களையும் நிகழ்த்தி கொள்ளலாம்.

ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!ஓ மை காட்! இந்த மேட்டர் தெரியாம இவ்ளோ நாள் Truecaller-ஐ யூஸ் பண்ணிட்டோமே!

உள்ளே நுழைந்தால் போதும் வெதர் ரிப்போர்ட் ரெடியாக இருக்கும்!

உள்ளே நுழைந்தால் போதும் வெதர் ரிப்போர்ட் ரெடியாக இருக்கும்!

அப்டேட் செய்யப்பட்ட கூகுள் நியூஸில் உள்ளூர் வானிலையின் விரைவான கண்ணோட்டமும் காண கிடைக்கிறது. இது பக்கத்தின் இடதுபுறத்தில், டாப் மெனுவிற்குக் கீழே மற்றும் இதர நியூஸ் கன்டென்ட்களுக்கு மேலேயும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

உங்களுக்கு வானிலை தொடர்பான கூடுதல் தகவல் தேவைப்பட்டால், குறிப்பிட்ட வெதர் ரிப்போர்ட் பாக்ஸில் காணப்படும் சிறிய அம்புக்குறியை கிளிக் செய்யவும், அடுத்த சில நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்கிற மேலோட்டமான தகவல் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

ஃபேக்ட் செக் செக்ஷன் மீதும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது!

ஃபேக்ட் செக் செக்ஷன் மீதும் வெளிச்சம் பாய்ச்சப்பட்டுள்ளது!

மேலும் கூகுள் அதன் ஃபேக்ட் செக் (Fact Check) பிரிவையும் விரிவுபடுத்தியுள்ளது, இப்போது இதை மெயின் பேஜின் (கடைசியில்) கீழே காணலாம்.

கூகுள் நியூஸிற்கான புதிய தோற்றத்தை பற்றி அறிவிக்கும் ஒரு பிளாக் போஸ்ட்டில், "இன்று உலகெங்கிலும் உள்ள மக்கள் பரந்த அளவிலான அதிகாரப்பூர்வமான செய்திகளை கண்டறிய உதவுவதற்கு நாங்கள் பல வழிகளை உருவாக்கி உள்ளோம். உலகம் முழுவதும் உள்ள ஸ்டோரீஸ்-களை அடையாளம் கண்டு, அதை ஒழுங்கமைக்க மற்றும் நூற்றுக்கணக்கான வெவ்வேறு காரணிகளை பகுப்பாய்வு செய்ய, கூகுளின் அல்காரிதம்கள் ஆனது மெஷின் லேர்னிங்-ஐ பயன்படுத்துகின்றன" என்றும் கூகுள் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Google News gets New-look mainly focused on customization and personalization. Check details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X