Loan Apps: இனி தொட்ட.. நீ கெட்ட.. பெர்சனல் லோன் ஆப்களுக்கு எதிராக Google அதிரடி நடவடிக்கை!
கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) டவுன்லோட் செய்ய கிடைக்கும் சில பெர்சனல் லோன் ஆப்களானது (Personal Loan Apps) தனிநபர்களுக்கான பணத்தேவைகளை எளிமையாக பூர்த்தி செய்ய உதவுகின்றன. இதுவொருபக்கம் இருக்க, சில ஆப்கள் கந்துவட்டிக்காரர்களை விட கொடூரமாக செயல்படுகின்றன.
சில பெர்சனல் லோன் ஆப்கள், சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, கடன் கொடுத்த தொகையை திருப்பி கேட்பதாக கூறி கடன் வாங்கிய பயனர்களை தொந்தரவு செய்கின்றன. இது தொடர்பான புகார்களுக்கு பொறுப்பேற்ற கூகுள், பெர்சனல் லோன் ஆப்களுக்கு எதிராக ஒரு தரமான நடவடிக்கையை எடுத்துள்ளது.

தனிநபர்களுக்கான பெர்சனல் லோன்களை வழங்கும் ஆண்ட்ராய்டு ஆப்கள் குறித்த தனது கொள்கையில் (Personal Loan Apps Policy) கூகுள் நிறுவனம் அதிரடி திருத்தமொன்றை செய்துள்ளது. இதன் கீழ், கடன் வாங்கும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை (Personal Data) சேகரிக்க பெர்சனல் லோன் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது கடன் வாங்கும் ஒரு பயனரின் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் (Photos) மற்றும் காண்டாக்ட் லிஸ்ட் (Contact List) உட்பட, அவருடைய மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களை (Personal Information) அணுக பெர்சனல் லோன் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
கடனளிப்பவர்களின் தவறான நடத்தைகளிடம் இருந்து கடன் வாங்குபவர்களை "காப்பாற்ற" கூகுள் எடுத்த சமீபத்திய முயற்சிகளில் இது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது; கூடவே இது நல்ல பலனை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பாலிசியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த மாற்றம் மே 31 முதல் அமலுக்கு வரும்.
அறியாதோர்களுக்கு மொபைல் ஆப்கள் (Mobile Apps) மூலம் கடன் பெறும் சில பயனர்கள், கடனை வசூலிப்பவர்களால் பல வகையான துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். கடனை கோரும் முகவர்கள் (Agents) கடன் வாங்கியவர்களின் புகைப்படங்களை சேகரிப்பதாகவும், அவர்களின் காண்டாக்ட் லிஸ்ட்டில் உள்ள எண்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், அவர்களை மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இது போன்ற சில தீவிரமான நிகழ்வுகளின் போது கடன் வாங்கியவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த போக்கு பெர்சனல் லோன் ஆப்கள் வழியாக கடன் வாங்குபவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் தான் கூகுள் தனது பாலிசியை திருத்தியுள்ளது.
பெர்சனல் லோன் ஆப்கள் தொடர்பான கூகுள் பாலிசியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த புதிய மாற்றம் இந்தியா மட்டுமின்றி, கென்யா (Kenya), நைஜீரியா (Nigeria), பிலிப்பைன்ஸ் (Philippines) மற்றும் இந்தோனேசியா (Indonesia) உள்ளிட்ட சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. அறியாதோர்களுக்கு இத்தகைய "பெர்சனல் லோன் ஆப் டார்ச்சர்" நிகழ்வுகள் இந்தியாவிலும், கென்யாவிலும் தான் பரவலாக பதிவாகியுள்ளன.
முன்னதாக கூகுள் நிறுவனம் உரிமம் பெறாத லோன் ஆப்களை (Unlicensed loan apps) பிளே ஸ்டோரில் இருந்து தடை செய்வதற்கான விதிகளையும் அமல்படுத்தி இருந்தது. மேலும் பாகிஸ்தானில், கடன் கொடுப்பதற்கான திறன்கள் உள்ளது என்பதை உறுதி செய்வதற்காக, பெர்சனல் லோன் ஆப்களின் உரிம ஆவணங்கள் (Licensing documentation) சமர்ப்பிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications