கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Nearby Share அம்சம்.! என்னென்ன நன்மைகள்.!

|

கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் புதியவசதிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதன்படி இந்நிறுவனம் தனது ஏர் டிராப் (AirDrop) போன்ற மாற்றான 'Nearby Share' அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Nearby Share அம்சம்.!

குறிப்பாக ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு இடையில் ஆவணங்கள், படங்கள்,இணைப்புகள் மற்றும் பிற உள்ளடக்கங்களைப் பகிர்வது இனி சற்று எளிதாக இருக்கும். ஆண்ட்ராய்டு 6 மற்றும் அற்குகு மேல் இயங்கும் எந்தவொரு சாதனத்திற்கும் இடையே நேரடி பகிர்வுக்கு உதவும் "Nearby Share" என்ற புதிய Android அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்கிறது.

தற்சமயம் Nearby Share ஏற்கனவே சில பிக்சல் மற்றும் சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது, மேலும் இது அடுத்த சில வாரங்களில் பிற சாதனங்களில் வரும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Nearby Share அம்சம்.!

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் Nearby Share ஐபோனுக்கான Apple's AirDrop அம்சத்தைப் போலவே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பகிர்வு மெனுவில் Nearby Share பொத்தானைத் தேர்ந்தெடுத்து அருகில் இருக்கும் தொலைபேசி தோன்றும் வரை காத்திருக்க வேண்டும். மேலும் நீங்கள் பகிரும் எந்த விஷயமும் உங்கள் பரிமாற்ற முறை மூலம் நேரடியாக மற்ற தொலைபேசியில் அனுப்பப்படும்.

மேலும் ஏர்டிராப்பை போன்று Nearby Share-க்கு நீங்கள் விரும்பும் தெரிவுநிலையை வெவ்வேறு நிலை தொடர்புகளுக்கு அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு அநாமதேயமாக கோப்புகளை அனுப்பவும் பெறவும்" கூட முடியும் என்று கூகுள் நிறுவனம் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த Nearby Share ஆனது கோப்புகளை மாற்றுவதற்கு தொலைபேசியின் புளூடூத், புளூடூத் லோ எனர்ஜி (BLE), வெப்RTC அல்லது வைஃபை போன்றவற்றை பயன்படுத்துகிறது. மேலும் இது ஆஃப்லைன் பயன்முறையிலும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Nearby Share அம்சம்.!

Nearby Share ஆண்ட்ராய்டு சாதனங்களில் செயல்படும், பின்பு இது வரவிருக்கும் நாட்களில் Chromebooks உடன் வேலை செய்யும், ஆனால் இது iOS சாதனங்கள், மேக்ஸ்கள் அல்லது விண்டோஸ் இயந்திரங்களுடன் பகிர முடியாது என்பது குறிப்பிடத்க்கது. மேலும் அவற்றில் ஏதேனும் ஆதரவு வருகிறதா என்று கேட்கப்பட்டதற்கு, கூகுள் செய்தித் தொடர்பாளர் எதிர்காலத்தில் இந்த அம்சத்தை கூடுதல் தளங்களுக்கு விரிவாக்க முயற்சிக்கும் என்று கூறியுள்ளார்.

2011-ம் ஆண்டில் ஐபோன் மற்றும் மேக்கில் ஏர் டிராப்பை அறிமுகம் செய்தது ஆப்பிள் நிறுவனம். ஆண்ட்ராய்டு கோப்பு பகிர்வுக்கு பல்வேறு செயலிகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் ஏர் டிராப்பின் எளிமை மற்றும் வசதிக்கு அருகில் எதுவும் எங்கும் வரவில்லை. மேலும் அந்த தீர்வுகள் எதுவும் சில ஆண்ட்ராய்டு உற்பத்தியாளர்களால் உலகளவில் ஏற்க்கப்பட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Nearby Share Tool alternative for Shareit: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X