Smart TV வைத்து இருப்பவர்கள் தலையில் குண்டை போட்ட Google..1 வருஷத்துக்கு ஒன்னும் இல்லாம போக போகுது!
உங்களுடைய வீட்டில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (Android Smart TV) இருந்தால், அதாவது கூகுள் ஸ்மார்ட் டிவி (Google Smart TV) இருந்தால்.. கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த முக்கிய மாற்றம் உங்களுக்கானது தான். அது என்ன மாற்றம்? எதற்காக 1 வருடத்திற்கு, அதாவது 2026 ஆம் ஆண்டு வரை எதுவும் இல்லாமல் போக போகிறது? இதோ விவரங்கள்:
உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்குவது போல புதிய ஸ்மார்ட் டிவிகளில் முதலீடு செய்வதில்லை என்பதை கூகுள் நிறுவனம் உணர்ந்தன் விளைவாக, இந்நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு டிவிகளில் சாஃப்டவேர்களை அப்கிரேட் செய்யும் முறையை (Software Upgrade on Android TV) மாற்றுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை (New Android Versions) வெளியிட வேண்டிய அவசியமானது கடினமான மற்றும் விலையுயர்ந்த பணியாக உள்ளதால், கூகுள் நிறுவனமானது தனது ஸ்மார்ட் டிவிகளுக்கு பை-இயர்லி ஆண்ட்ராய்டு அப்டேட்களை (Bi-yearly Android updates) வழங்க திட்டமிட்டுள்ளது. அதாவது 2 ஆண்டுகளுக்கு 1 முறை ஆண்ட்ராய்டு அப்டேட்களை (1 Update for 2 Years) வழங்க உள்ளது.
கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த புதிய மாற்றங்களின் காரணமாக, ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி (கூகுள் ஸ்மார்ட் டிவி) வைத்து இருக்கும் பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் (Android 15 Update) வராது. இதோடு 2026 ஆம் ஆண்டு தான் உங்களுக்கு ஸ்மார்ட் டிவிக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், அப்போதும் ஆண்ட்ராய்டு 15 வெர்ஷன் வராது, நேரடியாக ஆண்ட்ராய்டு 16 வெர்ஷன் (Android 16 Version) வரும்.
ஸ்மார்ட் டிவிகளுக்கு ரெகுலர் ஆக ஆண்ட்ராய்டு அப்டேட் வரவில்லை என்றால் என்னவாகும்? உண்மையில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்ட்ராய்டு அப்டேட் வருவது தேவைதானா? சந்தையில் உள்ள பெரும்பாலான ஆண்ட்ராய்டு டிவிகள் தத்தம் பிராண்டுகளிலிருந்து மெதுவான முறையிலேயே அப்டேட்களையே பெறுகின்றன; ஏனென்றால் ஸ்மார்ட் டிவிகள் ஆனது ஹேக்கிங் அல்லது எளிதாக திருடப்படும் (Hacked or Stolen) அபாயத்தில் இல்லை!
மேலும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கும் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவது போல, புதிய ஸ்மார்ட் டிவிகளை வாங்குவது இல்லை. ஸ்மார்ட் டிவிக்ள் அந்த பெரும்பாலும் நீண்ட கால முதலீடுகளாகவே உள்ளன. பெரும்பாலான மக்கள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் 1 ஸ்மார்ட் டிவியை பயன்படுத்துகிறார்கள்!
ஒரு ஸ்மார்ட் டிவி பிராண்ட் ஆனது அதன் டிவிகளுக்கு 3 - 4 ஆண்ட்ராய்டு அப்டேட்களை வழங்க வேண்டும் என்றால், மேம்பட்ட அம்சங்களுடன் (Advanced features) புதிய மாடல்களை உருவாக்கினால், "தேவை இல்லாத ஆணிகளை புடுங்குவதற்கு சமம்". ஆக ஸ்மார்ட் டிவிகளுக்கு ஏற்படக்கூடிய ஏதேனும் அச்சுறுத்தலை கையாளும் வகையில், குறைந்தபட்சம் முக்கியமான செக்யூரிட்டி அப்டேட்களை (Critical security updates) தவறாமல் வழங்கினாலே போதும்.
எனவே, மிகவும் பழைய ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் (Very Old Android Updates) இயங்கும் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை நீங்கள் பயன்படுத்தாத வரையிலாக உங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை; பழைய வெர்ஷனை கொண்ட ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அப்டேட் அவசியம். மற்ற டிவிகளுக்கு இருப்பதே போதும், 2026 ஆம் ஆண்டு வரையிலாக ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கவில்லை என்றால், பரவாயில்லை; எந்த சிக்கலும் வராது!


Click it and Unblock the Notifications