Home
News

ஜிமெயில் புது ரூல்ஸ்.. ஏப்ரல் முதல் அமல்.. 5000 மெயிலுக்கு வெச்ச செக்.. என்னென்ன மாறும்?

கூகுள் (Google) நிறுவனத்தின் புதிய பாலிசியின் கீழ் ஜிமெயிலுக்கு (Gmail) புதிய கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன. வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வர இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் மூலம் மொத்தமாக 5,000 இமெயில்களுக்கு செக் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ஜிமெயில் அக்கவுண்ட்டை பற்றி யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. யூடியூப் (YouTube), கூகுள் குரோம் (Google Chrome), கூகுள் மேப் (Google Maps) போன்ற கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்வில் இருந்து பிரிக்க முடியாத ஆப்கள் மட்டுமல்லாமல், ஆதார், பேன் கார்டு, பேங்க் அக்கவுண்ட் போன்றவற்றுக்கும் ஜிமெயில் முக்கியமாக தேவைப்படுகிறது.

ஜிமெயில் புது ரூல்ஸ்.. ஏப்ரல் முதல் அமல்.. 5000 மெயிலுக்கு வெச்ச செக்!

இதனால், ஜிமெயில் யூசர்களின் (Gmail Users) எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் கூகுள் நிறுவனத்தால் விதிக்கப்படுகின்றன. அப்படி ஜிமெயில் யூசர்களுக்கு பல வருடங்களாக பெரும் தலைவலியாக இருந்த ஸ்பேம் இமெயிலுக்கு (Spam Email) புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த கட்டுப்பாடுகள் யாருக்கு? அதனால் ஜிமெயிலில் என்னென்ன மாறப் போகிறது? போன்றவற்றை இப்போது தெரிந்து கொள்வோம். இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்து ஜிமெயில் யூசர்களுக்கும் பொருந்தாது. ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5,000 இமெயில்களை அனுப்பும் நபர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும்.

இந்த மொத்த அனுப்புநர்கள் (Bulk Senders) அவர்களிடமிருந்து இமெயில்களை பெற விரும்பும் யூசர்களுக்கு மட்டுமே அவற்றை அனுப்ப வேண்டும். அப்படி இல்லை என்றால், அந்த இமெயில்கள் தானகவே நிராகரிக்கப்பட்டுவிடும். இதனால், தனிப்பட்ட யூசர்களுக்கு தேவையில்லாமல், வரும் ஸ்பேம் இமெயில்கள் படிப்படியாக குறைந்து விடும்.

முன்னதாக, ஸ்பேம் இமெயில்கள் மீதான புகார்களின் அடிப்படையில் மட்டுமே, கூகுள் நிறுவனம் அவற்றின் மீது நடவடிக்கையை எடுத்து வந்தது. ஆனால், இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் யூசர்கள் புகார் அளிக்கவில்லை என்றாலும், ஸ்பேம் இமெயில்கள் தானாகவே நிராகரிக்கப்படும். ஆகவே, உங்களது ஜிமெயிலுக்கு வரும் ஸ்பேம் இமெயில்களை பற்றிய கவலையே, வரும் ஏப்ரல் மாதத்தில் இருக்கு இருக்காது.

ஜிமெயில் புது ரூல்ஸ்.. ஏப்ரல் முதல் அமல்.. 5000 மெயிலுக்கு வெச்ச செக்!

இதுமட்டுமல்லாமல், வணிக மற்றும் விளம்பரங்களுக்காக இமெயில்களை அனுப்புவோர்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜூன் மாதத்தில் இருந்து அவர்களுக்கு அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் அனுப்பும், இமெயில்களில் ஒன்-கிளிக் அன்சப்ஸ்கிரைப் பட்டன் (One-click Unsubscribe Button) இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பட்டன் இமெயிலின் பாடி (Body) பக்கத்தில் யூசர்களுக்கு நன்றாக தெரியும்படி இடம்பெற வேண்டும். இந்த பட்டனை யூசர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அந்த அனுப்பநரிடம் இருந்து வரும் இமெயில்களை விரும்பவில்லை என்றால், அன்சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம். அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த ஸ்பேம் இமெயில்களும் யூசர்களுக்கு வராது.

இப்படி பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் 2024ஆம் ஆண்டில் வர இருக்கின்றன. கூகுளின் இந்த ஜிமெயில் சேவையை 180 கோடிக்கும் அதிகமான யூசர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால், அதுதொடர்பான கட்டுப்பாடுகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்வதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற செய்திகளுக்காக கிஸ்பாட் தளத்தை பின் தொடருங்கள்.

Best Mobiles in India

English summary
Google New Guidelines For Bulk Senders To Reduce Spam Emails in Gmail Inbox Starting From April 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X