Home
News

போய் வா நண்பா.. ChatGPT க்கு டாட்டா காட்டிய Google.. AI இமேஜ் விஷயத்தில் இடியை இறக்கிய சுந்தர் பிச்சை!

சுந்தர் பிச்சை (Sundar Pichai) தலைமையிலான கூகுள் (Google) நிறுவனம் ஆனது ஏஐ (AI) துறையில் அதன் முக்கிய போட்டியாளர் ஆன ஓப்பன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் சாட்ஜிபிடி-க்கு (ChatGPT) கடும் நெருக்கடிகளை கொடுக்கும் படியான ஒரு தரமான வேலையை செய்து உள்ளது.

கூகுள் (Google) நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதன் நானோ பனானா ஏஐ இமேஜ் ஜெனரேட்டரை வெளியிட்டது. இது ஜெமினி 2.5 ஃப்ளாஷ் இமேஜ் ஏஐ மாடல் என்றும் அழைக்கப்படுகிறது. கூகுளின் இந்த புதிய டூல் - வேகமான இமேஜ் ஜெனரேஷன், மேம்படுத்தப்பட்ட எலிமெண்ட்-பேஸ்டு இமேஜ் எடிட்டிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேரக்டர் கன்சிஸ்டென் சிதிறன்களை கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

போய் வா நண்பா.. ChatGPT க்கு டாட்டா காட்டிய Google!

பின்னர், நவம்பர் 2025 இல், கூகுள் நிறுவனம் - 4கே ரெசல்யூஷன் இமேஜ்களை உருவாக்கும் திறன் கொண்ட ஜெமினி 3 ப்ரோ-பவர்டு நானோ பனானா ப்ரோவை வெளியிட தொடங்கியது. இதை - அதிநவீன (SOTA) இமேஜ் ஜெனரேஷன் மற்றும் எடிட்டிங் மாடல் என்று கூகுள் கூறுகிறது. இதற்கிடையில் கூகுளின் புதிய ஏஐ இமேஜ் ஜெனெரேசஹன் டூல் ஆக நானோ பனானா 2 (Nano Banana 2) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது நானா பனானா ப்ரோ மாடலின் அதே தரத்தை, இன்னும் வேகமான முறையில் செய்கிறது.

இதுகுறித்த அறிவிப்பில் - கூகுள் நிறுவனமானது லேட்டஸ்ட் ஜெமினி 3.1 ஃப்ளாஷ் இமேஜ் ஏஐ மாடல் தான் நானோ பனானா 2 என்று அழைக்கப்படுகிறது என்பதையும் இதை பல வகையான கூகுள் தயாரிப்புகள் மூலம் முயற்சி செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் கூகுளின் கூற்றுப்படி - நானோ பனானா 2 ஆனது நானோ பனானா ப்ரோவை ரீப்ளேஸ் (Replace) செய்யும்.

நானோ பனானா 2 ஏஐ இமேஜ் எடிட்டிங் மற்றும் ஜெனெரேட்டிங் டூல் ஆனது இந்தியா உட்பட 141 புதிய நாடுகளிலும், கூகுள் ஆப், மொபைல் ப்ரவுஸர்கள் மற்றும் பிசி ப்ரவுஸர்கள் வழியாக (கூகுள் சேர்ச்சில் உள்ள ஏஐ மோட் மற்றும் கூகுள் லென்ஸ் வழியாக) 8 புதிய மொழிகளில் கிடைக்கிறது என்பதையும் கூகுள் உறுதிப்படுத்தியுள்ளது

மேலும் மக்கள் ஏஐ ஸ்டுடியோ, ஜெமினி ஏபிஐ மற்றும் வெர்டெக்ஸ் ஏஐ ஆகியவற்றில் முன்னோட்டமாக நானோ பனானா 2 மாடலை அணுகலாம். இது இப்போது கூகுள் லேப்ஸின் உயர் நம்பகத்தன்மை கொண்ட வீடியோ ஜெனெரேட்டிங் டூல் ஆன ஃப்ளோவில் டீபால்ட் இமேஜ் ஜெனரேஷன் மாடலாக உள்ளது. மேலும் இது அனைத்து ஃப்ளோ பயனர்களுக்கும் ஜீரோ கிரெடிட்களில் கிடைக்கும்.

இறுதியாக, நானோ பனானா 2 ஆனது கூகுள் ஆட்ஸ்களிலும் கிடைக்கிறது. இதன் கீழ் பயனர்களால் பிரச்சாரங்கள் மற்றும் பதாகைகளை உருவாக்க முடியும் என்றும், விளம்பரங்களுக்கான பரிந்துரைகளை வழங்க முடியும் என்றும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் கூறுகிறது.

இதன் திறன்கள் மற்றும் மேம்பாடுகளை பற்றி பேசுகையில், நானோ பனானா 2 ஆனது "ஜெமினியின் மேம்பட்ட அறிவுத் தளத்தை" பயன்படுத்துகிறது என்றும், இணைய தேடலில் இருந்து நிகழ்நேரத் தகவல்களையும், படங்களையும் பயன்படுத்த முடியும் என்றும் கூகுள் கூறுகிறது. இது அதிக விவரங்களுடன் கோடொய்ய இன்போ கிராபிக்ஸ், மேப்ஸ் மற்றும் டேட்டா விஷூவலைசேஷன்களை உருவாக்கவும் அனுமதிக்கும்.

எல்லாவற்றையும் விட முக்கியமான நானோ பனானா 2 ஆனது மார்க்கெட்டிங் பிரச்சாரங்கள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பலவற்றிற்காக "துல்லியமான" மற்றும் "தெளிவான" உரையை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது. இது பயனர்கள் ஒரு படத்தில் உள்ள உரையை மொழிபெயர்க்கவும், சூழ்நிலைப்படுத்தவும் அனுமதிக்கிறது.

மேலும் நானோ பனானா 2 ஆனது மேம்படுத்தப்பட்ட "அறிவுறுத்தல் பின்தொடர்தல்" (instruction following) திறன்களுடன் வருகிறது. இது மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு திறமையாக பதில் சொல்ல முடியும், அதே நேரத்தில் பயனர் தூண்டுதல்களில் உள்ள நுணுக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும். நானோ பனானா ப்ரோ டூலை போலவே, நானோ பனானா 2 மாடலாலும் 4கே ரெசஸ்யூஷன் படங்களை உருவாக்க முடியும், அதே நேரத்தில் துடிப்பான லைட்ஸ், ரிச் ஆன அமைப்பு மற்றும் கூஷார்ப் ஆன விவரங்களையும் ஒருங்கிணைக்க முடியும் என்று கூகுள் கூறுகிறது. ஒட்டுமொத்தமாகா ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி-க்கு சரியான நெருக்கடிகளை கொடுக்கிறது.

Best Mobiles in India

English summary
Google Nano Banana 2 New AI Image Generation Tool Launched All You Need to Know
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X