Home
News

English டீச்சர் ஆக மாறிய Google.. ஆண்ட்ராய்டு போனின் செட்டிங்ஸ்-க்கு வரும் Speaking Practice அம்சம்..

கூகுள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் ஆங்கில பேசும் திறனை வளர்க்க கூகுள் 'Speaking Practice' என்ற புதிய அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது கூகுள் .

அதாவது கூகுள் சர்ச் (Google Search) ஆனது உங்களுடைய ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தப் புதிதாக Speaking Practice அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஒரு கூகுள் சர்ச் லேப்ஸ்-இன் திட்டம் ஆகும். தற்போது, அர்ஜென்டினா, கொலம்பியா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இந்த புதிய அம்சம் வழங்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆண்ட்ராய்டு போனின் செட்டிங்ஸ்-க்கு வரும் Speaking Practice அம்சம்..

ஏஐ (AI) மற்றும் language learning exercises மூலம் இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த முடியும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் மூலம் அன்றாட சூழ்நிலைகளில் புதிய சொற்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

கூகுள் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதியை ஓபன் செய்யும் போது முதலில் உங்களிடம் கேள்வி கேட்கும். அதன்பின்பு அந்த வசதியில் உள்ள ப்ரீ-டிவைன்ட் வார்த்தைகள்(predefined set of words) மூலம் நீங்கள் பதில் அளித்து அந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என்ற கூறப்படுகிறது. குறிப்பாக உங்களது ஆங்கில திறனை வளர்த்துக் கொள்ள இது சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது. அதேபோல் இது கூகுள் சர்ச் பக்கத்தின் டாப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டு போனின் செட்டிங்ஸ்-க்கு வரும் Speaking Practice அம்சம்..

மேலும் இந்த New Speaking Practice அம்சத்தைப் பயன்படுத்த உங்களது போனில் கூகுள் ஆப் ஒபன் செய்து, வலதுபுறத்தில் இருக்கும் லேப்ஸ் ஐகான் கிளிக் செய்தால் போதும் இந்த அம்சம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய கூகுள் அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் சில வாரங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு பைண்ட் மை டிவைஸ் (FIND MY DEVICE)என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. அதாவது கூகுள் அறிமுகம் செய்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிதில் கண்டறிய முடியும்.

ஆண்ட்ராய்டு போனின் செட்டிங்ஸ்-க்கு வரும் Speaking Practice அம்சம்..

குறிப்பாக போன்கள், ஹெட்போன்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க இந்த அம்சம் பயன்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் இந்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் முதல் கட்டமாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள பயனர்கள் தற்போது இந்த அம்சத்தைப் பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த புதிய அம்சம் இந்தியாவில் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் இந்த பைண்ட் மை டிவைஸ் அம்சம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பைண்ட் மை டிவைஸ் அம்சம் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களின் காணாமல் போன சாதனங்களை எளிமையாகக் கண்டறிய முடியும். குறிப்பாக ஆண்ட்ராய்டு சாதனம் ஆஃப்லைனில் இருந்தாலும் கூட இந்த அம்சம் சீராக இயங்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது ஆப்பிள் ஃபைண்ட் மை டிவைஸ் போன்றே, கூகுளின் ஃபைண்ட் மை டிவைஸ் ப்ளூடூத் சிக்னல்களை கொண்டு காணாமல் போன சாதனங்களைக் கண்டறியும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இதன் மூலம் அருகாமையில் உள்ள ஆண்ட்ராய்டு சாதனங்களில் இண்டர்நெட் இணைப்பு இல்லை என்றாலும் கூட கண்டறிய முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Google new feature will help improve English speaking, here is how
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X